படகில் பள்ளிக்குச் சென்ற மாணவி – மக்கள் மனங்களை வென்ற மகள்

the-student-who-went-to-school-on-the-boat-the- daughter-who-won-the-hearts-of-the-people
[speaker]

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சந்தியா சஹானி, தானே படகை ஓட்டி பள்ளிக்குச் சென்று வரும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாணவியின் தைரியத்தையும் உறுதியையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோரக்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் படிப்பதற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால், தானே படகை ஓட்டிச் சென்று பள்ளியில் படித்துவிட்டு படகிலேயே வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்தது :

இது குறித்து சந்தியா, “ஸ்மார்ட் போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. பள்ளி திறந்ததும் எங்கள் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. அப்போதுதான் படகில் பள்ளிக்குச் செல்வது என்று முடிவு செய்தேன்” என்றார்.

the-student-who-went-to-school-on-the-boat-the- daughter-who-won-the-hearts-of-the-people

சந்தியா படகில் பள்ளிக்குச் செல்லும் வீடியோவை செய்தி நிறுவனம் ஒன்று ட்விட்டரில் பகிர்ந்தது. இந்த வீடியோவைப் பார்த்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். பள்ளியின் நிலைமையும் மோசமாக இருப்பதாகப் பதிவிட்டுள்ள பலர், அந்தப் பெண் வீட்டிலிருந்தே

படிப்பதற்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.படிப்பில் சந்தியா காட்டிய ஆர்வத்தையும் பலரும் பாராட்டியுள்ளனர். அந்த மாணவிக்கு வணக்கம் என்று பலர் பதிவிட்டிருந்தனர்.

-எம்.மோகன்

Related Posts
puducherry-student-travels-35000-km-to-create-guinness
Read More

35,583 கிமீ; 23 மாநிலங்கள்; 43 ரயில்கள்; 34 பேருந்துகள்; 8 விமானங்கள் – அடேயப்பா பயணம்

பயணம் பலவகைப்படும் என்பார்கள். அதில் ஒருவகை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திப் பயணம் செய்வது. பெரும்பாலானவர்கள் தங்களின் செளகரியத்திற்கு ஏதுவாக கார்களில் பயணம் செய்வார்கள். சிலர்…
young-man-holding-2-diplomas-becomes-clay-pot-seller-during-lockdown
Read More

படித்தது ஹோட்டல் மனேஜ்மெண்ட்.. விற்பதோ பானை! – வேலை இழப்பிலும் தளராத இளைஞர்

கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அனைத்து விதமான தொழில்களும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டன. படிப்பிற்கு ஏற்ப உயர் பொறுப்பில் உள்ளவர்கள்…
telanganas-young-innovator-bags-bal-puraskar-Hemesh-hadalavada
Read More

முதுமையில் வரும் ஞாபக மறதிக்கு நல்ல கருவி! – பால புரஸ்கார் விருது பெற்ற சிறுவன்

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி நோயை எச்சரிக்கும் பொருட்டு கையில் கட்டும் பட்டையைக் கண்டுபிடித்த தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது ஹேமேஸ் சதலாவாடா 2021…
made-in-india-innovation-engineer-multi-harvester-stone-potato-onion
Read More

நிலத்தைச் சமப்படுத்திச் சீரமைக்கும் அறுவடை இயந்திரம் : தெலங்கானா இளைஞரின் புதுமையான கண்டுபிடிப்பு

தரிசு நிலத்தைச் சமன்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற பண்பட்ட நிலமாக மாற்றும் குறைந்த விலையிலான இயந்திரத்தை தெலங்கானாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தீபக் ரெட்டி கண்டுபிடித்துள்ளார்.…
Total
8
Share