6 வயதில் மைக்ரோசாஃப்ட் அதிகாரியான ஆந்திர சிறுவன்

andhra-boy-who-is-a-microsoft-executive-at-the- age-of-6
[speaker]

பல ஆண்டுகள் பணியாற்றினால்தான் அதிகாரி என்ற உயரிய பொறுப்பை அடைய முடியும். ஆனால், ஆறு வயதில் உலகின் மிகப் பெரிய நிறுவனம் எனப் போற்றப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அதிகாரி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் ஒரு சிறுவன்.

அவரது நண்பர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி சாதனையாளராக மாறியிருக்கிறார் அந்தச் சிறுவன்.

இரண்டாம் வகுப்பு சிறுவன் :

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சகித் ஸ்ரீராம் அஞ்சனா. இவர்களுக்கு ஆறு வயதில் ராஜா அனிருத் ஸ்ரீராம் என்ற மகன் இருக்கிறார். தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு பயின்றுவருகிறார். கணினி பயன்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

andhra-boy-who-is-a-microsoft-executive-at-the- age-of-6

எனவே, கணினி செயல்பாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்திவந்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பயன்பாடு குறித்து கற்று வந்தார்.

இன்று அதன் பயனாக குழந்தை வயதிலேயே அதிகாரியாக மாறியுள்ளார் அனிருத். கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 1000 மதிப்பெண்களுக்கு 950 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார் சிறுவன் அனிருத். ஆகவே, மைக்ரோசாஃப்ட் தனது அலுவலக ஸ்பெஷலிஸ்ட் என்று அங்கீகாரம் வழங்கி சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் :

இதற்கான தேர்வின் முதல் முயற்சியில் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது முயற்சியில் வெற்றி கண்டார் அந்தச் சிறுவன். அதுமட்டுமின்றி இந்தியாவின் இளம்வயது மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

andhra-boy-who-is-a-microsoft-executive-at-the- age-of-6

இதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சாதனையாக அறிவித்திருக்கிறது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சிறுவன் அனிருத் படைக்கும் இரண்டாவது சாதனை இது. அவர் கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்கெனவே தனது அபார நினைவாற்றம் மூலம் 160 விநாடிகளில் 100 கார்களை அடையாளம் கண்டு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறார்.

-கோ.கிருஷ்ணன்

Related Posts
9-year-old-youtube-millionaire-ryan-kaji-is-building-a-kids-media-empire
Read More

29.5 மில்லியன் டாலர் வருமானம்! – யூடியூபின் செல்வக் குழந்தை ரியான்

இந்திய அளவில் ஃபுட் மற்றும் பிராங்க் வீடியோக்களுக்கு பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இதைவிட பலமடங்கு கிட்ஸ் வீடியோக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. கிட்ஸ் தொடர்பான…
21-year-old-youtuber-is-explaining-indians-and-africans
Read More

ஆப்பிரிக்கர்கள் குறித்த அறியாமை; இந்தியர்கள் குறித்த பெருமை! – இரண்டையும் பேசும் யூடியூப் இளைஞர்!

இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பட்டப்படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் வருவது உண்டு. அதேபோல இந்தியாவிலிருந்தும் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பிற்காக சில நாடுகளுக்குச் செல்வது உண்டு. அந்தவகையில்…
friends-who-quit-their-well-paying-jobs-and-work-for-the-city
Read More

நல்ல சம்பளம் தந்த வேலையை உதறிவிட்டு ஊருக்கு உழைக்கும் நண்பர்கள்!

தங்களின் வாழ்க்கை முழுவதும் கனவுகளால் மட்டுமே நிரப்பி வைத்திருப்பவர்கள் ஒருவகை. காணும் கனவை நனவாக்கத் திட்டமிட்டு செயலில் இறங்கிச் சாதிப்பவர்கள் இன்னொரு வகை. அந்த…
spare-parts-shop-owner-becomes-beacon-of-hope
Read More

வீட்டு வாடகை தரமுடியாமல் தவித்த தினக்கூலிகள் – உதவிக்கரம் நீட்டிய இளைஞர்

பொது முடக்கத்தில் தவித்த மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கேரள இளைஞர் அர்ஷாத் ரஷீத். திருவனந்தபுரம் பள்ளித்தெருவில் செல்போன்…
Total
3
Share