பிளாஸ்டிக் பேக்கிங்கிற்கு மாற்று: மாதம் ரூ. 5 கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்

alternative-to-plastic-packaging-monthly-rs-5-crore-earning-youth
[speaker]

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்பு குறித்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த வைபவ் அனந்த், வேலையை ராஜினாமா செய்து விட்டு பிளாஸ்டிக் பேக்கிங்கிற்கு மாற்றாக மூங்கிலில் இருந்து பேக்கிங் பொருட்களை தயாரித்து வருகிறார்.

சுற்றுச்சூழல் பேக்கிங் பொருட்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் ஆமையின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக்கை கடல் உயிரியலாளர் ஒருவர் அகற்றும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது நினைவிருக்கலாம். இந்த வீடியோவைப் பார்த்து வைபவ் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து கார்பரேட் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழலுக்கேற்ற பேக்கிங் பொருட்களைத் தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் பாம்ப்ரூ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

alternative-to-plastic-packaging-monthly-rs-5-crore-earning-youth

தற்போது அமேசான், நைகா, 1 எம்ஜி, புமா, பிக் பேஸ்கட், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பாம்ப்ரூ நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இது குறித்து பாம்ப்ரூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வைபவ், “ஆன்லைன் வணிக நிறுவனங்களும் அதிக அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றன. அதனால் எங்கள் இலக்கு இந்த நிறுவனங்களாக இருக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து

55 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகள் பேக்கிங் துறையிலிருந்து வருகின்றன. உலக அளவில் 1 கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் கொட்டப்படுகின்றன.

மூங்கில் பேக்கிங் பொருட்கள்

சுற்றுச்சூழலுக்கேற்ற பேக்கிங் பொருட்களை தயாரிக்க தனித்துவமான இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பேக்கிங் பொருட்களை தயாரிக்க மூங்கிலைப் பயன்படுத்துகிறோம்.

சணலைப் பயன்படுத்த அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்தாலும், சணலில் இருந்தும் பேக்கிங் பொருட்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

alternative-to-plastic-packaging-monthly-rs-5-crore-earning-youth

அமேசான் மற்றும் நைகாவுக்கு பேக்கிங் பொருட்களை அனுப்புவதன் மூலம் ரூ, 2 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.

இயற்கை பேக்கிங் பொருட்கள் விலை குறைவானதாகும். லண்டன் உள்ளிட்ட பல நாடுகளின் பெரிய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

பிளாஸ்டிக் கழிவுகள் தடுப்பு

இதன்மூலம் மாதந்தோறும் ரூ.5 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. சுற்றுச்சூழலுக்கேற்ற பேக்கிங் பொருட்களை தயாரிப்பதன் மூலம் 10 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்திருக்கிறோம்.

ஒரே மாதத்தில் 2 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பேக்கிங் கழிவுகளைத் தடுத்திருக்கிறோம்” என்றார்.

-எம்.மோகன்

நன்றி: ‘திபெட்டர் இந்தியா’.

Related Posts
rajasthan-teenage-girl-chesta-gulecha-village-lockdown-khicha-amreli-garbage-disposal-waste
Read More

வார விடுமுறையில் கிராமத்தை சுத்தப்படுத்தும் கல்லூரி மாணவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிஜான் (Khichan) என்ற கிராமத்தில் பொதுமுடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாகச் சாலைகள் அசுத்தமாகக் காணப்பட்டன. சாக்கடைகள் அடைக்கப்பட்டு துர்நாற்றம்…
young-man-making-a-bike-with-a-maruti-800- engine
Read More

மாருதி 800 இஞ்சினில் பைக் தயாரித்த இளைஞர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். அவ்வாறு ஆட்டோமொபைல் துறையில் உற்சாகம் கொண்ட இளைஞர் தனது கண்டுபிடிப்பு மூலம் இந்தியளவில் பிரபலமாகிவருகிறார். அவர் மருதி…
public-school-teacher-who-turned-rural-students-into-english-poets
Read More

கிராமப்புற மாணவர்களை ஆங்கில கவிஞனாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்

கவிதை எழுதும் ஆற்றலை வளர்க்கும் ப்ளூமிங் பேர்ட்ஸ் என்ற புத்தகத்தை தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். கவிதை…
titliyan-giving-wings-to-poor-girls-education-dreams-in-ranchi
Read More

ஏழைச் சிறுமிகளைப் படிக்க வைக்கும் வளர்ப்புத் தந்தைகள் : ராஞ்சி இளைஞர்களின் வெற்றிப் பயணம்

பெற்றோராகவே மாறி அந்தக் குழந்தைகளை வாழ்க்கையில் உச்சிக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ராஞ்சி இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் அடுள்…
Total
0
Share