பொதுமக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட 200 இளைஞர்கள்

200-young-people-who-have-dedicated- themselves-to-the-public
[speaker]

கடந்த 6 மாதங்களாக ரத்ததானம் செய்தும், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உணவுகள் வழங்கியும் ஆயிரக்கணக்கானோர் மனதில் நிறைந்துள்ளார்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 200 இளைஞர்கள்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் யூனிட்கள் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், 1 கோடியே 10 லட்சம் ரத்த யூனிட்கள் மட்டுமே கையிருப்பில் இருக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

சஹ்யோக் :

அந்தக் காலகட்டத்தில் தன்னார்வ அமைப்பினரின் ரத்ததானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலரும் ரத்ததானம் செய்யவில்லை. பல இடங்களில் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் பிளாஸ்மா தட்டுப்பாடும் ஏற்பட்டது.

200-young-people-who-have-dedicated- themselves-to-the-public

இந்த இக்கட்டான சூழலில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சஹ்யோக் என்ற பெயரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, கடந்த 6 மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் இந்த இளைஞர் குழுவினர் நோயாளிகளைத் தேடிச் சென்று உதவி வருகின்றனர். இதற்காக சமூக ஊடகத்தில் தொடர்புகொண்டால் 24 நேரமும் பணியாற்றத் தயார் நிலையில் இந்தக் குழுவினர் இருக்கிறார்கள்.

5 குழுக்கள் :

இந்தக் குழுவைத் தொடங்கியவர்களின் ஒருவரான சுபம் சவுகான், “கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிதான் இந்தக் குழுவைத் தொடங்கினோம். அப்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்திலிருந்தது. அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்தாலும், சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவித்தனர்.

200-young-people-who-have-dedicated- themselves-to-the-public

யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் பல நோயாளிகள் தவித்தனர். அந்த சமயத்தில்தான் இந்தக் குழுவை உருவாக்கினோம். பல துறைகளில் உள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவினர்.

மக்களுக்குச் சேவையாற்ற படுக்கை பொறுப்பு குழு, பிளாஸ்மா பொறுப்புக் குழு, ஆக்சிஜன் பொறுப்புக் குழு, ரத்தம் பெற்றுத் தரும் குழு மற்றும் சரிபார்ப்பு குழு என 5 குழுக்களை அமைத்தோம். எனவே, எந்தக் குழப்பமும் இல்லாமல் வேலை வேகமாக நடைபெற்றது.

இலவசமாக ரத்ததானம் :

எங்கள் குழுவில் சுற்றியுள்ளோரிடமிருந்து ரத்ததானம் பெறுவதை முதல் பணியாகக் கொண்டோம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தத்தை இலவசமாகவே வழங்கினோம்.ஆக்சிஜன் கேட்டு மட்டும் தினம் 500 செல்போன் அழைப்புகள் வந்தன. இதுவரை

50 பேருக்கு மேல் ஆக்சிஜன் வழங்கியுள்ளோம். தனித்து வாழ்ந்த முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, அவர்களது உடலைத் தகனம் செய்திருக்கிறோம். இப்படி ஏராளமான கதைகள் இருக்கின்றன.

200-young-people-who-have-dedicated- themselves-to-the-public

இப்போது காஷ்மீர், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் எல்லாம் ட்விட்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் குழுவினர் தொடர்பில் இருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி, கவிஞர் குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட பலரும் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இப்போது ரத்ததானம் செய்ய விரும்புவோர் அவர்களாகவே அழைக்கிறார்கள், ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
librarian-yashoda-shenoy
Read More

வீட்டின் மொட்டை மாடியை இலவச நூலகமாக மாற்றிய பள்ளி மாணவி

கேரளாவில் உள்ள மட்டஞ்சேரி கோவிலுக்கு அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் 13 வயது பள்ளி மாணவி யசோதா ஷெனாய். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி…
iit-madras-researchers-develop-solar-powered-survey-craft-for-indian-ports
Read More

சூரியசக்தியில் இயங்கும் ஆளில்லா கணக்கெடுப்புக் கருவி : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

இந்தியத் துறைமுகங்களுக்காகச் சூரியசக்தியில் இயங்கும் ஆளில்லா கணக்கெடுப்புக் கருவியைச் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்புக் கருவி துறைமுகங்களிலும் கடலுக்குள்ளும் கணக்கெடுக்கும் பணியில்…
god-of-small-wheels
Read More

1,600 வகையான குட்டி கார்களை சேகரித்த ரகுநாத்ராவ்

புகழ்பெற்ற கார்களைப் போன்ற குட்டி கார்களை ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார் தீலிப் ரகுநாத்ராவ் சாவந். கர்நாடகாவின் பெல்காவைச் சேர்ந்த 63 வயது தீலிப் ரகுநாத்ராவ்…
warangal-man-has-a-fuel-free-commute-with-solar
Read More

9 ஆயிரம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் சைக்கிள்

எரிபொருளுக்கு விடை கொடுத்துவிட்டு, சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரி சைக்கிளை தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். வாராங்கல் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்…
Total
1
Share