மனித உடலைப் போன்று காட்சி தரும் பிரமாண்ட தவளைகள்

giant-frog-the-size-of-human-baby-leaves-solomon-islands
[speaker]

உலகின் ஏதாவது ஒரு பகுதியில் அதிசயம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. சாலமன் தீவில் உள்ள கிராமம் ஒன்றில் பெரிய தவளை கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தவளையை ஒரு சிறுவன் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதனைப் பார்க்கும்போது, ஒரு குழந்தையைக் கையில் வைத்திருப்பதைப் போலிருக்கிறது.

மனித உடலைப் போன்ற தோற்றம் கொண்டதாக இருப்பதைப் பார்த்து அதிசயித்த இப்பகுதியில் மர ஆலையின் உரிமையாளர் ஜிம்மி ஹுகோ, படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தவளை இனம் குறைந்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய தவளை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகவலைதளத்தில் பகிர்வு :

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரமாண்ட தவளை படத்தை சமூக வலைத்தளங்களில் நான் பகிர்ந்ததும், ஒரு சிலர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், தவளை குறித்து கருத்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

giant-frog-the-size-of-human-baby-leaves-solomon-islands
Photo By: Jimmy Hugo

இந்தப் படத்துக்கு மக்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்து நான் மிகவும் வியந்துபோனேன்” என்றார். காட்டுப்பகுதியில் இவரது ஆலை தொழிலாளர்கள் பன்றி வேட்டைக்குச் சென்றபோது, இந்த மிகப்பெரிய தவளை கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பகிர்ந்ததுமே, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. பலரும் இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

புஸ் சிக்கன் :

சாலமன் தீவுகள் மற்றும் பாப்புவா நியூ கினியா பகுதிகளில் இதுபோன்ற பெரிய தவளைகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்கு `புஸ் சிக்கன்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இந்தத் தவளையை வேட்டையாடும் உள்ளூர் மக்கள், இதன் இறைச்சியை விற்பனை செய்கிறார்கள்.

-எம்.மோகன்

Related Posts
russian-woman-who-swam-under-siberia-s-ice-may-have-broken-the-world-record
Read More

ஐஸ் ஏரியில் நீச்சலடித்த ரஷ்யப் பெண்! – உலக சாதனை

சைபீரியாவில் பனியால் உறைந்துபோன ஏரியில் நீந்தி ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான எக்கட்ரினா நெக்ராஸோவா (Yekaterina Nekrasova) உலக சாதனை படைத்துள்ளார். உறைந்துபோன பைக்கால்…
cyclist-sees-puppy-dumped-on-the-roadside
Read More

சைக்கிள் வீரர் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நாய்க்குட்டி

மனிதர்கள் வாழ்க்கை மட்டும் ஒரே நொடியில் மாறுவதில்லை… அது விலங்குகளுக்கும் பொருந்தும். இந்த மாத தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் பாரகுவாய் குடியரசைச் சேர்ந்த சைக்கிள்…
What-do-winners-do-before-making-a-decision
Read More

முடிவு எடுப்பதற்கு முன் வெற்றியாளர்கள் என்ன செய்கிறார்கள்? – சில டிப்ஸ்

ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் அவரவர் அன்றாட பணிகளைச் செய்வதற்காக எண்ணற்ற முடிவுகளை எடுப்பது வழக்கம். அதிகாலை நேரத்தில் விழிப்பதைத் தொடர்ந்து இரவு துயில்…
tales-of-the-tallest-men-in-the-world
Read More

உலகின் உயரமான மனிதர்கள்! – இவ்வளவு உயரம் வளர காரணம் என்ன?

உலக சாதனை படைப்பதற்காகவே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதில் மிகச்சிலரே பிறவியிலேயே உலக சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். சீனாவைச் சேர்ந்த பாவ் ஜி…
Total
16
Share