வயது முதிர்ந்த டயானா, மைக்கேல் ஜாக்சன் – ஓவியத்தில் வெளிப்படுத்திய கலைஞர்

an-adult-diana-michael-jackson-the-artist-expressed-in-the-painting
[speaker]

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ் என்பவர், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள்

இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தனது கற்பனையை தட்டி விட்டுள்ளார்.

தான் வரைந்த உருவங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

துருக்கி கலைஞர் அசத்தல்

இந்த பிரபலங்களுக்கு மரணம் நிகழ்ந்திருக்காவிட்டால், அவர்கள் இன்று எப்படித் தோற்றமளிப்பார்கள் என்ற கேள்வி இந்த படைப்புக்குப் பின்னால் உள்ளது.

இதுபற்றிய உங்களது பார்வைகள் மற்றும் விமர்சனங்கள், ஆலோசனைகளை வழங்குங்கள் என்றும் ஆல்பர் குறிப்பிட்டுள்ளார்.

வயதான மைக்கேல் ஜாக்சன்

இந்த ஓவியத்தில் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கறுப்பு, வெள்ளை நிறத்தில் தலை நிறைய முடியுடன், சிரித்தபடி காணப்படுகிறார்.

an-adult-diana-michael-jackson-the-artist-expressed-in-the-painting

அவரது உடலில் வயது முதிர்வுக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. தோல் சுருக்கம் விழுந்து காணப்படுகிறது.

தளர்வுடன் இளவரசி டயானா

இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்ற புகைப்படம் ஒன்றையும் அவர், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.

அதில், டயானா அதே மெலிந்த தேகம், வெண்ணிற தலை முடியுடன் காணப்பட்டாலும், சற்று வயது முதிர்வுக்கான தோல் சுருக்கங்களுடனும் அவர் காணப்படுகிறார்.

an-adult-diana-michael-jackson-the-artist-expressed-in-the-painting

இதுதவிர, ஹீத் லெட்ஜர், பால் வாக்கர், ஜான் லென்னான், எமி ஒயின்ஹவுஸ் மற்றும் பிரெட்டீ மெர்குரி உள்ளிட்ட சிலரது புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

-எம். மோகன்

Related Posts
the-goddess-statue-that-went-missing-40-years- ago-has-been-recovered-in-the-uk
Read More

40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அம்மன் சிலை இங்கிலாந்தில் மீட்பு

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டு சிலை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பண்டல்கந்த் என்ற கிராமத்தில் உள்ள லோகாரி கோயிலிலிருந்து 40 ஆண்டுகளுக்கு…
fruit-lover-shocked-to-discover-banana-the-size
Read More

இவ்வளவு பெரிய வாழைப்பழமா? : மகிழ்ச்சியில் துள்ளிய பெண்

முழங்கையில் பூவை அளப்பது போல், எல்லோரிடமும் தான் வாங்கிவந்த பெரிய வாழைப்பழத்தை அளந்து காட்டிக் கொண்டிருக்கிறார், 31 வயதான சாம் பால்மர் என்ற பெண்.…
bagh-preserves-50-years-of-dubai-history- photographer
Read More

50 வருட துபாய் வரலாற்றைப் பாதுகாக்கும் பாக். புகைப்படக் கலைஞர்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டிலிருந்து 8 வயதில் அரபு அமீரகத்திற்கு வந்த செளகத் அலி ரானாவின் அனுபவங்கள் அற்புதமானவை. துபாய் நகரில் ஒரு…
Total
1
Share