இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் – தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு

president-of-the-indian-olympic-association-athlete-p-t-usha-selected
[speaker]

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

தடகளத்தில் சாதித்தவர்

1979 முதல் 1998 வரையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தடகள விளையாட்டுகளில் பங்கேற்று சாதனைகளை படைத்தவர் பி.டி. உஷா.

president-of-the-indian-olympic-association-athlete-p-t-usha-selected

ஆசிய விளையாட்டில் 4 தங்கம் மற்றும் 7 வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.

வெற்றி வீராங்கனை

“நான் ஒருபோதும் ஒலிம்பியனாக விரும்பவில்லை. களத்தில் நான் படைத்த எனது சொந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் யாரையும் வெல்ல வேண்டும் என போட்டியிட்டதில்லை, இதுவே எனது வெற்றியின் ரகசியம்’’ என்கிறார் பி.டி. உஷா

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த அவர், போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஐஓசி தலைவரானார்

58 வயதாகும் பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 16ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அலங்கரிக்கும் முதல் பெண்மணி இவர்தான்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் பி.டி.உஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

president-of-the-indian-olympic-association-athlete-p-t-usha-selected

புதிய பொறுப்பின் மூலம் நாட்டிற்கு மீண்டும் பெருமை தேடித் தரும் முனைப்புடன் உள்ளார் பி.டி.உஷா

-எம். மோகன்

Related Posts
kerala-woman-jilumol-mariet-thomas-thodupuzha-drivers-license-learners-permit-car
Read More

`கால்கள்தான் எனக்கு கைகள்’ – கார் ஓட்ட உரிமைகோரி சட்டப் போராட்டம் நடத்திய பெண்

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஜிலுமோல் மரியத் தாமஸ். இவருக்கு 29 வயதாகிறது. இவர் பிறக்கும்போதே கை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்தவர். ஆனால், அவர்…
corona-now-the-state-level-wrestler-has-to-do-farming
Read More

விவசாயக் கூலிகளாக மாறிய தேசிய மல்யுத்த வீராங்கனைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மல்யுத்தப் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு போல் பயிற்சி…
iit-kharagpur-researcher-works-new-manufacturing-technology-extend-shelf-life-packaged-sugarcane-juice-without-chemicals
Read More

ரசாயனம் கலக்காத கரும்புச் சாறு தயாரிக்கும் எந்திரம்! – ஐஐடி மாணவி கண்டுபிடிப்பு

ரசாயனம் கலக்காத கரும்புச் சாறு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சி மாணவி சிரஸ்மிதா பனிக்கிரகி கண்டுபிடித்துள்ளார். விவசாயம் மற்றும் உணவு பொறியியல் படிப்பில்…
a-child-born-motionless-the-doctor-who-gave-life-to-god
Read More

அசைவற்று பிறந்த குழந்தை – கடவுளாக உயிர்கொடுத்த மருத்துவர்

உத்தரப்பிரதேசத்தில் பிறக்கும்போது அசைவற்றுக் கிடந்த குழந்தையை, போராடி உயிர்ப்பிக்க வைத்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மருத்துவ சேவையின் மகத்துவம் கடவுளுக்கு அடுத்த நிலையில்…
Total
1
Share