மலைவாழ் மக்களின் மனதில் இடம்பிடித்த மருத்துவர் – ஷில்பாவின் சிகிச்சையால் வெளியேறிய வைரஸ்

india-covid19-doctor-woman-inspiring-himachal-pradesh-quits-job-health-poor-village
[speaker]

பொதுவாக ஒருவர் மருத்துவம் படித்துவிட்டால் அவர் நகர்ப்புற பகுதியில்தான் பணியாற்ற விரும்புவார். ஆனால், ஒரு பெண் மருத்துவர், மலை வாழ் மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டார். அதனால் தாமே முன்வந்து மலைப் பகுதி கிராம மக்களுக்கு ஆற்றிய சேவையைப் பற்றி பார்ப்போம்.

india-covid19-doctor-woman-inspiring-himachal-pradesh-quits-job-health-poor-village

29 வயதான டாக்டர் ஷில்பா குமாரின் வாழ்க்கைப் பயணம் அவர் பிறந்த சத்தீஸ்கரில் உள்ள ஒரு நகரத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் தந்தை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரியாக இருந்ததால், அவர் இந்தியாவின் நகரம் முதல் கிராமப்புறம் வரையில் பல்வேறு பகுதிகளில் வசித்துள்ளார்.

டாக்டர் ஷில்பாவின் வாழ்க்கையில் இந்தப் பயணம் முக்கிய பங்காற்றியது. ஏனெனில் அவர் எப்போதும் நகர்ப்புறங்களுக்கு அப்பால் சென்று தனது மருத்துவ சேவைகளை ஏழைகளுக்கு வழங்க விரும்பினார்.

டாக்டர் ஷில்பா லூதியானாவின் தயானந்த் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். பிறகு அவர் கடந்த ஆண்டு, டெல்லியின் எல்என்ஜேபி மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது தன் நண்பர்களைப் பார்க்க இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிர் கிராமப்பகுதிக்குப் போனபோது அங்கு மலைவாழ் மக்கள் மருத்துவ வசதியில்லாமல் அவதியுறுவதைப் பார்த்து கண் கலங்கினார். அதனால் டெல்லியிலிருந்து அந்தக் கிராமப்புறத்தில் சேவைசெய்ய விரும்பினார்.

அப்போது சிம்லா நகர் நிர்வாகம் பொதுச் சுகாதார மையங்களுக்கான (பிஎச்சி) நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருவதாக அவர் அறிந்தார். அதனால் அங்கு வேலை செய்ய அவர் விண்ணப்பித்து ரச்சத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டார்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு டாக்டர் ஷில்பா குமாரின் சிகிச்சை முறைகள் அந்தக் கிராமவாசிகளைக் கவர்ந்தன. வழக்கமான சோதனைகள் மற்றும் சிறப்புச் சிகிச்சைகள் தேவைப்படும் நபர்கள் மீது அவர் கவனம் செலுத்தினார். இந்த நேரத்தில் அந்த மலைப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவியபோது அவர் ஆற்றிய பணி மிகச் சிறப்பானது.

india-covid19-doctor-woman-inspiring-himachal-pradesh-quits-job-health-poor-village

கொரோனா தொற்றுநோயை விரட்ட, அந்த மலைவாழ் மக்களுக்கு உதவ, மருத்துவர் ஷில்பா தனிப்பட்ட முறையில் ராக்காமில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நோயாளிகளின் அறிகுறிகளையும் காய்ச்சலையும் பரிசோதித்தார். அந்த மலைப்பகுதியில் உள்ள கரடு முரடான பாதையில், ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தனியாகச் சென்று கொரோனா பரிசோதனைகள் செய்தார். அந்தப் பகுதி மருத்துவமனையில் நர்ஸுகளோ, மருத்துவ ஊழியர்களோ கிடையாது. இதனால் அந்த மலைவாழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

-ராஜா மணி

Related Posts
aavaran-working-to-preserve-rajasthans-ancient-fabric-printing
Read More

`சாதனையல்ல… சரித்திரம்’ : ராஜஸ்தானில் 300 பேருக்கு வேலை கொடுத்த இளம்பெண்

ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த 300 பேருக்கு வேலை கொடுத்து சாதித்திருக்கிறார் ஆவாரன் நிறுவனத்தின் உரிமையாளர் அல்கா சர்மா. ஆடைகளுக்கு விதவிதமான வண்ணம் பூசும்…
rene-campbell-bodybuilding
Read More

“நான் ஒரு பெண் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது” – பாடிபில்டர் ரேன் கேம்பெல்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் உலக அளவில் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று விருதுகளைக் குவித்து வருகிறார். உடல் முழுவதும் டாட்டூக்களை குத்திக்கொண்டு, கட்டுமஸ்தான உடலுடன்…
quill-in-poetry-tiger-in-politics-nightingale-of-india-sarojini-naidu
Read More

கவிதையில் குயில்; அரசியலில் புலி! – இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு

முதலாம் உலகப்போர் தொடங்கியிருந்த நேரம். தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டன் வந்திருந்தார் மகாத்மா காந்தி. அவரைப் பற்றியும், அவரின் அகிம்சை தத்துவங்கள் பற்றியும், இந்திய விடுதலைக்கான அவரின்…
woman-who-is-single-handedly-trying-to-save-kolkatas-rabindra-sarovar-lake
Read More

192 ஏக்கர்; 11,000 மரங்கள்; – பெரிய ஏரியைக் காக்கப் போராடும் சுமித்தா!

நாளுக்கு நாள் நச்சுப்புகைகளின் கூடாரமாக மாறிவருகிறது நமது மாநகரங்கள். அவற்றிடமிருந்து நம்மைக் காப்பாற்ற ஒரு சில ஏரிகளும் மரங்களுமே மீதம் உள்ளன. கொல்கத்தா மாநகரில்…
Total
1
Share