இரண்டாவது முயற்சியில் ஐஏஎஸ் – அனுபமாவின் போராட்டம்

ias-officer-anupama-in-second-attempt-series-of-struggles
[speaker]

யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது முறை முயன்று வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனுபமா அஞ்சலியின் வாழ்க்கை இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். அதற்காக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியும் தியானமும் மிக அவசியம் :

அந்த வகையில், ஐஏஎஸ் அதிகாரி அனுபமாவின் கதை, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும்.இது குறித்து அனுபமா, “ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராவோர் சலிப்படைவது பொதுவான விஷயம்தான்.

ias-officer-anupama-in-second-attempt-series-of-struggles

சிறிது ஓய்வெடுத்து, அதன்மூலம் சக்தியை மீண்டும் பெற்று உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் உடற்பயிற்சியும் தியானமும் மிக அவசியம். இதுவே அவர்களை உடற்தகுதியோடும் நேர்மறை எண்ணங்களோடும் இருக்கச் செய்யும்.

எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டாலே, யுபிஎஸ்சி தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். எனவே, தேர்வில் வெற்றி பெற நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு உங்களை ஊக்கப்படுத்துவதோடு, அடுத்த கட்டத்துக்கு நகரவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் :

யுபிஎஸ்சி படிக்கத் தொடங்கியதும், குடும்ப விழா, கொண்டாட்டம் என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இது கடினம்தான். ஆனால், இவ்வாறு செய்தால் நீங்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற உதவும்” என்றார்.

ias-officer-anupama-in-second-attempt-series-of-struggles

அனுபமாவின் தந்தை போபாலில் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கிறார். ஐஏஎஸ் ஆன பிறகும் பல்வேறு சமூக சேவைகளில் அனுபமா ஈடுபட்டு வருகிறார். இது போன்ற பணிகள் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள உதவும் என்பது அனுபமாவின் நம்பிக்கை.

-எம்.மோகன்

Related Posts
dear-mother-of-thousands-of-helpless-people-mother-teresa-of-maharashtra
Read More

ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்களின் அன்புத் தாய்! – மகாராஷ்டிராவின் அன்னை தெரசா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் குழந்தைகளின் எண்ணிக்கை முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்தக் குழந்தைகளில் ஒரு…
kaveri-rana-bhardwaj-dog-mother-pandemic-covid-19
Read More

`நாய்களின் தாய்’ – 2000 நாய்கள்; 2500 பூனைகளுக்கு வாழ்வளித்த தெய்வமகள்

கொரோனா வைரஸ் காரணமாக 2020 மே மாதம் முதல் 30 சதவிகித நாய்கள் கைவிடப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நாய்களால் கொரோனா பரவுவதாகப் பரவிய…
the-mother-who-forgot-the-burden-daughter-who-felt-pain-accumulated-compliments-on-twitter
Read More

சுமையை மறந்த தாய்; வலியை உணர்ந்த மகள்! – ட்விட்டரில் குவிந்த பாராட்டுகள்

பெற்ற குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பெற்றோருக்குத் தெரியும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற, தங்கள் சக்தியை மீறி செலவு செய்யும் பெற்றோரே பெருமளவு…
london-woman-who-sells-spices
Read More

மசாலாப் பொருட்கள் விற்பனையில் சாதித்த லண்டன் பெண்

கொரோனா பொது முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பலரையும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றியிருப்பதையும் மறந்துவிட முடியாது. அந்த வகையில் வெற்றிகரமான பெண் தொழில்…
Total
2
Share