பெண் குழந்தைகளுக்குத் தபால் கணக்கு! – முன்னேறும் தெலங்கானா

bank-accounts-opened-for-girl-children
[speaker]

தெலங்கானா மாநிலத்தில் யெட்டுமைலாரம் கிராமத்தைச் சேர்ந்த 72 பெண் குழந்தைகளுக்குத் தபால் அலுவலக கணக்கு தொடங்கப்பட்டதற்கான புத்தகம் வழங்கப்பட்டது.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் இதற்கான தபால் அலுவலக கணக்குப் புத்தகங்களை தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் ஹனுமந்த ராவ் வழங்கினார். இதற்காகத் தபால் துறை தனி கவுன்டர்களைத் திறந்து வைத்திருந்தது. பெண் குழந்தைகளைக் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டு ஹரிதாஸ்பூர் கிராமத்திலும் இதேபோன்று, குழந்தைகள் பெயரில் தபால் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

முன்மாதிரி கிராமம் :

இந்நிலையில், யெட்டுமைலாரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் ஹனுமந்த ராவ், நாட்டுக்கே இந்தக் கிராமம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. விரைவில் இந்தக் கிராமத்துக்கு நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் வருகை தரவுள்ளார்.

bank-accounts-opened-for-girl-children

தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கினால், குடும்பத்தையும் சமுதாயத்தையும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் சிவகுமார், “பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன.

பெண்களை மதிப்பது என்பது, குடும்பங்களிலிருந்து முதலில் தொடங்க வேண்டும். திரைப்படங்களில் குத்தாட்டங்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கின்றன. சமூக வலைத்தளங்களும் மது அருந்துவதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

-எம். மோகன்

Related Posts
kotturpurams-rita-akka-loves-her-cats-and-dogs
Read More

செல்லப்பிராணிகளின் சினேகிதி கோட்டூர்புரம் ரீட்டா அக்கா!

சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளராக பணிபுரியும் ரீட்டா அக்காவின் அன்றாட வாழ்க்கை அற்புதமானவை. நாய்கள், பூனைகளிடம் அவர் காட்டும் அன்பிற்கு அளவே இல்லை.…
chhattisgarh-mother-a-heavy-vehicle-driver-teaches-her-kids-to-drive-monster-machines
Read More

கனரக வாகனங்களின் ராணி! – கலக்கும் 57 வயது குஜராத் பெண்

பெரிய கனரக வாகனங்களை எல்லாம் எளிதாகக் கையாளுகிறார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 57 வயது தமயந்தி சோனி. தெற்காசியக் கட்டுமான உபகரணங்கள் கண்காட்சிக்காகத் தமயந்தியை…
woman-bus-driver-help-covid
Read More

கொரோனா காலத்திலும் துணிச்சலுடன் சேவை-ஹிமாச்சல மலைகளில் பேருந்து ஓட்டும் சிங்கப்பெண்

கொரோனா வைரஸ் உலகையே முடக்கியது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்தில் பெரும் துயரத்தைச் சந்தித்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். வருமானத்தை இழந்து, உணவின்றி, சொந்த…
little-joys-a-nurse-gives-glimpses-of-her-life-in-a-covid
Read More

“சோகம்… அதிர்ச்சி… கொஞ்சம் மகிழ்ச்சி…” – செவிலியர் ஒருவரின் ஒரு வருட அனுபவம்

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் 28 வயது கெஜியா ராணியின் ஓராண்டு அனுபவம்தான் மேலே உள்ள 3 வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்குள்ளே கொரோனாவுக்கு…
Total
1
Share