100 ஆண்டுக்கால விடுதலை – பிராமணர் அல்லாத பெண்களை அனுமதித்த ஆந்திர மடம்

100-years-of-liberation-andhra-monastery-that- allowed-non-brahmin-women
[speaker]

ஆந்திராவின் சாது ஸ்ரீ மடம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு பிராமணர் அல்லாதவர்களையும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.சாது ஸ்ரீ மடத்தை 15 வயதில் விதவையான ராமலட்சுமி என்பவர் தொடங்கினார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, கணவரை இழந்தபின்

சன்னியாசினி ஆகும் இந்து பெண்களுக்கு மட்டுமே இந்த மடத்தில் தங்க அனுமதி வழங்கப்பட்டது. சில கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் சீர்திருத்தப் பாதைக்கு இந்த மடம் திரும்பியுள்ளது.

காவி நிற புடவை

இது கடந்த 1920 ஆம் ஆண்டு ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்தில் உள்ள வீரபத்ரபரத்தில் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் சமூக சீர்திருத்தவாதி கண்டுகுரி வீரசலிங்கம் பண்டுலு விதவைகள் மறு திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்தார்.

100-years-of-liberation-andhra-monastery-that- allowed-non-brahmin-women

அந்தக் காலகட்டத்தில் இந்த மடமும் பிரபலமானது. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த விதவைப் பெண்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டனர். மடத்தின் வழக்கப்படி தலையை மொட்டை அடித்து காவி நிற புடவைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிபந்தனைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டன. இந்நிலையில் இனி இந்து மதத்தைச் சேர்ந்த எந்த விதவைப் பெண்ணும் இந்த மடத்தில் சேரலாம் என்றும், தலையை மொட்டை அடிப்பதும் காவி புடவை உடுத்துவதும் அவரவர் விருப்பம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்வி சாது மாதாஜி :

இதைத் தொடங்கிய ராமலட்சுமி, 15 வயதில் தன் கணவரை இழந்தார். அதன்பிறகு தன் பெயரை சாத்வி சாது மாதாஜி என்று மாற்றிக்கொண்டார்.

வீரசலிங்கம் பண்டுலுவின் சமகாலத்தவரான சாத்வி, வாரணாசியில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு சன்னியாசியாகத் தீட்சை பெற்றார். ஆரம்பக் காலங்களில் உள்ளூர் மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர் பெயரில் அந்த மடத்தை அழைக்கக்கூடத் தயக்கம் காட்டினர்.

1964 ஆம் ஆண்டு சாத்வி மறைந்ததும், அந்த இடத்தில் சாத்வியின் உடலை அடக்கம் செய்ய உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது உடலை எரியூட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மடத்திலிருந்த சில சன்னியாசினிகளும் ஆதரவு கொடுத்தனர்.

5 முறை அனுஷ்டானம் :

இதனையடுத்து அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவர் எரியூட்டப்பட்ட இடம் இன்று தியானம் செய்யும் இடமாகிவிட்டதாகக் கூறுகிறார் மடத்தை நிர்வகிக்கும் சாத்வி காயத்ரி மாதாஜி. குண்டூர் மாவட்டம் மெப்பரு கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1968 ஆம் ஆண்டு மடத்தில் இணைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “விதவை மறுமணம் பிரபலமடைந்த பிறகு, சன்னியாசினி வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட பெண்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மடத்தில் இப்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். மடத்தின் தலைவராக தோட்டா சுப்பாராவ் உள்ளார்.

இங்கு தங்கியிருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 5 முறை அனுஷ்டானம் செய்ய வேண்டும். மேலும், ஏராளமான பெண்கள் மடத்தில் சேரும் வகையில் தாராளமயமாக்கப்பட்ட விதிகள் அறிவிக்கப்படும் ” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
loss-of-her-brother-made-this-bengaluru-woman-a-campaigner-for-a-national-suicide-prevention-helpline
Read More

தம்பியை இழந்த சகோதரி – தற்கொலைக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரம்

தன் தம்பி தற்கொலை செய்துகொண்டதால், இனி யாரும் அந்த விபரீத முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, இளம்பெண் ஒருவர் தேசிய தற்கொலை தடுப்பு உதவி…
womens-group-in-arunachal-pradesh-is-fighting-drug-abuse-and-social-evils
Read More

போதைப் பொருட்களுக்கு எதிரான போர்க்களத்தில் வெற்றி பெற்ற பெண்கள்! – ஒரு லட்சம் பரிசு

தாங்கள் நேசித்த ஒருவர் போதை வஸ்து மற்றும் குடிப்பழக்கத்துக்குப் பலியானதால், அந்தச் சமூகத் தீமைக்கு எதிராக ஒன்று இணைந்திருக்கிறார்கள் அருணாச்சலப் பிரதேசப் பெண்கள். கடந்த…
this-canadian-woman-has-a-collection-of-4500-toy-horses-worth-almost-60-lakhs
Read More

4,500 குதிரை பொம்மைகளைச் சேகரித்த கனடா பெண்! – 60 லட்சம் மதிப்பீடு

சேகரிப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பழக்கம் இருக்கும். அஞ்சல் தலை, நாணயம், புத்தகங்கள், அரிய பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இங்கே… கனடாவைச்…
hyderabad-based-millet-bank-empowering-female-farmers-Vishala
Read More

பெண் விவசாயிகளுக்கான அங்கீகாரம்! – அரவணைக்கும் தினை வங்கி

இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால், அவர்களது உழைப்பு வெளியே தெரிவதில்லை. பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே கடந்த 2020 ஆம்…
Total
2
Share