விதிமுறைகளும் நிபந்தனைகளும்

[speaker]

பயனாளிகளுக்கான நிபந்தனைகள்: ஓபன் ஹொரைசான் டிஜிட்டல் மீடியா LLPயின் (‘ஓபன் ஹொரைசான்’ அல்லது ‘நாங்கள்’ அல்லது ‘நமது’) இணையதளங்களுக்கு இப்பயனாளி நிபந்தனைகள் பொருந்தும். பின்வரும் நிபந்தனைகளின் (‘பயனாளி நிபந்தனைகள்’) அடிப்படையில் உங்களை ஒரு அதிகாரபூர்வ பயனாளியாக (’பயனாளி’ அல்லது ‘நீங்கள்’) ஓபன் ஹொரைசான் நியமித்து உங்களுக்கு சில உரிமைகளை (கீழே தரப்பட்டுள்ளன) தருகிறோம்; பதிலுக்கு நீங்களும் சிலவற்றைச் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். பயனாளி நிபந்தனைகள் உமக்கும் ஓபன் ஹொரைசானுக்கும் இடையே ஒப்பந்தத்தைப் போன்றவை. இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உமக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும் 18 வயதுக்கு குறைவாக இருந்தால் பெற்றோர்/கார்டியன் ஒப்புதலுடன் இவற்றை ஒப்புக்கொண்டதாகவும் உறுதி செய்கிறீர்கள். இணையதளத்துக்குள் நுழையும் முன் பயனாளி நிபந்தனைகளைக் கவனமாகப் படிக்கவும். இதைப் பயன்படுத்துவதால் நிபந்தனைகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம். எப்படி இணையதளத்தில் நுழைந்தாலும் (கம்ப்யூட்டர், சிறு கருவி, டிஜிட்டல் டெலிவிஷன், மொபைல் போன்) இந்த நிபந்தனைகள் பொருந்தும். ஏதாவதொரு நிபந்தனை உங்களுக்கு ஒத்துவராவிட்டால் இணையதளத்தைப் பயன்படுத்தாமல் அதை விட்டு விலகிச் சென்று விடவும்.

இந்த நிபந்தனைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளன?

நிபந்தனைகளில் நீங்கள் ஓபன் ஹொரைசான் இணையதளம் மூலம் அல்லது வேறு தளங்கள் மூலம் வாங்கும் பொருட்கள்/சேவை பற்றிய விற்கும் நிபந்தனை மற்றும் ஒப்புக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை இருக்கும்.

எம்மைப் பற்றிய தகவல்கள்:

புதிய எண்.9, பழைய எண்.11, தரைத்தளம், பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காடுதாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியில் தன் பதிவுபெற்ற அலுவலகத்தை வைத்துள்ள ஓபன் ஹொரைசான் நிறுவனத்தால் இந்த இணையதளம் நடத்தப்படுகிறது.

பதிவு:

இணையதளத்தின் சில சேவைகள் எம்மிடம் விவரங்களைப் பதிவுசெய்து கணக்கை வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். சேவைக்காக பதிவு செய்தால், இவற்றை நீங்கள் ஒத்துக்கொள்வதாக அர்த்தம்:

(அ)   உமது கணக்கு விவரங்கள் அந்தரங்கமானவை; அவ்விவரங்களை எந்த தேர்ட் பார்ட்டிக்கும் சொல்ல மாட்டீர்கள்;

(ஆ)   பதிவுபெற்ற பயனாளி மட்டும் அனுபவிக்கும் சேவைகளைப் பெற உமது கடவுச்சொல்லை தேர்ட் பார்ட்டிக்குத் தர மாட்டீர்கள்; பயன்பாடு பற்றிய தகவல்களை ரகசியமாக, பாதுகாப்பாக வைப்பீர்கள்;

(இ)    தவறான தகவல்களின் அடிப்படியில் (அ) வேறொருவர் பெயரில் எமது தளத்தில் பதிவு செய்ய மாட்டீர்கள்.

நிபந்தனையை நீங்கள் மீறியதாக எமக்குத் தெரியவந்தால் உமது பதிவுபெற்ற கணக்கை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் ரத்து செய்வோம். நீங்கள் விரும்பினால் (அ) நிபந்தனையை நீங்கள் மீறியதாக நாங்கள் நினைத்தால், அப்படிச் செய்வதற்கான உரிமை எமக்கு எப்போதும் உண்டு.

இணையதளத்திற்குள் நுழைதல்

இணையதளத்திற்குள் நுழைவது தற்காலிகமாக அனுமதிக்கப்படுகிறது; எவ்வித முன்னறிவிப்புமின்றி சேவையை நிறுத்த/மாற்றி அமைக்க எமக்கு அதிகாரம் உள்ளது. இணையதள சேவைகள் கிடைக்காமல் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். இணையதளத்தின் சில பகுதிகளை (அ) முழுமையாகப் பதிவுபெற்ற பயனாளிகளுக்குக் கிடைக்காதபடி அவ்வப்போது கட்டுப்படுத்துவோம். இணையதளத்திற்கு நுழைய தேவையான ஏற்பாடுகளை செய்வது (சமீபத்திய ஆண்டி-வைரஸ் மென்பொருள் பயன்படுத்துவது உட்பட) உமது பொறுப்பாகும். உமது இணைப்பின் மூலம் எமது இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் இந்த பயனாளி நிபந்தனைகளைத் தெரிந்து வைத்திருப்பதை நீங்கள்தான் உறுதிசெய்ய வேண்டும்.

குறிப்பிட்ட மாதிரி சொல்லியிருந்தாலொழிய இணையதளத்தில் உள்ளவை இந்தியர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். வேறு இடங்களுக்கும் பொருந்தும் என்றோ வேறு இடத்தில் கிடைக்குமென்றோ ஓபன் ஹொரைசான் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. வேறு இடங்களிலிருந்து இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அந்தந்த இடங்களின் சட்டதிட்டங்களைத் தெரிந்து மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

இணையதளத்தைப் பயன்படுத்துதல்/பொருந்தும் பயனாளி கொள்கை

பத்தி 5இல் உள்ள எமது ‘பொருந்தும் பயனாளி கொள்கை’யை ஒத்துக் கொண்ட பின்னர்தான் இணையதளத்திற்குள் நீங்கள் நுழைய முடியும். இதில் ‘பொருள்’ (material) என்றால் இவற்றையும் அர்த்தம் தரும்: மென்பொருள், ஆவணப்படுத்துதல், டெக்ஸ்ட், படங்கள், சப்தங்கள், கிராஃபிக்ஸ், கட்டுரைகள், வீடியோ (அ) ஆடியோ கோர்வைகள், விளம்பரப் பொருட்கள் மற்றும் இதர இணையதளங்களில் வெளியிடப்படுபவை. தளத்தில் வெளியிடப்படுபவற்றின் காப்புரிமை எம்மிடமே உள்ளது. இவை உலகெங்கும் நடைமுறையில் உள்ள காப்பிரைட் சட்டங்கள்/ஒப்பந்தங்களின் கீழ் வருகின்றன. அனைத்து விதமான உரிமைகளும் எமக்கே.