ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி பாக்ஸ்கான் நிறுவனம் முக்கியமான சப்ளையராக உள்ளதோ அதுபோன்று, உலகின் முன்னணி ஷூ பிராண்டுகளுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கிறது Pou Chen Corp.
தைவான் காலணி நிறுவனம்
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த காலணி உற்பத்தியாளராக இருக்கும் Pou Chen Corp தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, புதிய உற்பத்தி தளத்தை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது
தைவான் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் உறுதியானால், ரூ. 500 கோடி முதலீட்டில் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

Pou Chen Corp நிறுவனம் முன்னணி காலணி பிராண்டுகளான Nike,Adidas,Asics, ew Balance,Timberland மற்றும் Salomon ஆகியவற்றின் ஒப்பந்த உற்பத்தியாளராக உள்ளது.
300 மில்லியன் காலணிகள்
ஆண்டுக்கு 300 மில்லியன் காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதனால் எந்தப் பிராண்டுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்து தர முடியும்.

திருச்சி, விழுப்புரம் மற்றும் துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நிலங்களை தமிழ்நாடு அரசு அளிக்க முன்வந்துள்ள நிலையில், Pou Chen Corp சரியான இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
தமிழகத்தில் காலணி நிறுவனம்
தமிழ்நாடு அரசின் தோல் மற்றும் காலணி கொள்கையின் கீழ் சுமார் 20-25 உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் காலணி தொழிற்சாலைகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.

சுமார் 25 தொழிற்சாலைகள் அமைந்தால், வேலைவாய்ப்பு ஒரு மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் பல மாவட்ட மக்களுக்கும் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு பெருகும்
காலணி தொழிற்சாலைகளில் மட்டும் 15,000 முதல் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம். மோகன்