75 வயதில் பட்டங்களை அள்ளிக் குவித்த தூத்துக்குடி கணேஷ்

thoothukudi-ganesh-who-won-the-title-at-the- age-of-75
[speaker]

சர்வதேச எழுத்தறிவு நாள் கடந்த புதன்கிழமை கடந்து போயிருக்கிறது. இதனை நினைவு வைத்திருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனினும், இந்த தினத்தன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 75 வயதான கணேஷ் என்பவரை கடந்து சென்றுவிட முடியாது.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான், இவருக்கு வாழ்க்கையே தொடங்கியிருக்கிறது. படிப்பும் கையுமாக இருந்த அவர், கடந்த 15 ஆண்டுகளில் 8 முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இப்போது சமூகவியலில் பிஹெச்டி பட்டம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.

இனி கணேஷ் தொடர்கிறார்…

“கடந்த 1965 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி முடித்தேன். 1974 ஆம் ஆண்டு ஸ்பிக் நிறுவனத்தில் உதவியாளர் பணி கிடைத்தது. 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனக்கு 4 குழந்தைகளும் 6 பேரன், பேத்திகளும், ஒரு கொள்ளுப் பேரனும் உள்ளனர்.

படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டிய நிகழ்வு :

என் பெற்றோர் விவசாயிகள். அதனால், அவர்களால் என்னை உயர் படிப்பு படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால்தான் இன்றைக்கு நான் மகிழ்ச்சியுடன் படித்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியில் சேர முயன்றேன்.

thoothukudi-ganesh-who-won-the-title-at-the- age-of-75

அப்போது, அங்கிருந்த இன்ஜினீயர்கள், நான் எஸ்எஸ்எல்சி மட்டும் படித்திருப்பதால் என்னைக் கேலியும் கிண்டலும் செய்தனர். அங்கு நான் அவமானப்படுத்தப்பட்டதுதான், நிறைய படிக்க வேண்டும் என்ற வெறியை என்னுள் ஏற்படுத்தியது.

அரசுக்குக் கோரிக்கை :

2008 ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அதன்பிறகு சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். 2011 முதல் 2021 வரை சமூகவியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் விஞ்ஞானம், மனித உரிமைகள், சமூகப் பணி, பொருளாதாரம் மற்றும் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பிஹெச்டி படிக்க விண்ணப்பித்தபோது, எனது முயற்சியைப் பாராட்டி துணைவேந்தர் எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். வரும் டிசம்பரில் நடக்கும் நுழைவுத் தேர்வில் பங்கேற்குமாறு என்னை அறிவுறுத்தியுள்ளார்.

எனது வயதையும், ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, நுழைவுத் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.

கணேஷ் விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ளவர். தருவையில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்பித்து வருகிறார்.

-எம்.மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
three-men-on-a-meal-mission
Read More

தரமான சாப்பாடு; நல்ல குடிநீர்! – தினம் 500 பேருக்கு உதவும் சென்னை இளைஞர்கள்

ஏற்றத்தாழ்வுகளும் பாதிப்புகளும் உள்ள உலகில், கொரோனா தொற்று மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டு தரவுகளின்படி, 69 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை.…
electric-planes-uavs-startup-redefine-urban-mobility
Read More

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பறக்கும் டாக்ஸி: களத்தில் இறங்கிய சென்னை நிறுவனம்

நகரத்தின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கான மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் குட்டி விமானத்தை சென்னையைச் சேர்ந்த உபிஃப்ளை டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதிகரித்து வரும்…
heart-and-lungs-brain-dead-salem-man-airlifted-chennai-2-hours
Read More

இறந்த பின்பும் 8 உயிர்களைக் காப்பாற்றிய நாமக்கல் இளைஞர்!

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 27 வயது மாதேஷ் என்பவரின் உடல் உறுப்புகள் சேலத்திலிருந்து சென்னைக்கு அரை மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம்…
work-in-iraq-homeland-agriculture-rajeshkannan- double-ride
Read More

ஈராக் நாட்டில் வேலை; சொந்த மண்ணில் விவசாயம் – ராஜேஷ்கண்ணன் இரட்டை சவாரி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கொப்பூச்சித்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். ஈராக் நாட்டில் பணிபுரிந்துவரும் அவர், சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து சாதித்துவருகிறார்.…
Total
1
Share