விருது பணத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்த ஆசிரியை

the-teacher-who-bought-the-smart-phone-for- the-students-with-the-award-money
[speaker]

நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, தனக்குக் கிடைத்த விருது தொகையில் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த இரு மாணவர்களும் ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற முடியாதவர்கள். தன் மாணவர்களின் நிலையை மனதில் வைத்து, உதவிய ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரியை கல்வித்துறை அதிகாரிகளும் பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இசபெல்லா பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் மாணவர்களை தேடிச் சென்று சிறப்பான முறையில் கல்வி கற்பித்ததற்காக இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தினார் :

கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதும் ஆன்லைனில் பாடம் நடத்தினார், அப்போது 3 வாரங்களாக ஆன்லைன் வகுப்பில் பலர் பங்கேற்காததைக் கவனித்தார். இதனையடுத்து, அந்த மாணவர்களின் வீடுகளுக்கே சென்று இசபெல்லா பாடம் நடத்தினார்.

the-teacher-who-bought-the-smart-phone-for- the-students-with-the-award-money

இந்த நிலையில், ஆசிரியர் தினத்தன்று அவருக்கு நல்லாசிரியர் விருதுக்கான தொகை ரூ.10 ஆயிரம் கிடைத்தது. இந்தத் தொகையுடன் சொந்தப் பணம் ரூ.2,500 சேர்த்து 2 ஸ்மார்ட் போன்களை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்தார். இதனை ஆட்சித் தலைவர் விஷ்ணு மூலம் 2 மாணவர்களுக்கும் இசபெல்லா வழங்கினார்.

ஆசிரியருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள் :

ஸ்மார்ட் போனை பெற்றவர்களில் ஒருவரான வர்ஷிணி, “நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் தந்தை லாரி ஓட்டுநர். அப்பா மட்டும்தான் செல்போன் வைத்திருப்பார். அவர் வேலைக்கு செல்லும்போது, கூடவே போனையும் எடுத்துச் சென்று விடுவார்.

இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்தேன். தொலைவில் உள்ள என் தோழியின் வீட்டுக்கு வாரம் ஒருமுறை சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தேன்.ஏதாவது சந்தேகம் இருந்தால், இசபெல்லா டீச்சருக்கு போன் செய்து நிவர்த்தி செய்துகொள்வேன்.

the-teacher-who-bought-the-smart-phone-for- the-students-with-the-award-money

இப்போது எனக்கு செல்போன் கொடுத்த இசபெல்லா டீச்சர், பாடங்கள் அடங்கிய வீடியோக்களை எனக்கு அனுப்புவதாகக் கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்” என்றார். அதேபோல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஆசிரியை இசபெல்லா ஸ்மார்ட் போன் வழங்கியுள்ளார். அந்த மாணவரும் ஆசிரியைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆசிரியை இசபெல்லா, “இந்த செல்போன்கள் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். எல்லோர் கையிலும் போன் இருந்தால், மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு உற்சாகத்துடன் ஆன்லைனில் பாடம் நடத்துவோம்” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
mahakavi-memorial-century-singers-who-paid- homage
Read More

மகாகவி நினைவு நூற்றாண்டு: இசையாஞ்சலி செலுத்திய பாடகிகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவுதினத்தையொட்டி, வி2எஸ்2 குழுவைச் சேர்ந்த பாடகிகள் சைந்தவி பிரகாஷ், வினயா கார்த்திக் ராஜன், சுசித்ரா பாலசுப்பிரமணியன் மற்றும் வித்யா…
community-fridges-help-to-alleviate-hunger-in-times-of-need
Read More

அன்ன பாத்திரமாக மாறிய குளிர்சாதனப் பெட்டி! – சென்னையில் ஒரு சேவை

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது. அதுதான் உண்மையான தானம். கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும் கெளரவக் குறைச்சல் ஏற்படக் கூடாது. இதனை மனதில்…
chennai-college-students-make-use-of-tinder-social-media-apps-for-blood-donation
Read More

இரத்த தானம் செய்யும் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பலமாக வீசி வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி வருகின்றனர். தலைநகர்…
medical-heritage-trail-by-ramanujar-moulana-chennai
Read More

சென்னை அடையாளங்களை ஆவணப்படுத்தும் `சைக்ளிஸ்ட்’

கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து, சென்னையில் உள்ள பாரம்பரிய மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு சைக்கிளில் பயணித்ததை, மெட்ராஸ் பை சைக்கிள் என்ற…
Total
50
Share