427 திருமுகங்களுடன் பட்டுச்சேலை – பெருமாளுக்காக நெய்த தம்பதி

silk-with-427-faces-a-couple-woven-for-perumal
[speaker]

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு 427 பெருமாள் முகங்களுடன் கூடிய பட்டுச் சேலையை நெய்து கொடுத்து இருக்கிறார்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதி

பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

silk-with-427-faces-a-couple-woven-for-perumal

ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் பட்டு பீதாம்பரம் 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்டது. பட்டால் நெய்யப்படும் இந்த ஆடையை, கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 12,500 செலுத்தி மட்டுமே பெற முடியும்.

பட்டுப் பீதாம்பரம்

வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டுமே பட்டுப் பீதாம்பரம் பெருமாளுக்கு சாத்தப்படும். பணம் செலுத்திய பிறகும் வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

silk-with-427-faces-a-couple-woven-for-perumal

ஆனால், பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு பட்டுச்சேலை வழங்கினால் தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பேரில், பெருமாளுக்கு அற்புதமாக பட்டுச் சேலை ஒன்றை நெய்து வழங்கி இருக்கின்றனர் காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி.

திருமுகங்களுடன் பட்டுச் சேலை

பட்டுச்சேவை வடிவமைப்பு தொழிலை செய்து வரும் குமரவேலு – கலையரசி தம்பதி, வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை சேலையில் வடிவமைத்து நெய்து தருகிறார்கள்.

அந்த வகையில் 427 பெருமாளின் திருமுகங்கள், 27 ஜோடி யானைகளின் உருவம், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போன்ற பட்டுச்சேலை உருவாக்கி உள்ளனர்.

silk-with-427-faces-a-couple-woven-for-perumal

பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், லட்சுமி தேவியை வடிவமைத்து தந்துள்ளனர்.

192 மணி நேரத்தில் நெய்தனர்

இரவு பகலாக எட்டு தினங்கள் நான்கு நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெய்து இருக்கிறார்கள்.

ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ள இந்தச் இந்தச் சேலையில் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன.

முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதர், காலடியில் மகாலட்சுமி, தாமரைப் பூவில் பிரம்மாவை ஜரிகை இழைகளால் நெய்துள்ளனர்.

பெருமாளுக்கு சமர்பிக்கப்படும் பெருமை வாய்ந்த இந்தப் பட்டுச் சேலையை, விரதம் இருந்து நெசவு செய்ததாக, மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் குமரவேலு கலையரசி தம்பதி.

Related Posts
pooneithangal-village-has-made-a-ten-year-dream-come-true-achievement-in-community-afforestation
Read More

பத்தாண்டு கனவை நனவாக்கிய பூநெய்த்தாங்கல் கிராமம்! – சமூக காடு வளர்ப்பில் சாதனை

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பத்திரிகைச் செய்திக்காக அந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்த நினைவு வருகிறது. அப்போதுதான் மரக்கன்றுகள் துளிர்விடும் நிலையிலிருந்தன. பத்து ஏக்கர் பரப்பளவில்…
people-take-to-the-field-to-renovate-the-500-year-old-bungalow-court
Read More

500 ஆண்டுக்கால ‘பங்களா கோர்ட்டை’ புதுப்பிக்க களம் இறங்கிய மக்கள்

குடும்பப் பிரச்சினைகள், பொது நலன் விவாகரங்களில் தீர்வு காணும் இடமாக இருந்த 500 ஆண்டுகள்பழமையான பங்களா கோர்ட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் கோமங்களம்புதூர் கிராம மக்கள்…
terrace-garden-for-a-thousand-rupees-1-lakh- income-per-month
Read More

ஆயிரம் ரூபாய்க்கு போட்ட மாடித் தோட்டம் – மாதம் 1 லட்சம் வருமானம்

சென்னை பெருங்குடியில் வசிக்கும் ஜெயஸ்ரீ கிருஷ்ணன், மாடித் தோட்டம் தொடர்பான தொழிலைத் தொடங்கி 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நாள் வெறும் ஆயிரம் ரூபாயை…
old-fashioned-chennai-carrier-dining restaurants
Read More

பழைமை மாறாத சென்னை கேரியர் சாப்பாடு உணவகங்கள்

கொரோனா பொது முடக்கம் உணவகங்களின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. சென்னையில் உணவகத்தில் அமர்ந்து உணவருந்துவோரின் எண்ணிக்கை குறைந்தாலும், கேரியர்களை எடுத்து வந்து வரிசையில் நிற்போர்…
Total
1
Share