ஊரடங்கு காலத்தில் ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பனை! – கபிலன் வைரமுத்து பேட்டி

over-a-thousand-copies-sold-during-the-curfew- achieved-kapil-vairamuthu
[speaker]

தமிழ்த் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என நம்பிக்கையளிக்கும் படைப்பாளியாக உருவாகிவரும் கபிலன் வைரமுத்து, யாரும் அறிமுகம் செய்யாத புதிய களங்களில் படைப்புகளை எழுதிவருகிறார். அண்மையில் வெளியான அவரது `அம்பறாத்தூணி’ சிறுகதைத் தொகுப்பு ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி பதிப்புலகில் நம்பிக்கை நாற்றை நட்டுவைத்திருக்கிறது.

“கொரோனா காலத்தில் பதிப்புத்துறைக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் செய்தியாக இருக்கிறது. புதிய களங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதும், வாசிப்பை விட்டு விலகியுள்ள சக தலைமுறையும் என்னிலும் இளையவர்களும் எளிதில் வாசிக்கும் வண்ணம் படைப்பதுமே நோக்கம்” என்றார் ஓபன் ஹாரிசானிடம் பேசிய கபிலன் வைரமுத்து.

over-a-thousand-copies-sold-during-the-curfew- achieved-kapil-vairamuthu

பொறியியல் பட்டதாரியான அவர், முதலில் ஐடி துறையில் சேர்ந்தார். ஆனால், அந்த வேலையில் அவருக்கு அவ்வளவு பிடித்தமில்லை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தார். “இந்த வேலை நம்ம வேலை இல்லை என்று மனசில் தோன்றியது. என் வேலை இதயம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகம் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்ற வேட்கை இருந்தது. அந்தப் பணியிலிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கு இதழியல் படிக்கச் சென்றேன். குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்த படிப்பின் பெயர் சமூக மாற்றத்திற்கான தகவலியல். அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, என் முதல் நாவலை எழுதினேன். அதற்கு முன்பே கவிதைகள், சிறுகதைகள் எழுதியிருந்தேன்” என்று அனுபவத்தை நினைவுகூர்கிறார் கபிலன்.

பிளஸ் டூ படிக்கும்போது `உலகம் யாவையும்’ என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டார். அடுத்து என்றான் கவிஞன், மனிதனுக்கு அடுத்தவன்,கடவுளோடு பேச்சுவார்த்தை ஆகிய கவிதை நூல்கள், கதை என்ற சிறுகதைத் தொகுப்பு எனப் படைப்பு வெளியில் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கத் தொடங்கிய கபிலன், ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது எழுதிய முதல் நாவல் பூமராங் பூமி. “ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுக்கும், நம்முடைய தென்மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் ஒரே மாதிரியான மரபணு உள்ளதாக ஓர் ஆய்வு வெளிவந்தது. அந்தத் தகவல் எழுதுவதற்கான சின்ன பொறியை எனக்குத் தந்தது” என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதும் சென்னைப் பல்கலையில் விரிவுரையாளர், பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை என அனுபவங்களைச் சேகரித்த பிறகு அவர் முழுமையாக சினிமாவுக்கு வந்துவிட்டார். முதன்முதலாக வெற்றிமாறனின் உதயம் என்ஹெச் 4’ படத்தில் பாடல் எழுதிய கபிலன், ``என் கவிதைகளைப் பாடல்களாக்க வேண்டும், என் சிறுகதைகள், நாவல்களைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. தொலைக்காட்சிப் பணியிலிருந்து வெளியேறியதும் மெய்நிகரி நாவலை வெளியிட்டேன். டிவி ரியாலிட்டி ஷோவைப் பற்றிய அந்தக் கதைதான் கே.வி. ஆனந்த் இயக்கிய கவண்’ திரைப்படமாக உருவானது. இந்தப் படம் மூலம் நான் ஒரு எழுத்தாளராக அறிமுகமானேன். தற்போது இந்தியன் 2 படத்திலும் பணியாற்றிவருகிறேன்” என்கிறார்.

over-a-thousand-copies-sold-during-the-curfew- achieved-kapil-vairamuthu

ஊரடங்குக் காலத்தைச் சிறுகதைகள் எழுதுவதற்காகப் பயன்படுத்திக்கொண்ட அவர், 15 சிறுகதைகள் அடங்கிய `அம்பறாத்தூணி’ என்ற நூலை டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் வெளியிட்டார். அந்தக் கதைகளில் வேலூர் புரட்சி, பூலித்தேவன் வரலாறு என நூற்றாண்டுப் பழைமையான வரலாற்றுச் சம்பவங்களையும் வைத்தார்.

“அம்பறாத்தூணி தொகுப்பில் இடம்பெற்றுள்ளவை 15 கதைகள் என்பதைவிட, 15 கதாபாத்திரங்கள் என்று சொல்லலாம். வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக அவர்களை உருவாக்கினேன். இந்த நூல் வெளியான முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகிவருகிறது. இன்றைய சூழலில் ஓர் ஆரோக்கியமான மாற்றமாக அதைப் பார்க்கிறேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கபிலன் வைரமுத்து.

சிறுகதைகள் பற்றி அப்பா வைரமுத்து என்ன சொன்னார்?

“31 ஆம் நூற்றாண்டு பற்றி எழுதிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.’’

-சுந்தரபுத்தன்

Related Posts
nature-farming-as-if-in-a-wheelchair-goddess-indira
Read More

வீல்சேரில் இருந்தபடி இயற்கை விவசாயம் – தெய்வமகள் இந்திரா

மதுராந்தகம் அருகிலுள்ள சிறுநல்லூரில் உள்ள ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளுக்கான பிரேம் இல்லத்தின் நிர்வாகி டி. இந்திரா. இரண்டு கால்களும் நடக்கமுடியாத தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்.…
world-recording-chennai-girl-in-yoga
Read More

யோகாவில் உலக சாதனை படைத்த சென்னை சிறுமி

உலகில் தினந்தோறும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி நந்தினி சாரதா புதியதொரு உலக சாதனையைப்…
tamil-nadu-teacher-ensures-her-pupils-dont-drop-out
Read More

மலைவாழ் மாணவர்களுக்கு வழிகாட்டிய தலைமை ஆசிரியை: படிப்புக்கும் வேலைக்கும் ஏற்பாடு

பள்ளிக்கூடத்துக்குப் போனோமா, பாடம் சொல்லிக் கொடுத்தோமான்னு கடமையை முடித்துக் கொள்ளாமல், மலைவாழ் மாணவர்களின் எதிர்காலத்தையும் கட்டமைத்துக் கொடுத்திருக்கிறார் தலைமை ஆசிரியை கலாவதி. நீலகிரி மாவட்டம்…
veterinarian-guiding-country-goats-helps-to-get-a-bank-loan
Read More

நாட்டு ஆடுகள் வளர்க்க வழிகாட்டும் கால்நடை மருத்துவர்! – வங்கிக் கடன் பெற உதவுகிறார்

நாமக்கல் நகரத்திலேயே ஆட்டுப் பண்ணை வைத்திருக்கிறார் கால்நடை மருத்துவர் மருத்துவர் ராஜசேகர். 16,000 ரூபாய் செலவில் சிறு பண்ணை அமைப்பை உருவாக்கிவிடமுடியும் என்று ஆடு…
Total
15
Share