“இந்திய வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்

indian-history-must-begin-with-tamil-land-mk- stalin
[speaker]

தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இனி இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தொடங்கி எழுதப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு தமிழர்களின் பண்பாட்டைத் தேடும் உலகப் பயணத்துக்கு தோள் கொடுப்பதாக அமைந்துள்ளது.

110 ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “சங்க கால துறைமுகமான முசிறி, பட்டணம் என்ற பெயரில் தற்போது கேரளத்தில் அமைந்துள்ளது. சேர நாட்டின் தொன்மையையும் பண்பாட்டையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநில தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும்.

வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் :

ஆந்திர மாநிலம் வேங்கி, கர்நாடக மாநிலம் தலைக்காடு, ஒடிசா மாநிலம் பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்காதிம் மற்றும் பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில்

indian-history-must-begin-with-tamil-land-mk- stalin

பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் `தமிழி’ எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டு தொல்லியல் வல்லுநர்கள் துணையுடன் உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

3200 ஆண்டுகளுக்கு முந்தையது :

`யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகுக்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப் பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். இதனைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழியில் நின்று நிறுவுவதே அரசின் தலையாய கடமை.

indian-history-must-begin-with-tamil-land-mk- stalin

`தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை வைத்து திருநெல்வேலியில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-எம்.மோகன்

Related Posts
medical-heritage-trail-by-ramanujar-moulana-chennai
Read More

சென்னை அடையாளங்களை ஆவணப்படுத்தும் `சைக்ளிஸ்ட்’

கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து, சென்னையில் உள்ள பாரம்பரிய மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு சைக்கிளில் பயணித்ததை, மெட்ராஸ் பை சைக்கிள் என்ற…
massive-movement-the-lets-read-and-love-group-with-37000-members
Read More

மாபெரும் இயக்கம் – 37,000 உறுப்பினர்களுடன் `வாசிப்போம் நேசிப்போம்’ குழு

ஒருவேளை நீங்கள், “இந்தக் காலத்துல யாருப்பா புத்தகம் படிக்கிறது” என்று சொல்பவராக இருந்தால், அந்தக் கருத்தை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். பொறியியல் பட்டதாரி கதிரவன் ரத்தினவேல்…
do-not-engineering-natural-farming-is-enough-20-lakh-business-watching-youth
Read More

இன்ஜினீயரிங் வேண்டாம்; இயற்கை விவசாயம் போதும்! – 20 லட்சம் வர்த்தகம் பார்க்கும் இளைஞர்

செஞ்சியை அடுத்த கோட்டைபூண்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் படித்தது பிஇ சிவில் இன்ஜினீயரிங். இன்று அவர் வெற்றிகரமான ஓர் இயற்கை விவசாயி. சொந்த பிராண்டில்…
ink-placed-on-voters-a-true-story
Read More

வாக்காளர்களுக்கு வைக்கப்படும் `மை’ ! – ஓர் உண்`மை’ கதை

பொதுவாகத் தேர்தல் என்றதும் நம் நினைவிற்கு வருவது அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் பிரச்சார கூட்டங்கள்தான். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் தேர்தல் என்றால் நம்…
Total
23
Share