கொரோனா பாதித்தவர்களுக்குத் தடுப்பூசி தேவையா? – மருத்துவ உலகம் சொல்வது என்ன?

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid
[speaker]

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை பரவலில் தீவிரத்தின் உச்சம் தொட்டு நோய் பாதிப்புகள் மெல்ல குறைந்துவருகின்றன.

உலக நாடுகளில் தடுப்பூசிகள் அறிமுகமாகி அமெரிக்கா, நியூசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி விளைவுகள் பற்றிய ஆய்வு

தற்போது கொரோனாவைத் தடுப்பதில் தடுப்பூசியின் விளைவுகள் பற்றிய ஆய்வுகளில் மருத்துவ உலகம் ஈடுபட்டுள்ளது.

ஒருமுறை கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அவர்களுடைய உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற பிறகு தடுப்பூசிக்காக மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் வழிமுறை வகுத்துள்ளது.

ஏற்கெனவே அவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியிருக்கும் என்பதால், மருத்துவரீதியாக மூன்று மாத கால அவகாசம் தரப்படுகிறது.

பாதித்தவர்களுக்குத் தடுப்பூசி வேண்டுமா?

எய்ம்ஸ் மருத்துவர்கள், தேசிய கொரோனா தடுப்பு மருத்துவர்களைக் கொண்ட ஒரு மருத்துவ நிபுணர் குழு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்ற ஆலோசனையை வழங்கியுள்ளது.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் உண்மையாகவே மக்களுக்குப் பலனளிப்பவையா என்று ஆய்வுக்குட்படுத்திய பிறகே அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த தொடங்கும்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒரு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆய்வை டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதாவது, ஒரு டோஸ் அல்லது முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், மீண்டும் தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தரமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோய் எதிர்ப்புச் சக்தி ஆய்வு

முதல் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மறுமுறை ஏற்படும் வாய்ப்பு பத்து மாதங்களில் குறைவாகவே இருக்கும் என லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை ஆய்வு செய்ததன் அடிப்படையில் லண்டனைச் சேர்ந்த யுனிவர்சிட்டி காலேஜ் அறிவித்துள்ளது.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

நோய்த் தொற்று ஏற்பட்ட பிறகு போடக்கூடிய தடுப்பூசியால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆதாரங்கள் இல்லை என்றும் இந்திய மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.

“கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடவேண்டிய தேவையில்லை. தொற்று ஏற்பட்ட பிறகு தடுப்பூசியால் பலன் உண்டு என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் போடலாம்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை

கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் அதில் உலோகம் தொடர்பான பொருட்கள் கலக்கப்படவில்லை என்றும் பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதும் பரவலைக் குறைப்பதுமே மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதன் நோக்கமாக உள்ளது.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது உடனடி தேவையாக இல்லை. அவர்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறார்கள் என்கிறது அந்த மருத்துவ அறிக்கை.

இதுபற்றி கொரோனா சிகிச்சையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் டாக்டர் அன்புச்செல்வனிடம் கேட்டோம்: “கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி விரைவாகவே குறைந்துபோய்விடுகிறது என்கிறார்கள். சின்னம்மை ஏற்பட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி நீண்ட நாட்களுக்கு இருப்பதால், மீண்டும் அது வருவதில்லை.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது

இந்த பெருந்தொற்றைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் உடனே குறைகிறது என்றும் சொல்கிறார்கள். நாட்டில் இரண்டு முறை கொரோனாவால் பாதித்தவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். எனவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துபோவது கண்கூடாகத் தெரிகிறது.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

இந்த நிலையில், தடுப்பூசி போடுவது என்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முதல் டோஸ் தடுப்பூசிக்கே நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது. இரண்டு முறை போட்டுக்கொள்வது மிகவும் சிறந்தது.

ஆய்வுக்குப் பிறகு அரசு அங்கீகரிக்கும்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை என்பது பற்றிய ஆய்வு முடிவை மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ளனர். அதுபற்றி அரசு ஆய்வுகளைச் செய்து நிபுணர் குழுவின் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் அங்கீகாரம் வழங்கும், உடனே அது நடைமுறைக்கு வராது.

covid19-vaccine-no-need-to-vaccinate-people-once-infected-by-covid

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் அதையே பின்பற்றிவருகிறோம்” என்று யதார்த்த நிலையை விளக்கினார்.

-சுந்தரபுத்தன்

Related Posts
chennai-artist-uses-self-portraits-to-describe-illness-isolation
Read More

காலத்தைக் கடந்து நிற்கப் போகும் கொரோனா காட்சிகள்!

கொரோனா நோய் காரணமாக தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் பெரும்பாலும் தூங்குவதையே வழக்கமாக கொண்டிருந்த நிலையில், 25 வயது இளைஞர் அப்போது கிடைத்த நேரத்தை கொரோனா விழிப்புணர்வுக்கான…
Read More

முக்கூர்த்தி தேசிய பூங்கா! – மலைப்பிரதேசத்தின் மகாராணி

தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமானது முக்கூர்த்தி தேசிய பூங்கா. இது நீலகிரி மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையாக உள்ளது. வரையாடுகள் அதிகம் இருப்பதால், நீலகிரி வரையாடு…
accurate-weather-forecast-who-is-this-delta-weatherman
Read More

வானிலை குறித்து துல்லியக் கணிப்பு – யார் இந்த டெல்டா வெதர்மேன் ?

தமிழகத்தில் பெய்யக் கூடிய மழை, அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் பேரிடர் குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு…
adivasi-musicians-re-discover-traditional-music-pandemic
Read More

பாரம்பரிய இசையை மீட்டுத் தந்த ஊரடங்கு! – நீலகிரி பழங்குடி மக்கள் மகிழ்ச்சி

கொரோனா காலத்தில் பழைமையான இசைக்கருவிகளை மீளுருவாக்கம் செய்துள்ளனர் தமிழக பழங்குடியினர். நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் உள்ள கரிக்கியூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்ளூர்…
Total
1
Share