கார்பரேட் கம்பெனிக்கு பாடம் எடுக்கும் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
[speaker]

வாடிக்கையாளர் சேவை குறித்து பெரிய நிறுவனங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை.

சென்னையைச் சேர்ந்த அண்ணாதுரை வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதில் சிறந்து விளங்கி வருகிறார்.

ஆட்டோ ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்ட 37 வயது அண்ணாதுரையின் சேவை, நம் கண்களால் நம்ப முடியாததாக இருக்கிறது.

எப்போதும் காக்கி சீருடையில் பணியில் இருக்கும் இவர், எவ்வளவு போக்குவரத்து இருந்தாலும், தன் பயணிகளை அவர்கள் சேரும் இடத்தில் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்.

வார, மாத இதழ்கள் :

அவரது ஆட்டோவில், வார, மாத இதழ்கள், தின்பண்டங்கள், புத்தகங்கள், லேப்டாப், டேப்லெட், குட்டி தொலைக்காட்சி, குளிர் பானங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார்.

பொது முடக்கத்துக்குப் பிறகு, முகக்கவசம் மற்றும் கிருமி நாசினியை கூடுதலாக ஆட்டோவில் வைத்துள்ளார். ஆட்டோவில் உள்ள இந்தப் பொருட்களில் எதை வேண்டுமானாலும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
Photo By: The Better India

அவற்றுக்குத் தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் முதியோர் என இவரது ஆட்டோவில் பயணிக்கும் அனைவரும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு பயணிகளின் கவனிப்புக்குள்ளான பிறகு, திடீரென அண்ணாதுரை கொண்டாடப்பட்டார். ஆட்டோ ஓட்டுநர் தொழில் குறித்து அவர் பேசியது பலரது கவனத்தையும் கவர்ந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் கருணை காட்ட செய்ய வேண்டியது குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வருமாறு பெரிய நிறுவனங்கள் அண்ணாதுரையை அழைக்கின்றன.

குறிப்பாக, வோடாஃபோன், ஹுண்டாய், டொயோடா மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.

தன்னம்பிக்கை உரை :

இதுமிட்டுமின்றி, ஐஐடி மற்றும் ஐஎஸ்பி போன்ற நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களுக்குச் சென்றும் தன்னம்பிக்கை உரையாற்றி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிறந்த அண்ணாதுரை, 4 வயது இருக்கும்போது பெற்றோருடன் சென்னைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
Photo By: The Better India

இது குறித்து அண்ணாதுரை, “என் தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் ஆட்டோ ஓட்டுநர்கள். நானும் அவர்கள் வழியையே பின்பற்றினேன். சொந்தமாகத் தொழில் தொடங்கி, குடும்பத்தின் நிதி பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் என் திட்டமாக இருந்தது.

ஆனால், குடும்பத்தின் உச்சகட்ட நிதிப்பிரச்னையால் 12 ஆம் வகுப்பில் பாதியோடு நின்றுவிட்டு, ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். ஆட்டோ ஓட்டுவதை விரும்பி செய்யத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் என் ஆட்டோவின் பின்புறத்தில் செய்தித்தாள்களை வைத்தேன். படிப்படியாக புது சேவைகளை அறிமுகப்படுத்தினேன்.

வைஃபை வசதி :

வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நான் எங்கும் சென்று கற்கவில்லை. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த அன்றே, வாடிக்கையாளர்களின் மனதை வென்றெடுக்க வேண்டும் என்ற என் முயற்சியும் ஆரம்பமானது. பயணிகளுடன் நட்பாகப் பழகுகிறேன்.

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
Photo By: The Better India

அவர்களுடன் தேவைப்பட்டால், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம் மற்றும் பொழுதுபோக்கு குறித்து உரையாடுகிறேன். கடந்த 2009 ஆம் ஆண்டு உள்ளூர் மற்றும் தேசிய செய்தித்தாள்கள் மற்றும் வார, மாத இதழ்களை ஆட்டோவில் இடம்பெறச் செய்தேன்.

எனது பயணி ஒருவர் சரியான நெட்வொர்க் இல்லாததால் கணவருடன் பேச சிரமப்பட்டதைக் கவனித்தேன். உடனே வைஃபை வசதியை செய்தேன்.

ஆட்டோ என்பது ஒருவரை அழைத்துச் சென்று விடும் போக்குவரத்து என்று பலர் நினைக்கின்றனர். ஆட்டோவில் அதற்கும் மேலேயும் ஒரு விஷயம் இருக்கிறது.

பொது அறிவுப் போட்டி :

பலதரப்பட்ட மக்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறேன். பயணிகள் ஏறியதும் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, அவரது மொழியிலேயே வணக்கம் சொல்வேன். இதற்காக 9 மொழிகளில் அந்த வார்த்தையைக் கற்றுக் கொண்டேன்.

இந்திப் படங்களின் பெயர், விஞ்ஞானிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தியாவின் புகழ்பெற்ற இடங்கள், விளையாட்டு குறித்துப் பேசி, வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பயணிகளுக்கு ஏற்படுத்துவேன்.

பொதுவான விஷயங்களைப் பற்றி பேசும்போது அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்.

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
Photo By: The Better India

அதன்பிறகு பயணிகளுக்கு இலவசம் வழங்கவும் தொடங்கினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு இதனைப் பரிசோதனை அடிப்படையில் செய்தேன். மழை பெய்யும்போது, குடையை எடுத்துச் சென்றுவிட்டு, உங்களுக்கு நேரம் இருக்கும்போது திருப்பிக் கொடுங்கள் என்று சொல்வேன்.

பயணிகள் குடையைத் திருப்பித் தரும்போது அதிர்ந்து போனேன். வாய்ப்பு கொடுத்தால் எல்லோரும் நல்லவர்களே என்ற பாடத்தை அதன்மூலம் நான் கற்றேன்.

எனது பயணிகளுக்காக பொது அறிவுப் போட்டியை மாதந்தோறும் நடத்தி ரூ. 1,000 வரை பரிசு அளித்து வருகிறேன். 20 முறை என் ஆட்டோவில் பயணம் செய்த பயணிக்கு டோக்கன் வழங்குவேன்.

இதன்மூலம் பணமும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கூடுதலாக மீண்டும் இலவசமாகப் பயணிக்கலாம். இதனால் பயணிகள் என் ஆட்டோவில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினர்.

ஆசிரியருக்கு இலவசம் :

சிலர் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்து என்னுடன் நண்பர்களாகிவிடுவார்கள். குழந்தைகள் தினம், பெண்கள் தினம் மற்றும் அன்னையர் தினத்தில் இலவச சேவை செய்கிறேன். சென்னையில் ஆசிரியராக இருந்தால், எந்த நேரமும் அவர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

ஆசிரியர்கள்தான் இன்ஜினீயர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் உருவாக்குகிறார்கள். ஆசிரியர் பணி என்பது புனிதமானது. அவர்களுக்கு என்னால் முடிந்த சேவையைச் செய்கிறேன்.

chennai-auto-driver-viral-mba-annudurai-customer-loyalty-service-marketing
Photo By: The Better India

கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு எனக்கு மாதந்தோறும் ரூ.1,18,000 வருவாய் கிடைத்தது. இதில் ரூ. 19 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் செலவழித்தேன்.

நான் பயணிகளுக்கு இப்படி சேவை செய்வதை ஆரம்பத்தில் என் நண்பர்களும் குடும்பத்தினரும் எச்சரித்தனர். இது போன்ற பொருட்களை வாங்காமல், சேமிக்குமாறு கூறினார்கள்.

ஆனால், என் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாரானேன்.

பொது முடக்கத்தில் என் வருவாய் குறைந்தாலும், இலவசப் பயணம், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை தேவைப்படுவோருக்கு வழங்குவதைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்” என்றார்.

-எம்.மோகன்

-நன்றி: தி பெட்டர் இந்தியா

Related Posts
cultivation-of-lotus-on-one-acre-young-man-looking-for-income-without-investment
Read More

ஒரு ஏக்கரில் தாமரை சாகுபடி – முதலீடு இல்லாமல் வருமானம் பார்க்கும் இளைஞர்

நெல், வாழை, காய்கறி போன்றவற்றைக் காலம் காலமாக பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் பலருக்கும் தெரியாத புதுமையான விவசாய முறையில்…
residents-of-thalampur-lake-in-chennai
Read More

சென்னை தாழம்பூர் ஏரியை தாங்கிப் பிடிக்கும் குடியிருப்பு வாசிகள்

தென்சென்னையில் சோளிங்கநல்லூர் மற்றும் நாவலூர் இடையே அமைந்துள்ளது தாழம்பூர். இங்கு காணாமல் போன ஏரியை இப்பகுதி மக்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள். இதன்மூலம், தாவரங்கள், மரங்கள், பறவைகள்,…
to-whom-can-the-government-give-respect-lawyer-description
Read More

யாருக்கெல்லாம் அரசு மரியாதை கொடுக்க முடியும்? – வழக்கறிஞர் விளக்கம்

புதுச்சேரியில் வாழ்ந்த கரிசல் இலக்கிய ஆளுமை கி.ரா.வின் உடல் இடைசெவல் கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் அரசு மரியாதை பெறும்…
eight-soaps-in-a-liter-of-milk-healthy-goat-milk
Read More

ஒரு லிட்டர் பாலில் எட்டு சோப்புகள்- ஆரோக்கியம் தரும் ஆட்டுப்பால்; பசும்பால்

ஈரோடு மாவட்டம், காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா வீட்டிலேயே புதுமையான முறையில் சோப்புகளைத் தயாரிக்கிறார். ஆட்டுப்பால், பசும்பால் சோப்புகளைச் சிறிய அளவில் விற்பனை செய்து…
Total
1
Share