உடைக்கப்பட்ட கருணாநிதி சிலை – அன்று நடந்தது என்ன?

broken-karunanidhi-statue-what-happened-on
[speaker]

“சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் மீண்டும் சிலை அமைக்கப்படும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரியாரின் விருப்பத்தின் பேரில், சென்னை அண்ணாசாலை ஜெனரல் பீட்டர் சாலை நுழைவில் கடந்த 1975 ஆம் ஆண்டு கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவின்போது ஏற்பட்ட கலவரத்தில், இந்தச் சிலை சேதப்படுத்தப்பட்டது.

முதுகில் குத்தவில்லை :

அப்போது கருணாநிதியின் சிலையை ஒரு சிறுவன் கடப்பாரையால் உடைக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது எழுதிய கருணாநிதி, “என் தம்பி மார்பில்தான் குத்துகிறான்; முதுகில் குத்தவில்லை” என்று குறிப்பிட்டார். இந்த

broken-karunanidhi-statue-what-happened-on

சம்பவத்தை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய திமுக உறுப்பினர் நீலமேகம், அண்ணாசாலையில் மீண்டும் கருணாநிதிக்கு அரசு சார்பாக சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெரியார் விருப்பத்துக்கேற்ப நிறுவப்பட்ட கருணாநிதி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று திராவிட கழக தலைவர் வீரமணியும் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கையை வைத்தார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி :

broken-karunanidhi-statue-what-happened-on

சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பிறகு, சென்னை அண்ணாசாலையில் தகுந்த இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும்” என்றார். கருணாநிதியின் சிலையை மீண்டும் திராவிடர் கழகம் அமைக்கும் என்று கி.வீரமணி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டது திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-எம்.மோகன்

Related Posts
tribal-culture-through-art
Read More

பழங்குடிக் கலையைப் பாதுகாக்க அருங்காட்சியகம் : வனத்துறை புதிய முயற்சி

பழங்குடியின கலாச்சாரத்தை ஓவியம் மூலம் பாதுகாக்கும் வகையில், அருங்காட்சியகம் அமைக்கும் பணியைப் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் பயிலும் மாணவர்கள் பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் குழுவிற்குச்…
what-are-the-main-demands-of-tamil-nadu-farmers-presented-by-jeevakumar
Read More

தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? – முன்வைக்கிறார் ஜீவக்குமார்

சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் பிரச்னைகள் அதிகமாக எழுந்தன. மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்ந்தன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு…
woman-pioneer-in-the-male-world-of-oncology
Read More

“தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை” – மருத்துவ விடிவெள்ளி சாந்தாவின் மந்திரம்

சென்னை அடையாறுக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஒன்று; அடையாறு ஆலமரம். மற்றொன்று; அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சாந்தா. இந்த இரண்டு அடையாளமும் இப்போது இல்லை.…
dragon-fruit-farm-in-the-middle-of-the-coconut- enrichment-lawyer
Read More

தென்னைக்கு நடுவே டிராகன் புரூட் பண்ணை- வளம்சேர்க்கும் வழக்கறிஞர்

புதுச்சேரியில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் சரவணமுத்து. விவசாயக் குடும்பத்தில் பிறந்துவளர்ந்தவர். அவரது உள்ளுணர்வில் விவசாயம் இருந்தது. முதுமையில் மன அமைதியைத் தேடிய அவர், கிழக்குக் கடற்கரைச்…
Total
1
Share