மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோருக்கு 1000 வகையான இலவச பயிற்சி

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill
[speaker]

சென்னை சேப்பாக்கத்தில் பிறந்துவளர்ந்த சித்ரா லிங்கேஸ்வரன், எம்பிஏ பட்டதாரி. கூடுதலாக டிடிசி எனப்படும் தொழில் ஆசிரியப் பயிற்சிப் படிப்பையும் படித்துள்ளார். டைலரிங் படிப்பில் மாநில அளவில் முதல் மாணவியாகத் தேர்ச்சிபெற்றவர்.

கடந்த 18 ஆண்டுகளாக டைலரிங், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் தொடர்புடைய ஆயிரம் விதமான கைத்தொழில்கள் பற்றி பெண்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். நம்மை அலங்கரிப்பதற்கும், வீட்டை அலங்கரிப்பதற்குமான கலைகள் அனைத்தையும் கற்றுத்தருகிறார் சித்ரா லிங்கேஸ்வரன்.

வொயர் கூடை பின்னுதல், ஹேண்ட் எம்ப்ராய்டரி, மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி எம்ப்ராய்டரி, தையலில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உடைகள், நிட்டிங், சாக்லேட் மேக்கிங், கேக் மேக்கிங், ஐஸ்க்ரீம் மேக்கிங், ப்ளவர் மேக்கிங், பேஷன் ஜூவல்லரி எனப் பல பயிற்சிகளை வழங்குகிறார்.

10 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி :

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாகத்தான் பயிற்சியளிக்கும் அவர், இதுவரை 10 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர் உள்பட 2000 பேருக்குக் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கி சாதனை படைத்துள்ளார்.

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill

ஓபன் ஹாரிசான் தளத்திடம் பேசிய சித்ரா, “நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு விடுமுறையில் டைலரிங் மற்றும் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொண்டேன். இதுதான் என் முதல் அடி. பிறகு உல்லன் வொர்க்ஸ், ஓவியம் என படிப்படியாக ஐந்து ஆண்டுகளாகத் தெரிந்துகொண்டேன்.

2003 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் செய்கிற கைவினைப் பொருட்களை மட்டுமே அன்பளிப்பாகக் கொடுப்பேன். “நீ செய்கிற தயாரிப்புகள் எல்லாமே நல்லா இருக்கு என்று சொல்வார்கள். அதையெல்லாம் பார்த்துவிட்டு நீ சொல்லிக் கொடுக்கலாமே’’ என்று என் தோழி ஒருவர் கேட்டார். முதலில் அவருக்கு மட்டும் பயிற்சியளிக்க ஆரம்பித்தேன்.

குடும்பத்தினர் ஊக்கம் :

என்னுடைய பயிற்சிகள் புரியும்படி எளிமையாக இருந்ததால், நீ வகுப்புகள் தொடங்கலாம் என்றார்கள். குடும்பத்திலும் ஊக்கமளித்தார்கள். பயிற்சி வகுப்புகளை மெல்லத் தொடங்கினேன். பின்னர் இரண்டு மாதங்களில் எனக்குத் தெரிந்த அக்கா ஒருவர், `கணவர் இறந்துவிட்டார். வருமானம் கிடையாது. ஏதாவது பண உதவி செய்’ என்று கேட்டார்.

`என்னால் பணம் தரமுடியாது. ஆனால், உங்களுக்கு ப்ளவுஸ் தைக்கக் கற்றுத்தருகிறேன். அதை வைத்து வருமானம் பெருக்கிக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு ப்ளவுஸ் தைத்தால்கூட உங்களுக்கு குடும்பச் செலவுக்கும் பணம் கிடைக்கும். ஒரு மெஷின் வாங்கினால் போதும். மெட்டீரியல் செலவு கிடையாது’ என்று சொன்னேன்.

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill

நான் சொல்லியதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தையல் தொழிலைத் தொடங்கினார் அந்த அக்கா. அந்த வருமானத்தை வைத்து இரண்டு பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்து திருமணம் செய்துகொடுத்துவிட்டார்’’ என்று கடந்துவந்த நம்பிக்கைக் கதையைப் பேசுகிறார்.

சித்ராவுக்கு 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவரது கணவர் புதுச்சேரியில் பிஸினஸ் செய்துவந்தார். முதல் குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகு சென்னைக்கு நகர்ந்தார். மாற்றுத்திறனாளிகளுக்குக் கைவினைத் தொழில் பயிற்சி கொடுப்பதற்குச் சென்னைக்குச் செல்வது வசதியாக இருக்கும் என்று நினைத்த அவருக்கு கணவரின் ஆதரவும் கிடைத்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி :

2017 ஆம் ஆண்டு வரை வீட்டில் உள்ள அறையில் வகுப்புகளை எடுத்துவந்த சித்ரா, பிறகு வீட்டு மொட்டை மாடியை பயிற்சி நிலையமாக மாற்றினார். அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருந்தார். சொந்த முயற்சியில் கால் இல்லாதவர்களும் தொடை மூலம் மெஷினை இயக்கி தைக்கமுடியும் என்பதைக் கண்டறிந்தார். அதைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.

பேச்சைத் தொடரும் சித்ரா, “என்னை மாற்றுத்திறனாளிகள் தொடர்புகொள்ளலாம். கால் இல்லை என்றாலும் தொடை மூலம் தைப்பதற்குச் சொல்லித்தருகிறேன் என்றேன். அல்லூர் என்ற மெஷின் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திச் செய்யமுடியும்.

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill

சைதாப்பேட்டையில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டிற்கே சென்று கற்றுக்கொடுத்தேன். அவளது வீடு சர்ச் வளாகத்திற்குள் இருந்தது. தையல் ஆர்டர்கள் கொடுத்து வாங்குகிற இடம். அந்தப் பெண் தையல் தொழிலைக் கற்றுக்கொண்டு மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்கத் தொடங்கினார்.

மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர், திருநங்கைகள், விதவைகள், தந்தையை இழந்தவர்கள் உள்படப் பல வகையினருக்கும் வீட்டில் போய்தான் கற்பிக்கமுடியும். இவர்கள் அனைவருமே ஏதாவதொரு வகையில் வருமானத்திற்குச் சிரமப்படுபவர்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவில் வழிகாட்ட முடியும் என்று நினைத்தேன்.

என்னுடைய இடத்தில் மட்டும் வகுப்புகள் எடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் எந்த ஊரிலிருந்தாலும் அவர்கள் கேட்கும் பயிற்சிகளுக்கேற்ப தங்கியிருந்து கற்பிக்கிறேன். இலங்கைக்குக்கூடச் சென்று பத்து நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள அகதிகளுக்குத் தொழில் பயிற்சி அளித்துவந்தேன்” என்கிறார்.

அகதிகளுக்குப் பயிற்சி :

தமிழ்நாட்டிலும் அறக்கட்டளைகள் மூலம் அகதிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கும் சித்ரா, அதேபோல புதுச்சேரி, திருச்செந்தூர், ஈரோடு, குன்னூர், மதுரை போன்ற ஊர்களுக்கும் சென்று வகுப்புகள் எடுத்திருக்கிறார்.

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill

தன்னிடம் கற்றுக்கொண்ட பெண்களுக்கு வருமானத்தைத் தரவேண்டும் என்பதற்காகத் தனியார் நிறுவனங்களில் ஆர்டர்கள் எடுத்துச் செய்துதருகிறார். சட்டைகள், சீருடைகள், நைட்டிஸ், இன்ஸ்கர்ட், குர்தீஸ், ஹேண்ட் பேக் போன்றவற்றைத் தயாரித்து கொடுக்கிறார். கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டது. வழக்கமாக அவருக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துவந்தது.

பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் :

“நம்மால் மற்றவர்களுக்குக் கொடுக்கமுடிந்தது பணத்தைவிட நேரம்தான். அதாவது ஒரு தொழிலைக் கற்றுக்கொடுத்தால், அதை வைத்து முன்னேறிக் கொள்ளலாம். இப்படி வாழ்வாதாரம் தேடிய பல பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

1000-types-of-free-training-for-the-disabled-and- the-mentally-ill

இன்னும் பல பெண்களுக்குத் தொழில் பயிற்சிகள் வழங்கி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் என் எதிர்காலத் திட்டமாக இருக்கிறது. பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும்” என்று நம்பிக்கையூட்டுகிறார் சித்ரா லிங்கேஸ்வரன்.

-சுந்தரபுத்தன்

Related Posts
i-put-up-a-newspaper-for-a-salary-of-300-rupees-success-story-of-ifs-officer-balamurugan
Read More

“300 ரூபாய் சம்பளத்திற்காகச் செய்தித்தாள் போட்டேன்” – ஐ.எஃப்.எஸ் அதிகாரி பாலமுருகனின் வெற்றிக்கதை

சிறுவயதில் குடும்ப வறுமை காரணமாக வீடுவீடாக செய்தித்தாள் போடும் வேலை பார்த்து, பின்னாளில் ஒருவர் மிகப் பெரிய பதவிக்கு முன்னேறியவர் என்றவுடன் உடனே நம்…
gandhi-washing-dishes-for-diwali-a-true-story-in-london
Read More

தீபாவளி விருந்திற்காகப் பாத்திரம் கழுவிய காந்தி – லண்டனில் நடந்த நிஜக் கதை

வ.வெ.சு. ஐயர் லண்டனிலிருந்த காலம். அதாவது 1910 ஆண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஐயருடன் சேர்ந்து டி.எஸ்.எஸ் ராஜன் என்பவர் இந்தியன் ஹவுஸ்’…
coronavirus-come-from-stifling-bat-research
Read More

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? – திணற வைக்கும் வவ்வால் ஆராய்ச்சி

உலகம் முழுவதும் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக…
broken-karunanidhi-statue-what-happened-on
Read More

உடைக்கப்பட்ட கருணாநிதி சிலை – அன்று நடந்தது என்ன?

“சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் மீண்டும் சிலை அமைக்கப்படும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…
Total
4
Share