பென்சிலை வைத்தே பேர் எடுத்த ஆசிரியர் ராஜேஷ்

rajesh-the-teacher-who- took-the-pencil
[speaker]

பென்சில் நுனியில் பல வடிவங்களைச் செதுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ராஜேஷ், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் புதிய முயற்சியை மேற்கொண்டார். மலையாள திரைப்படத்துக்குக் கிடைத்த தேசிய விருதுகளையும், தேசிய விருது கிடைத்த படங்களின் பெயர்களையும் ஒவ்வொரு பென்சில் மீதும் செதுக்கி அசத்தியுள்ளார்.

குழந்தைகள் பென்சிலை சீவும்போது இறுதியில் வரும் கூர்மையான பகுதியில் அழகிய சிலைகளை செதுக்க முடியுமா? ஆம், முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கேரளாவின் அலுவாவைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ராஜேஷ். பென்சிலில் ஓவியம் மட்டுமல்ல எழுத்துகளையும் செதுக்கி சாதனை படைத்துள்ளார்.

10 ஆண்டுகளாகப் பயிற்சி :

இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் பென்சிலின் மேல் பகுதியை நீக்கி உள்ளே இருக்கும் கிராபைட்டில் எழுத்துகளை உருவாக்கினேன். பென்சில் கிராபைட்டில் ஓவியம் வரைவது தொடர்பாக 10 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறேன். பென்சிலில் எழுத்துகளை செதுக்கப் பயிற்சி பெற்றதும், மெதுவாக சிலைகளையும் செதுக்க முயற்சிக்க வேண்டும்.

பென்சில் கார்பைட்டில் சிலை செதுக்குவது என்பது ஓவியக் கலைஞர்களின் விடாமுயற்சியை சோதிக்கிறது. பென்சில் கிராபைட்டிலிருந்து மைக்ரோ சிற்பங்களை உருவாக்கும் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய சிற்பி சலாவத் ஃபிடாயின் கூற்றுப்படி, இது ஒரு சவால் ஆகும்.

rajesh-the-teacher-who- took-the-pencil

கிராபைட் ஒரு சுவாரஸ்யமான பொருள் ஆகும். எளிதில் உடையக்கூடியது. ஒவ்வொரு முறையும் சிற்பத்தைச் செதுக்க ஆரம்பிக்கும்போது, முடிக்க முடியுமா? என்ற சந்தேகமும் என்னுள் எழுந்ததுண்டு. `நான் எப்போதும் என்னை சுயபரிசோதனை செய்துகொண்டு, மனித திறன்களின் எல்லைகளைத் தேடுகிறேன்’ என்று ஃபிடாய் தமது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருப்பது உண்மையே.

பென்சிலின் மேல் பாகத்தில் எழுத்துகளை செதுக்குவதை பொது முடக்கத்தின்போதுதான் சோதித்துப் பார்த்தேன். இது என்னை உலக அளவிலான பென்சில் ஓவியராக முன்னிறுத்தியுள்ளது.

55 பென்சில்கள் வீண் :

பென்சில் சிற்பம் செதுக்கி உலக சாதனை படைத்தவர்களால் நான் ஈர்க்கப்பட்டேன். திரைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். பொது முடக்கத்தின்போது, மலையாள திரைத்துறையில் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்களை பென்சில் கிராபைட்டில் செதுக்கத் தொடங்கினேன்.

rajesh-the-teacher-who- took-the-pencil

தொடக்கத்தில் 55 பென்சில்களை வீணடித்தேன். கிராபைட் உடைந்துகொண்டே இருந்ததால் தோல்வியைச் சந்தித்தேன். எனினும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு நினைத்ததைச் சாதித்து முடித்தேன். கொரோனாவின் முதல் அலையில் தொடங்கிய பணியை இரண்டாவது அலையில்தான் முடித்தேன்.

தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற 16 மலையாள நடிகர்களின் பெயர்களை 16 பென்சில்களில் செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனை மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் சமர்ப்பிக்கவும் விரும்புகின்றேன். பென்சிலில் சிலைகளைச் செதுக்க சிறு கத்தியையும், ஊசிகளையும் பயன்படுத்துகிறேன்.

பல திறமைகள் :

என்னைப் பொறுத்தவரை, பென்சிலில் சிலை வடிப்பது மனதில் உள்ள ஆயிரம் முடிச்சுகளை அவிழ்ப்பது போன்றது. கிராபைட் ஒரு மென்மையான பொருள். அதனை கடினமாகப் பயன்படுத்த முடியாது. குழந்தையைக் கையாளுவதைப் போல் பென்சில் கிராபைட்டை மென்மையாகக் கையாள வேண்டும்” என்றார்.

rajesh-the-teacher-who- took-the-pencil

ஓவியத்தில் பட்டம் பெற்ற 30 வயதான ராஜேஷ் காலாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மூங்கில் ஓவியம், பாட்டில் ஓவியம், பென்சில் ஓவியம் மற்றும் மரத்தில் சிலை செதுக்குவது போன்ற பல திறமைகளைக் கொண்டவராக விளங்குகிறார்.

-எம்.மோகன்

Related Posts
travel-tourism/khajuraho-beyond-kamasutra-a-potpourri-of-art-culture-and-spirituality
Read More

காமசூத்ரா டு காலபொக்கிஷம்! – கலைநயம் மிக்க கஜுராஹோ

காமசூத்ராவுக்கு அடுத்தபடியாக இந்து மத தத்துவங்களான தர்மம், காமம், அர்த்த மற்றும் மோட்சத்தை மையமாகக் கொண்டு கஜுராஹோ சிற்பக்கலை முக்கிய இடத்தை வகிக்கிறது. கஜுராஹோ…
postal-workers-delivery-executives-who-worked-tirelessly-amid-lockdowns
Read More

நிஜ ஹீரோக்கள் : கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தபால்காரர்கள்

கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியபோது, சளைக்காமல் சேவை செய்தவர்கள் தபால் ஊழியர்களும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் பிரதிநிதிகளும்தான். இந்தியாவில் 15 லட்சம்…
cinema-bollywood-photography-single-screen-multiplex-history-documentation
Read More

பழைய சினிமா தியேட்டர்களைத் தேடி 32,000 கி.மீ பயணித்த புகைப்படக் கலைஞர்

மாறிப்போன நவீன காலத்தில் எல்லாமே மாடலாகிவிட்டது. அந்தக் காலத்தில் பத்து ஊர்களுக்கு நடுவே ஒரு தியேட்டர் இருக்கும். அதுவும் ஒரு ஸ்க்ரீனுடன். ஆனால், இப்போது…
vadakkekara-panchayat-bags-5-agriculture-awards-including-best-student-farmer
Read More

வீட்டிலேயே சிறப்பாக விவசாயம்.. நல்ல அறுவடை.. – முதல் பரிசை வென்ற மாணவி!

கேரள மாநிலம் வடக்கேகரா கிராம பஞ்சாயத்துக்கு சிறந்த மாணவர் விவசாயி விருது உட்பட 5 விருதுகள் கிடைத்துள்ளன. கேரள அரசின் விவசாய வளர்ச்சித் துறை…
Total
4
Share