இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் ஓஸ்லா

osla-is-a-beautiful-village-with-little-natural- beauty
[speaker]

கொரோனாவிற்குப் பிறகு நாட்டில் மலையேற்றம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவ்வாறு மலையேற்றம் செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறது ஓர் அழகிய கிராமம். நவீன இந்தியாவில் மக்களின் பண்டைய வாழ்வியல் முறையைக் காண ஆசைப்படுபவர்கள் நிச்சயம் அந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஓஸ்லா கிராமம். இந்த நவீன உலகத்திற்கும், அந்தக் கிராமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு மொத்தம் 250 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். எல்லா வீடுகளும் பாறை கற்களால் அடுக்கப்பட்ட மேற்கூரையைக் கொண்டுள்ளன. உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை சாகுபடி கிராம மக்களின் உணவுத் தேவையையும், வாழ்வாதாரத்தையும் காக்கிறது.

அதுமட்டுமின்றி அனைத்து கிராமத்தினரும் தங்களது வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்துவருகின்றனர். கிராம மக்கள் அனைவரும் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிகிறார்கள். அதேபோல பெண்களும் பழங்கால அணிகலன்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிராமத்தின் வாழ்வியல் முறை வெளியூர் மக்களை பழங்காலத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

டிரக்கிங் :

இதற்காகவே நாடு முழுவதிலும் உள்ள மலையேற்றம் செய்பவர்கள் ஓஸ்லா கிராமத்தில் டிரக்கிங் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இந்தக் கிராமத்தில் மகாபாரத்தில் வரும் துரியோதனன் வாழ்ந்ததாக வரலாற்று தகவல்கள் உள்ளன.

கீழ் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்ய வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பாதைகளில் மலையேற்றம் செய்தால் ஓஸ்லா கிராமம் வந்தடைகிறது.

osla-is-a-beautiful-village-with-little-natural- beauty

அங்கு சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க விடுதிகள் உள்ளன. கிராம மக்கள் வெளியூர் மக்களை கணிவுடன் நடத்துகிறார்கள். கிராம சிறுவர்கள் வெளியூரிலிருந்து வருபவர்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். கிராமத்தில் உள்ள மர கோயில் சிறப்பு இடமாக கருதப்படுகிறது.

இவர்களுக்கு என தனிச்சட்டத்தைப் பின் பற்றி கிராம மக்கள் வாழ்கிறார்கள். முழுக்க முழுக்க பண்டைய கால வாழ்க்கையையே வாழ்கிறார்கள். இது போன்று எண்ணற்ற அனுபவங்களை ஓஸ்லா கிராமத்திற்கு மலையேற்றம் செய்பவர்கள் பெறுகிறார்கள்.

-கோ.கிருஷ்ணன்

Related Posts
secret-family-in-the-same-room-for-10-years- married-kerala-couple
Read More

ஒரே அறையில் 10 ஆண்டுகள் ரகசிய குடும்பம் – திருமணம் செய்த கேரள ஜோடி

யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்திய காதலர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தைச்…
brahmi-inscription-of-ashokan-period-found-in-manjira-valley-in-telangana
Read More

தெலங்கானாவில் முதன்முறையாக அசோகர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரா பள்ளத்தாக்கில் அசோகர் காலத்துப் பிராமி கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பிரக்ரிட் மொழியில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அதில்…
andhra-official-helps-adivasis-remote-area-build-school
Read More

மாவோயிஸ்ட் பகுதியில் மகத்தான பணி : பள்ளிக்கூடம் கட்டிய ஆந்திர அரசு அதிகாரி

ஆந்திராவில் ஆதிவாசி குழந்தைகளுக்காகப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து உதவி செய்திருக்கிறார் அரசு அதிகாரி. ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சிந்துரு பகுதியில் அமைந்துள்ளது…
governor-honours-migrant-worker-who-rescued-2-men-from-tidal-waves
Read More

கடலில் தவித்த மீனவர்களைக் காப்பாற்றியவருக்குக் கேரள ஆளுநர் விருது

கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட 2 மீனவர்களைக் காப்பாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர் சுப்ரடோ பிஸ்வாசுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேரில் அழைத்துப் பாராட்டி…
Total
2
Share