இந்துக்கள் தொகுதியில் வெற்றிபெற்ற முஸ்லிம் வேட்பாளர்

muslim-candidate-wins-up-panchayat-election-in-hindu-dominated-village

இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் வசிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் பஞ்சாயத்துத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இந்து மற்றும் முஸ்லிம்களின் சகோதரத்துவத்துக்கு சிறந்து எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா அடுத்துள்ள ராஜன்பூர் கிராமம் திகழ்கிறது.

muslim-candidate-wins-up-panchayat-election-in-hindu-dominated-village

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்தக் கிராமத்தில், ஹபீஜ் அஜீம் உதீனின் குடும்பம் மட்டும்தான் முஸ்லிம். இந்தக் கிராமத்துக்கு நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஹபீஜ் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். தாங்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை ராஜன்பூர் கிராம மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

வெற்றிக்காக கோயில்களில் மக்கள் பிரார்த்தனை :

தமது வெற்றி குறித்து அஜீம், “பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிடவும், அதில் வெற்றி பெறவும் எங்கள் கிராமத்து மக்களின் அன்புதான் காரணம். எங்கள் கிராமத்தைப் பெரிய குடும்பமாகவே பார்க்கிறோம்.

muslim-candidate-wins-up-panchayat-election-in-hindu-dominated-village

எங்கள் கிராமத்தில் 3 கோயில்கள் உள்ளன. எனது வெற்றிக்காக அந்தக் கோயில்களில் மக்கள் பிரார்த்திக் கொண்டார்கள். இதிலிருந்தே அவர்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஒவ்வொரு பண்டிகையையும் நாங்கள் இணைந்தே கொண்டாடுவோம். எங்கள் கிராமத்தின் வளர்ச்சியே என் ஒரே நோக்கமாக இருக்கும்” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
a-74-year-old-man-and-the-sea-malaysians-mission-to-rid-beaches-of-glass
Read More

கடற்கரையில் கிடைக்கும் பாட்டில்களைப் பாதுகாக்கும் மலேசியத் தாத்தா!

கடந்த 15 ஆண்டுகளாகக் கடற்கரையோரம் வீசப்படும் பாட்டில்களைச் சேகரித்து, மரத்திலான பாட்டில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார், மலேசியாவைச் சேர்ந்த 74 வயது தெங்கு முகமது…
hails-silent-service-of-man-giving-free-food-to-the-poor
Read More

ஏழைகளின் பசியைப் போக்கும் வள்ளல்! – சர்தார்ஜிக்கு குவியும் பாராட்டுகள்

சப்தமே இன்றி ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் சர்தார்ஜி ஒருவரை, ட்விட்டர் மூலம் வெளி உலகுக்குப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் சஞ்சய் அரோரா என்பவர். இது குறித்து…
hindus-and-muslims-celebrated-durga-puja-together
Read More

துர்கா பூஜையை இணைந்து கொண்டாடிய இந்து – முஸ்லிம்கள்! – மணக்கும் நல்லிணக்கம்

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் துர்கா பூஜையை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடி, மதநல்லிணக்கத்துக்கு மகுடம் சூட்டியுள்ளனர். அகர்தலா மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட…
75yearold-woman-hugs-ppe-clad-doctor-after-winning-battle-with-covid
Read More

கொரோனாவிலிருந்து மீண்ட 75 வயது பாட்டி! – மருத்துவரை கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர்

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. வரிசையில் காத்திருந்து பிணங்களை எரிக்க வேண்டிய கொடுமையான நிகழ்வுகள் வடமாநிலங்களில் அரங்கேறிக்…
Total
0
Share