பழங்குடி மக்களின் வாழ்வை 3 ஆண்டுகளில் உயர்த்திய கேரள சங்கம்

kerala-sangam-raised-the-lives-of-tribal-people- in-3-years
[speaker]

கடந்த 3 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் வன உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு வாங்கி, கேரள சொசைட்டி விற்பனை செய்கிறது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்யும் வன பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைவாகவே விற்பனை செய்து வந்தனர்.

ஏமாற்றிய இடைத்தரகர்கள் :

பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில், வனத்தில் கிடைக்கும் தேன், மஞ்சள், வாசனைத் திரவியங்களை பட்டிகா வர்கா சேவா சொஸைட்டி மூலம் கேரளா முழுவதும் விற்கப்பட்டு வருகிறது.

இதில் அரசின் பங்களிப்போ, உதவியோ ஏதும் இல்லை. பழங்குடியின செயல்பாட்டாளர்கள் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சொஸைட்டியைத் தொடங்கினர். இதில், காட்டுநாயக்கன் மற்றும் பனியா சமுதாயத்தைச் சேர்ந்த 200 பழங்குடியின குடும்பங்கள் பங்கெடுத்தனர். இந்த சொஸைட்டி நிலாம்பூரில் உள்ள முண்டேரியில் செயல்படுகிறது.

பட்டிகா வர்கா சேவா சொசைட்டியின் செயலாளர் சித்ரா, “பழங்குடியின மக்கள் விளைவித்த பொருட்களை மிகக் குறைந்த விலை கொடுத்து இடைத்தரகர்கள் ஏமாற்றி வந்தனர். உதாரணத்துக்கு, ஒரு கிலோ வன தேன் விலை ரூ.650 முதல் 800 வரை விற்கிறது.

ஆனால், இடைத்தரகர்களோ பழங்குடி மக்களுக்கு ரூ.250 முதல் 300 வரை மட்டுமே கொடுத்தனர். மதுபானங்களைக் கொடுத்தும் பலர் வாங்கிச் செல்வர். தற்போது நியாயமான விலைக்குப் பழங்குடியின மக்களிடம் விளைபொருட்களை வாங்குகிறோம். எந்த கலப்படமும் இன்றி, நேரடியாக பழங்குடியின மக்களிடமிருந்தே பொருட்களைப் பெறுகிறோம்.

சொசைட்டி மூலம் வேலைவாய்ப்பு :

நாங்கள் விற்கும் பொருட்களிலேயே வன தேன் தான் முக்கிமானதாகும். மருத்துவப் பயன்பாட்டுக்கான வன தேன் அரிதாகக் கிடைப்பதால் அதன் விலை அதிகம்.

kerala-sangam-raised-the-lives-of-tribal-people- in-3-years

அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள பாறைகளிலும் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. அதிலிருந்து தேனை எடுக்கும் பணியை காட்டுநாயக்கன் சமுதாயத்தினர் செய்கின்றனர்.

வனத்தில் கிடைக்கும் தேனை, ஒரு கிலோ ரூ.2,500க்கு விற்பனை செய்கிறோம். பழங்குடியின பெண்களுக்கும் எங்கள் சொசைட்டி மூலம் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம். கணவனை இழந்து 4 குழந்தைகளுடன் வாழும் 34 வயதான சுமா என்ற பழங்குடியின பெண்தான், எங்கள் சொஸைட்டிக்கு உதவி வருகிறார்.

தலைமுடி எண்ணெய் :

சமுதாயத்தில் வேலை இல்லை என்றால், வாழ்க்கையை நடத்துவது மிகக் கடினம். அதனால்தான் சுமா போன்ற பெண்களுக்கு பொருட்களை பேக்கிங் செய்வது போன்ற பணிகளைத் தந்துள்ளோம்.

காட்டுநாயக்கன் சமுதாய பெண்கள் தயாரிக்கும் `பஞ்சமி தலைமுடி எண்ணெய்’ நன்றாக விற்பனையாகிறது. இந்த எண்ணெய்யைத்தான் பழங்குடியின பெண்களும் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெய் முடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும் உதவுகிறது.

எதிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் பணத்தை எப்படிச் சேமிப்பது என்பது குறித்தும் எங்களிடம் பணியாற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளோம்” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
medtech-startup-ezerx-preventive-healthcare-diagnostic-solution-ajo
Read More

ஒரு ரூபாய் செலவில் நோயைக் கண்டறியும் சோதனைக் கருவி!

“வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்து பார்” என்று பணம் செலவாவதை வைத்து ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், இன்று அதனோடு மருத்துவமனைக்குச் சென்று பார்…
leaf-out-of-the-book-of-this-27-year-old-field-recordist-and-pay-attention-to-the-sounds
Read More

`ஒலி மயமான எதிர்காலம்’ – இயற்கை இசையைத் தேடிச் சேகரிக்கும் இளைஞர்

காட்சியின் வீரியத்தை இசை மூலம் எளிதில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதால் திரைத்துறையில் ஒலிப்பதிவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்துறையில் பல ஆண்டுகளாகத்…
child-labourer-malleshwar-rao-today-is-trying-to-make-the-world-a-better-place
Read More

அன்று குழந்தைத் தொழிலாளி… இன்று ஊரடங்கில் ஊர் பசியைப் போக்கிய கொடையாளி!

தங்கள் நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிரை அறுவடை செய்ய ஆவலோடு காத்திருந்தது நாக்பூரைச் சேர்ந்த ஓர் அழகிய விவசாயக் குடும்பம். அந்த அறுவடையில் கிடைக்கும்…
rajesh-the-teacher-who- took-the-pencil
Read More

பென்சிலை வைத்தே பேர் எடுத்த ஆசிரியர் ராஜேஷ்

பென்சில் நுனியில் பல வடிவங்களைச் செதுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ராஜேஷ், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் புதிய…
Total
3
Share