நிஜத்தில் ஒரு ஸ்பைடர் மேன் – பாறைகளில் மீது பறக்கும் சாகசக்காரர்

in-fact-a-spider-man-an-adventurer-flying-over- rocks
[speaker]

கர்நாடக மாநிலம் பாதாமி பகுதியில் உள்ள குடைவரைக் கோயில்கள் வெகு பிரபலம். ஆனால், உலக அளவில் வெளிநாட்டிரைக் கவர்ந்து ஈர்க்க முக்கிய காரணமாக இருப்பது அங்குள்ள பாறைகள் என்கின்றனர் அப்பகுதி மக்கள். பாறை ஏறுபவர்களின் சொர்க்க பூமியாகத் திகழும் பாதாமியில் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாடுகளைச் சேர்ந்த பாறை ஏறுபவர்களின் கூட்டம் அலைமோதும்.

மிகப்பெரிய பாறைகளில் ஏறி சாகசப் பயணம் செய்து வெளிநாட்டினர் அசத்துவார்கள். இதை சிறுவயதில் இருந்தே நேரில் பார்த்து வளர்ந்தவர் பாதாமி பகுதியைச் சேர்ந்த கணேஷா வட்டார். எட்டாம் வகுப்பு பயிலும்போது வெளிநாட்டினர் பயன்படுத்தும் யுக்தியைக் கையாண்டு பாறைகளில் ஏறியிருக்கிறார். இதைக் கண்டு வியந்த வெளிநாட்டினர் அடிப்படை பயிற்சியைக் கொடுத்திருக்கின்றனர்.

பாதுகாப்புக் கருவிகள் :

இதில் இன்னும் உற்சாகம் அடைந்த கணேஷா நேரம் பார்க்காமல் பாறைகளில் ஏறிப் பழகினார். இப்படியே சில ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனம் கணேஷாவிற்கு பாறை ஏறும்போது பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளை ஸ்பான்ஸர் செய்தது. பின்னர் அவர் மேலும் தீவிரமாகப் பாறைகளில் ஏறி பயிற்சியை எடுத்தார்.

in-fact-a-spider-man-an-adventurer-flying-over- rocks

இதன் பயனாக டார்ஜிலிங்கில் இலவசமாக மலையேற்ற பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கற்றுக் கொண்ட நுணுக்கங்களை வைத்து பல்வேறு பாறை ஏறும் போட்டிகளில் பங்கேற்ற கணேஷா வெற்றி பெற்றார். இதையடுத்து, சொந்த ஊர் திரும்பி பாதாமியில் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடையே பாறை ஏறும் சாகச விளையாட்டு குறித்து விழிப்புணர்வு செய்யத் தொடங்கினார்.

சிறுவர்களுக்கு பயிற்சி :

அதுமட்டுமின்றி பாதாமிக்கு வருகை தரும் 15 நாடுகளைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்களை வழிநடத்தி சாகசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உள்ளூரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பாறை ஏறும் விளையாட்டை

in-fact-a-spider-man-an-adventurer-flying-over- rocks

இலவசமாகப் பயிற்றுவிக்கிறார்.அவர்களை விளையாட்டுப் போட்டிக்கு தயார் செய்துவரும் கணேஷா, தனது மாணவர்கள் மூலம் வெற்றிகளைக் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பயணித்துவருகிறார்.

-கோ.கிருஷ்ணன்

Related Posts
karnataka-innovators-technology-to-help-visually-impaired-farmers
Read More

ஆள் இல்லாமல் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் கருவி! – ஒரு படிக்காத மேதையின் கண்டுபிடிப்பு..!

கர்நாடகாவில் ஒருவர் விவசாயிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் வகையில் ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். கர்நாடகாவின் பிஜாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ் பத்ராகோந்த். எஸ்எஸ்எல்சி…
raghurajpur-artist-village-puri-odisha
Read More

உலகை வியக்க வைக்கும் ஒடிசா ஓவிய கிராமம் – அழகிய கலைநயம்

ஒடிசா மாநிலம் பூரி அடுத்த ரகுராஜ்பூர் என்ற கிராமமே ஓவியங்களால் மூழ்கிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் ஓவியம். இந்தக் கிராம மக்களின் வாழ்க்கையில் இரண்டறக்…
hyderabad-couple-are-roadschooling-with-twin-daughters
Read More

“சாலைகள்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம்” – தனித்துவம் மிக்க தம்பதி

ஹைதராபாத் தம்பதி தங்கள் 2 பெண் குழந்தைகளுடன் தொடர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணத்திலேயே அவர்களுக்குப் படிப்பிலிருந்து வாழ்க்கை வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.…
girish-bharadwajhow-a-hole-in-a-boat-led-to-the-emergence-of-bridge-man-of-india
Read More

30 ஆண்டுகளில் 300 ஆற்றுப் பாலங்கள் : குறைந்த செலவில் கட்டிய `பிரிட்ஜ் மேன்’

ஆற்றைக் கடக்கச் சிரமப்பட்ட மக்களுக்காக இதுவரை 130 பாலங்களை அமைத்துக் கொடுத்து `பிரிட்ஜ் மேன்’ என்ற பெயரையும் பெற்றுள்ளார் 70 வயது கிரிஷ் பரத்வாஜ்.…
Total
3
Share