மாடித் தோட்டம் மூலம் பண்டமாற்று முறைக்கு மாறிய 800 பேர்

800-people-converted-to-barter-through-the- terrace-garden
[speaker]

2017 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் மணி ரத்னம் சொந்தமாக வீடு கட்டி குடிபோனார். சார்ட்டட் அக்கவுன்டன்டான அவர், தோட்டத்தில் செடிகள் வளர்ப்பதிலும் சிறு வயதிலிருந்தே ஆர்வம் காட்டி வருகிறார்.

சொந்த வீட்டுக்குச் சென்றதும், மேல் மாடியில் தோட்டம் அமைத்தார். கடந்த 3 ஆண்டுகளில் 50 வகையான மூலிகைத் தாவரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கிறார். அதுவும் ரசாயன உரம் ஏதும் பயன்படுத்துவதில்லை என்பதுதான் சிறப்பான விஷயம்.

மாடித் தோட்டத்தில் விதைகள் மற்றும் தண்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்கிறார். இயற்கை உரம், வயல்களிலிருந்து எடுத்துவந்த மண் ஆகியவற்றையே பயன்படுத்துகிறார். மாடித் தோட்டத்தை இவர் மட்டும் அமைக்கவில்லை, பண்டர் பிருந்தாவனம் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் குழுவாக உள்ள மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த 800 பேர் மாடித் தோட்டம் அமைத்துச் சிறப்பாக பராமரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இயற்கை உரம் :

மாடித் தோட்டம் அமைக்கும் குழுவை மணியும் கவுரி என்பவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கினர். இதன்மூலம் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவரும் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். விதைகளையும் செடிகளையும் பரிமாறிக் கொண்டனர். அதோடு, செடிகள் வளர்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் இந்தக் குழுவினர் போக்கிக் கொண்டனர்.

800-people-converted-to-barter-through-the- terrace-garden

இது குறித்து மணி கூறுகையில், “எங்கள் குழுவில் உள்ள யாரும் ரசாயன உரத்தையோ பூச்சிக் கொல்லி மருந்துகளையோ பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களை மொத்தமாக வாங்கி நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் தோட்டக்குழுவில் உள்ளவர்களுக்கு சமூக உணர்வை மாடித் தோட்டம் வழங்கியுள்ளது. பல செடிகளை சோதனை அடிப்படையில் வளர்க்க எங்கள் குழு வழிவகுத்தது” என்றார்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மாடித் தோட்டம் வைத்துள்ளவர்கள், அபூர்வ செடிகளையும் வளர்க்கிறார்கள். அதன் விதைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். அதோடு, பண்டமாற்று முறைபோல், விளைபொருட்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். மாடித் தோட்டம் மூலம் மச்சிலிப்பட்டினம் மக்கள் சமூக ஒற்றுமையைப் பேணிக் காக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.மோகன்
-நன்றி: தி நியூஸ் மினிட்

Related Posts
maharashtra-beed-farmer-earns-lakhs-organic-fruit
Read More

காய்கள் காசாகிறது; பழங்கள் பணமாகிறது: சாதித்துக் காட்டிய விவசாயி

மாற்றுப் பயிர்களை அல்லது புதிய நடவு முறையைப் பின்பற்றுமாறு விவசாயிகளை அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட மாவட்டம்…
kolkata-couple-started-the-free-street-library-provided-bookshelf-and-books
Read More

இலவச தெருவோர நூலகம் அமைத்த கொல்கத்தா தம்பதி

புத்தக வாசிப்பை கொல்கத்தா மக்கள் நேசிப்பதைப் பார்த்த காளிதாஸ் மற்றும் கும்கும் தம்பதி தெருவோர இலவச நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். பயன்படுத்தாத பழைய குளிர்சாதனப் பெட்டியை…
142-times-larger-than-the-sun-the-miracle-black-hole-discovery
Read More

சூரியனைவிட 142 மடங்கு பெரியது : அதிசய கருந்துளை கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையை, வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஹெச்ஆர் 6819 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, சூரியனைவிட 142…
solar-power-pumps-generator-lights-village-cost-government-scheme-csr-tribal-pm-modi
Read More

15 ஆண்டுக்கால முயற்சி : சூரிய சக்தியால் மலைக் கிராமத்தை மாற்றிய சமூக சேவகர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே நகரிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது பாரிப்பாடா கிராமம். இந்தக் கிராமத்தில் அமைதியாகப் புரட்சி ஒன்று நடந்து முடிந்துள்ளது. இந்த…
Total
1
Share