உலக விருது பெற்ற 12 வயது சிறுவன் – மும்பை ஏரியை மீட்டவர்

world-award-winning-12-year-old-boy-rescuer-of- mumbai-lake
[speaker]

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும் 12 வயது மும்பை சிறுவன் அயான் சங்ட்டாவை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு `2021 சர்வதேச இளைஞர் சுற்றுச்சூழல் ஹீரோ’ என்ற அமெரிக்காவின் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தைச் செயல்படுத்திய 8 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 3 ஆவது இடத்தில் அயான் வென்றுள்ளார். மும்பையில் உள்ள பொவாய் ஏரியை பாதுகாக்கவும், அதனைச் சீரமைக்கவும் மேற்கொண்ட முயற்சிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து இயற்கையைப் பாதுகாக்க பணியாற்றிய 25 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்று அயான் அசத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு :

இது குறித்து அயான், “மும்பையின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பொவாய் ஏரியை உயிர்ப்பித்தேன். குப்பைகள் கொட்டப்பட்டு அழியும் நிலையிலிருந்த அந்த ஏரியை மீட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தது பெருமை அளிப்பதாக உள்ளது. மாசு குறித்தும், ஏரியைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் அதன்சுற்றுச்சூழலைப்பாதுகாத்தல் போன்ற திட்டங்களை நான

செயல்படுத்தி வெற்றி கண்டேன்.என்ஜிஓக்களுடன் இணைந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன். பொவாய் ஏரியை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மும்பை நகரத்தில் சுற்றுச்சூழல்

world-award-winning-12-year-old-boy-rescuer-of- mumbai-lake

சமநிலையைக் கொண்டு வர உதவுவதோடு, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் என் திட்டம் உதவும்” என்றார்.அடுத்த தலைமுறையின் தலைவர்களாக அயான் போன்ற குழந்தைகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். உலக அளவிலான சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வு காண அவர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை.

இது போன்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் திட்டங்கள் சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் உலக அளவிலான பருவநிலை மாற்ற சவால்களுக்கு அவர்களால் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

-எம்.மோகன்

Related Posts
transgenders-take-up-silambam-to-break-gender-barriers-in-sports
Read More

பாலின தடையை தகர்த்து சிலம்பத்தை கையில் எடுத்த திருநங்கைகள்

தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றது. பழைமையான இந்த வீர விளையாட்டை, விளையாட்டுப் போட்டிகளிலும் இணைக்க வேண்டும் என்கின்றனர் கோயம்புத்தூரைச்…
heirs-of-lively-athletes-on-social-media
Read More

சமூக ஊடகங்களில் கலகலப்பூட்டும் விளையாட்டு வீரர்களின் வாரிசுகள்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களுக்கென சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டுள்ள நிலையில், அவர்களின் பிள்ளைகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜொலித்து வருகின்றனர். தனி…
srihari-nataraj-on-challenges-of-being-olympic
Read More

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் துடிக்கும் நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நட்ராஜ் ! – 20 வயதில் எனர்ஜி

நீச்சல் விளையாட்டில் இந்தியாவைப் பெருமைப்பட வைத்த வீரர்களுள் ஒருவர் ஸ்ரீஹரி நட்ராஜ். இவர் 2001ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவரின்…
euro-2020-day-5-highlights-ronaldo-creates-history-in-budapest-france-overcomes-german-challeng
Read More

யுரோ கோப்பை கால்பந்து 5 நாள் அலசல்! – ரொனால்டோ சாதனை; பிரான்சு வெற்றி !

கடந்த சில நாட்களாக பத்திரிகை செய்திகளில் பேசு பொருளாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் ரொனால்டோ…
Total
11
Share