சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

virat-kohli-breaks-sachin-record
[speaker]

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய உலக வரலாறு படைத்திருக்கிறார். இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் விளையாடிய விராட் கோலி புதிய மைல்கல்லை அடைந்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், அது ஆட்டத்தின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

23000 ரன்கள் :

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தி, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் 23000 ரன்களை எட்டிய வீரராக உருவெடுத்துள்ளார்.

தனது 490 வது இன்னிங்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தான் சந்தித்த முதல் ஓவரில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதுவரை ஏழு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே 23000 ரன்களைக் கடந்துள்ளனர். அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

virat-kohli-breaks-sachin-record

ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், குமார் சங்கக்கார, ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ள விராட் கோலி, சர்வதேசப் போட்டிகளில் 23 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 23000 ரன்களைக் கடந்த வீரர் என்றும் பெயர் எடுத்துள்ளார்;.

-கோ.கிருஷ்ணன்

Related Posts
india-s-neymar-dindigul-romero
Read More

`இந்தியாவின் நெய்மர்’ திண்டுக்கல் ரோமெரியோ!

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில்…
hockey man jaber iqbal
Read More

ஹாக்கி விளையாட்டு நாயகன் ஜாபர் இக்பால்

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி விளங்கிவருகிறது. இந்த விளையாட்டில் மாபெரும் சிகரத்தை அடைந்தவர் ஜாபர் இக்பால். இவர் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன்.…
don-bradman-100th-century-the-day-engraved- in-history
Read More

டான் பிராட்மேன் 100வது சதம் – வரலாற்றில் பொறிக்கப்பட்ட நாள்

சர்வதேச அரங்கிலான முதல் தர கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் குரு டான் பிராட்மேன் தனது முதல்தர கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை அடித்த தினம் இன்றாகும்.…
i-dread-sharing-a-room-with-neeraj-even-though-he-is-an-olympic-champion-indian-player
Read More

“ஒரே அறையில் நீரஜுடன் தங்க பயந்தேன்” – தேஜஸ்வின் ஷங்கர்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் அறையைப் பகிர்ந்துகொள்ள பயப்படுவதாக இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் ஷங்கர் வேடிக்கையாகக் கூறியிருக்கிறார். ஈட்டி எறிதலில்…
Total
6
Share