கூடைப்பந்து விளையாட்டு வீரரான லெப்ரான் ஜேம்ஸ் 126.9 மில்லியன் டாலருடன், (இந்திய மதிப்பில் ரூ. 1,022 கோடி) உலகில் அதிக வருமானம் ஈட்டுபவராக முதலிடத்தில் உள்ளார்.
கூடைப்பந்து வீரர் முதலிடம்
இவருக்கு சம்பளத்துடன் நைக், பெப்சிகோ, வால்மார்ட், ஏடி அண்ட் டி மற்றும் கிரிப்டோ.காம் போன்ற பிராண்ட் பார்ட்னர்கள் ராயல்டி கொடுக்கின்றன.

கால்பந்து வீரர்கள் ஆதிக்கம்
பிரபல கால்பந்தாட்ட வீரர்களான லியோனல் மெஸ்ஸி 122 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 989 கோடி) வருமானத்துடன் இரண்டாவது இடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 115 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 932 கோடி) வருமானத்துடன் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர். இந்த வருமானம் என்பது அவர்களின் சம்பளம் மற்றும் மற்ற ஒப்புதல் வருவாய்களும் அடங்கும்.

இந்த டாப் பட்டியலில் பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் 103 மில்லியன் டாலருடன் (இந்திய மதிப்பில் ரூ. 835 கோடி) 4வது இடத்தில் உள்ளார்.
100 பேரில் விராட் கோலி
உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்த 100 விளையாட்டு வீரர்களில் 10 விதமான விளையாட்டுகளைச் சேர்ந்த, 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
இவர்களின் மொத்த வருமானம் என்பது 4.46 பில்லியன் டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரம் கோடி).

டாப் 100ல் இடம் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான். இவர் 33.9 மில்லியன் டாலருடன் (இந்திய மதிப்பில் ரூ. 275 கோடி ) 61ஆவது இடத்தில் உள்ளார்.
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்த ஆண்டு 85.7 மில்லியன் டாலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ. 695 கோடி ) 8ஆவது இடத்தில் உள்ளார்.
பெண்களில் நவாமி ஒசாகா
பெண்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில், டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா உள்ளார். இவரின் வருமானம் 53.2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 431 கோடி ) பட்டியலில் இவர் 20ஆவது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு ஓய்வுபெற்ற செரீனா வில்லியம்ஸ் 35.3 மில்லியன் டாலருடன் (இந்திய மதிப்பில் ரூ. 286 கோடி ) 52வது இடத்தில் உள்ளார். இவர் அதிக சம்பளம் பெறும் இரண்டாவது பெண் வீராங்கனை ஆவார்.
-எம். மோகன்