சச்சினை மகிழ்வித்த செல்ல நாய்க்குட்டி – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ட்வீட்

sachin-tendulkar-introduces-fans-to-his-new-pet
[speaker]

தமது புதிய தோழனை ரசிகர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோதான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த நண்பர் வேறு யாருமல்ல… சச்சினின் செல்ல நாய்க்குட்டி தான்.

சமூக ஊடகங்களில் பரவல் :

ட்விட்டரில் தமது செல்லப்பிராணியின் படத்தையும் வீடியோவையும் பகிர்ந்தபின், அது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. ட்விட்டரில் அவர் குறிப்பிடும்போது, “எனது புது நண்பர் ஸ்பைக் இன்று சமூக ஊடகத்தில் அறிமுகமாகியுள்ளது.

sachin-tendulkar-introduces-fans-to-his-new-pet

வாழ்த்துங்கள், ஒரு ‘ஹாய்’ சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பகிர்ந்த சில மணி நேரங்களில் செல்ல நாய்க்குட்டியுடன் சச்சின் இருக்கும் படத்தையும் வீடியோவையும் 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

விலங்குகளை ட்விட்டரில் பகிர்வது சச்சினுக்கு இது புதிதல்ல. ஏற்கெனவே அவர் பறவைகள் மற்றும் பூனைகளைப் பகிர்ந்திருக்கிறார்.

பலர் பாராட்டு :

ட்விட்டரில் பகிர்ந்ததும், பலரும் அவரைப் பாராட்டிப் பின்னூட்டமிட்டுள்ளனர். ஒரு ரசிகர் தமது பின்னூட்டத்தில், நாய்களை நேசிப்பது சிறந்தது. அந்த நேசத்தை அவை உங்களுக்கு அளவுக்கு அதிகமாகத் திருப்பித் தரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,சச்சினுக்கு நல்ல நண்பனாய் இரு, அவரை விட்டுச் சென்றுவிடாதே, அவரை நன்றாகக் கவனித்துக் கொள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சச்சின் முறையான சிகிச்சை அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் வீடியோவை சச்சின் வெளியிட்டிருந்தார்.

sachin-tendulkar-introduces-fans-to-his-new-pet

சமீபத்தில், மாற்றுத் திறனாளியான ஹர்ஷத் கோதாங்கர் என்பவர் காலில் கேரம் விளையாடும் வீடியோவை ட்விட்டரில் சச்சின் பகிர்ந்திருந்தார். இது குறித்து கூறுகையில், “என்னால் முடியும் என்பதில் கோதாங்கர் உறுதியாக இருந்தார். சாத்தியமற்றது மற்றும் சாத்தியத்துக்கு இடையேயான வேறுபாடு ஒருவரின் தீர்மானத்தில்தான் உள்ளது.

என்னால் முடியும் என்ற குறிக்கோளுடன் சாத்தியமாக்கும் விஷயங்களைக் கண்டுபிடித்த அவரிடம் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

-எம்.மோகன்

Related Posts
four-balls-that-changed-the-life-of-chetan-sharma
Read More

சேத்தன் சர்மாவின் வாழ்க்கையை மாற்றிய நான்கு பந்துகள் !

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா தேர்வாகியுள்ளார். இந்தச் சூழலில் சேத்தன் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமாகப்…
manju-rani-said-i-am-happy-by-becoming-world-number-2-but-my-aim-is-to-win-olympic-medal-in-2024
Read More

உலக குத்துச்சண்டையில் தங்கத்தை தவறவிட்ட மஞ்சு ராணியின் மனம்திறந்த பேட்டி..!

ஹரியானாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான மஞ்சு ராணி அண்மையில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம்…
tendulkar-pens-emotional-note-on-coach-achrekar
Read More

`சச்சினின் இதயம்’ – குருநாதர் ராமகாந்த் அச்ரேக்கர் கதை!

ஒரு நல்ல மாணவனை உருவாக்க வேண்டும் என்றால் அவனுக்கு நல்ல ஆசிரியர் கிடைக்க வேண்டும். ஒரு ஆசிரியர் பல நல்ல மாணவர்களை உருவாக்கினால் அவர்…
kashvee-gautam-picked-for-womens-t20-challenge-in-uae
Read More

பெண்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டிக்கு காஷ்வீ கவுதம் தேர்வு : கனவு நிறைவேறியதாகப் பேட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ட்ரைல்பிளேஸர்ஸ் டி-20…
Total
0
Share