தங்கம் வென்ற பிரமோத் பகத்தை நேரில் பாராட்டிய சச்சின்

sachin-praises-gold-medalist-pramod-bhagat
[speaker]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்ததுமுடிந்தது. இத்தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பேட்மின்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஒடிசாவைச் சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். பேட்மின்டன் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் பேட்மின்டன் வீரர் பிரமோத் பகத்தின் பெயர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

sachin-praises-gold-medalist-pramod-bhagat

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத்தை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். “என்னுடைய சிறு வயது கனவு நிறைவேறியது. என்னால் இதை நம்ப முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ள பிரமோத் பகத் தனது சிறு வயதில் இருந்தே சச்சின் தமக்கு முன்மாதிரி என கூறியுள்ளார்.

-கோ.கிருஷ்ணன்

Related Posts
strength-for-the-summer-season-thennai-kuruthu
Read More

கோடைக்கு ஏற்ற புத்தம் புது சுவை! – பாண்டிபஜாரில் களைகட்டும் தென்னங்குருத்து விற்பனை

கோடைக்காலம் என்றாலே தர்ப்பூசணி, பனைநுங்கு, வெள்ளரிக்காய், இளநீர், சர்பத், பழச்சாறுகள் என வியாபாரம் களைக்கட்டும். தென்னங்குருத்து விற்பனை என்பது சென்னைவாசிகள் அதிகம் கேள்விப்படாத புதுமை.…
fencer-bhavani-devi-makes-history-qualifies-for-olympics
Read More

“4 நாட்களாக நிம்மதியான தூக்கம் இல்லை” – பவானி தேவி பரவசம்

வாள்வீச்சு போட்டியில் உலக அளவில் புகழைச் சம்பாதித்தவர் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி. இந்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார். இந்தியாவிலிருந்து…
virat-kohli-becomes-first-indian-to-cross-100-million
Read More

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன்: சாதித்த முதல் இந்தியர் விராட் கோலி!

மீண்டும் சாதித்திருக்கிறார் விராட் கோலி. வழக்கமாக மைதானத்தில் சதமடித்து சாதிக்கும் கோலி, இம்முறை இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை செய்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு படங்கள்…
dutee-chand-i-am-not-thinking-about-the-olympics
Read More

“பழையபடி திரும்ப இரண்டு மாதங்கள் தேவை” – தடகள வீராங்கனை டூட்டி சந்த்!

இந்தக் கொரோனா தொற்று இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு அவரது கனவுகளை அடைய மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது. காரணம் மே 1…
Total
15
Share