அசாமின் பெருமை `லோவ்லினா’ – இந்தியாவுக்கான ஒலிம்பிக் மங்கை!

lovlina-borgohain-early-life-education
[speaker]

ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மாஃப்டுனகோன் மெலீவாவை வீழ்த்தி இந்திய குத்துச்சண்டை வீரர் லோவ்லினா போர்கோஹெய்ன் வரவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் தனது இடத்தைப் பதிவு செய்தார். என்றாலும், அரையிறுதியில் சீனாவின் கு ஹாங்கிடம் வீழ்ந்தார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி :

இதையடுத்து பேசியிருக்கும் லோவ்லினா, “நான் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த தருணத்திற்காக கடினமாக உழைத்தேன். எனவே, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

lovlina-borgohain-early-life-education

டோக்கியோ 2020க்கான எனது கனவு நனவாகும், எனது நாட்டிற்காக தங்கத்தை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் லோவ்லினா.

இவர், 1997 அக்டோபர் 2 காந்தி பிறந்த நன்னாளில் அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் பிறந்தவர்.

அவரது பெற்றோர்கள் டிக்கென் மற்றும் மாமோனி போர்கோஹெய்ன். தந்தை டிக்கென் ஒரு சிறிய அளவிலான தொழிலதிபர். என்றாலும், தனது மகளின் லட்சியத்தை நிறைவேற்ற பல்வேறு சிக்கல்களை, குறிப்பாக நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டார்.

சகோதரிகள் தேசிய அளவில் போட்டி :

ஏனென்றால், லோவ்லினா மட்டும் அந்த வீட்டில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அவரது மூத்த இரட்டை சகோதரிகளான லிச்சா மற்றும் லிமா ஆகியோரும் கிக் பாக்ஸிங்கில் தேசிய அளவில் போட்டியிட்டனர். லோவ்லினாவும் ஒரு கிக் பாக்ஸராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

lovlina-borgohain-early-life-education

ஆனால், பின்னர் குத்துச்சண்டைக்கு மாறினார். தேசிய அளவில் தெரியவந்தது ஒரு நிகழ்வுக்கு பின்புதான்.

லோவ்லினா படித்த பார்பதர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையம் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ட்ரையல்களை நடத்தி இருக்கிறது.

அதில், லோவ்லினா பங்கேற்று சிறப்பாக செயல்பட்டபோது அதைக் கவனித்த புகழ்பெற்ற பயிற்சியாளர் பதும் போரோ 2012 இல் அவருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்க அதன்பின்பே தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார் அவர்.

சில காலங்களுக்குப் பின் தலைமை மகளிர் பயிற்சியாளர் சிவ் சிங் கீழ் லோவ்லினா பயிற்சி பெறத் தொடங்கினார்.

காமன்வெல்த் விளையாட்டு தொடர் :

லோவ்லினாவின் பாக்சிங் கரியரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது 2018 காமன்வெல்த் விளையாட்டு தொடர்தான். இதில் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவரது தேர்வு குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்த பின்னர் அது சர்ச்சையாக மாறியது.

lovlina-borgohain-early-life-education

இந்த சர்ச்சை ஒரு பெரிய ஊடகத்தில் வெளிவந்தபிறகே தான் தேர்வு செய்யப்பட்ட விவரம் லோவ்லினாவுக்குத் தெரியவந்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், காலிறுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாண்டி ரியானிடம் வெற்றியை பறிகொடுத்தார்.

ஆனால், பிப்ரவரி 2018 இல் நடைபெற்ற சர்வதேச இந்தியா ஓபன் – சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் வெல்டர்வெயிட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சர்வதேச கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

வெண்கல, வெள்ளிப் பதக்கங்கள் :

நவம்பர் 2017 இல் வியட்நாமில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், ஜூன் 2017 இல் அஸ்தானாவில் நடைபெற்ற ஜனாதிபதி கோப்பையில் வெண்கலப் பதக்கத்தையும் ஏற்கனவே வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

lovlina-borgohain-early-life-education

பின்னர் லோவ்லினா ஜூன் 2018 இல் மங்கோலியாவில் நடந்த உலான்பாதர் கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தையும், செப்டம்பர் 2018 இல் போலந்தில் நடந்த 13வது சர்வதேச சிலேசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கும் அசாம் மாநிலத்துக்கும் தொடர் பெருமைகளைத் தேடித்தந்தார்.

அர்ஜுனா விருது :

இதன்பின்பான ஆண்டுகளில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி பல்வேறு சர்வதேச தொடர்களில் வெற்றிபெற்றார்.

குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்து வரும் லோவ்லினாவை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு அவருக்கு விளையாட்டு விருதுகளில் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

lovlina-borgohain-early-life-education

இந்தப் பெருமையைக் கொடுத்த இந்திய நாட்டுக்கு தற்போது மேலும் ஒரு பெருமை தேடி வரும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வாகி இருக்கிறார்.

வாழ்த்துகள் லோவ்லினா!

-மலையரசு

Related Posts
world-award-winning-12-year-old-boy-rescuer-of- mumbai-lake
Read More

உலக விருது பெற்ற 12 வயது சிறுவன் – மும்பை ஏரியை மீட்டவர்

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும் 12 வயது மும்பை சிறுவன் அயான் சங்ட்டாவை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு `2021 சர்வதேச இளைஞர் சுற்றுச்சூழல்…
why-india-has-forgotten-its-first-dalit-cricketer
Read More

சாதிய ஒடுக்குமுறைகளை உடைத்துக் காட்டிய முதல் `தலித்’ கிரிக்கெட் வீரர்!

விளையாட்டுடன் எப்போதும் சாதி உள்ளிட்ட பிரச்னைகளைச் சேர்த்துப் பார்ப்பது இயல்பான ஒன்று அல்ல. ஏனென்றால் விளையாட்டில் ஒருவரைத் தேர்வு செய்ய அவரது திறமை மட்டுமே…
buster-nupen-cricket-great-survivor
Read More

ஒரு கண்ணை இழந்தார்.. கிரிக்கெட் வாழ்வில் வென்றார்… – நுபெனின் சாதனை சரித்திரம்

கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட நல்ல உடற்தகுதியும் சரியான கவனமும் தேவைப்படும். அந்தவகையில் ஒரு வீரர் தனது ஒரு கண் பார்வையை இழந்தும் சரியான…
indian-swimmer-srihari-nataraj-sets-100m-backstroke-national-record-misses-tokyo-2020
Read More

வென்றது தங்கம்; நழுவியது ஒலிம்பிக் வாய்ப்பு! – இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி

ஸ்ரீஹரி நடராஜன், பெங்களூருவைச் சேர்ந்த இவர் இந்திய நீச்சல் வீரர். இரண்டு தினங்கள் முன் இவர், இத்தாலியின் ரோம் நகரில் நடந்த செட்டே கோலி…
Total
1
Share