லால்ரெம்சியாமிக்கு அரசு வேலை; 25 லட்சம் – கெளரவித்த மிசோரம் முதல்வர்

job-cash-reward-for-hockey-player-lalremsiami-mizoram-chief-minister
[speaker]

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணியின் வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு அரசுப் பணியும், வீடு கட்டிக் கொள்ள இடமும் கொடுத்து மிசோரம் முதலமைச்சர் ஜொரம்தங்கா கெளரவித்துள்ளார். அதோடு, ரூ.25 லட்சம் பணமுடிப்பும் வழங்கி கெளரவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பதிவில், “லால்ரெம்சியாமிக்கு அரசு வேலையும், அவரது சொந்த ஊரில் வீடு கட்டிக் கொள்ள நிலமும் வழங்கப்படும். ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக ஏற்கெனவே ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒலிம்பிக்கில் பங்கேற்றதற்காக தற்போது அவருக்கு மேலும் ரூ.25 லட்சம் வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் வீராங்கனை :

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியினர் பிரிட்டனுக்கு எதிராக மோதியபோது, வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேர ஆட்டத்தின் போக்கால், பிரிட்டன் வென்றது.

job-cash-reward-for-hockey-player-lalremsiami-mizoram-chief-minister

வெற்றியை விளிம்பில் தவறவிட்ட இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. 21 வயதான லால்ரெம்ஷியாமி மிசோரம் மாநிலம் கொலாஷிமைச் சேர்ந்தவர். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியன் இளைஞர் ஒலிம்பிக் தகுதிப் போட்டி பாங்காக்கில் நடந்தபோது, 7 கோல்கள் அடித்து தமது அணி வெள்ளிப் பதக்கம் பெறக் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.மோகன்

Related Posts
1.5-lakh-worth-buffalo-gift-to-indian-wrestling-association
Read More

இந்திய மல்யுத்த அமைப்புக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள எருமை மாடு பரிசு

சாதனை புரியும் விளையாட்டு வீரர்கள் வித்தியாசமான பரிசுகளைப் பெறுவது புதிதல்ல. டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கு சுவிஸ் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு…
saeed-mushtaq-ali-trophy-shantha-murthy-five-wickets-win-over-mumbai-pondicherry
Read More

41 வயதில் சாதனை படைத்த புதுச்சேரி கிரிக்கெட் வீரர்..!

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் சாந்தமூர்த்தி. சிறுவயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். 17 வயது…
india-legends-vs-sri-lanka-legends-final-live-cricket
Read More

கோப்பையைத் தட்டிச் சென்ற இந்திய லெஜெண்ட்ஸ் – அபார வெற்றி

சாலைப் பாதுகாப்பிற்கான சர்வதேச கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இந்திய லெஜெண்ட்ஸ் அணி. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய…
1500-meters-at-the-age-of-19-storm-fast-bird- harmilan-kaur
Read More

19 வயதில் 1500 மீட்டர் – புயல் வேகப் பறவை ஹர்மிலன் கவுர்

விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் அனைவருக்கும் போட்டியில் வெற்றிபெற்று முதல் இடத்தைப் பெறுவது மட்டுமே இலக்கு அல்ல. எவரும் எட்ட முடியாத சாதனை படைக்க…
Total
1
Share