2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணிக்கு, இந்திய வீராங்கனைகள் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
டி20 பெண்கள் அணி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ஒவ்வொரு வருடமும் வீராங்கனைகளின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர், வீராங்கனைகளை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவித்தது வருகிறது.

அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த பெண்கள் டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
கோலோச்சும் இந்திய வீராங்கனைகள்
இந்த அணியில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 4 வீராங்கனைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 வீராங்கனைகளும், நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகளில் இருந்து தலா 1 வீராங்கனையும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த டி20 அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள்.
11 பேருக்கு வாய்ப்பு
3 ஆவது மற்றும் 4 ஆவது இடத்துக்கு நியூசிலாந்தின் ஷோபி டெவைன் மற்றும் ஆஷ் கார்ட்னெர் ஆகியோரும், 5 ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் தாஹியா மெக்ராத்தும் தேர்வாகி உள்ளனர்.

6 ஆவது இடத்துக்கு பாகிஸ்தானின் டிடா டார், 7 முதல் 11 இடங்களுக்கு இந்தியாவின் தீப்தி ஷர்மா, ரிச்சா ஹோஷ், இங்கிலாந்தின் ஷோபி எக்லெஸ்டோன், இலங்கையின் இனோகா ரனவீரா, இந்தியாவின் ரேனுகா சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஷோபி டெவைன் – கேப்டன்
ஐசிசி டி20 அணிக்கு நியூசிலாந்தின் ஷோபி டெவைன் கேப்டனாகவும், இந்தியாவின் ரிச்சா ஹோஷ் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-வெ. கண்ணன்