தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு 6 கோடி பரிசு

6-crore-prize-for-gold-winner-pramod-bhagat
[speaker]

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகையும் அரசு வேலையும் வழங்கி அசத்தியுள்ளார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்.

விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கு ஏற்கெனவே பரிசுத் தொகையை ஒடிசா அரசு அறிவித்தது. அதன்படி, பாரா ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய பிரேந்திர லக்ரா மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோருக்கு தலா ரூ. 2.5 கோடியை அம்மாநில அரசு வழங்கியது.

அதேபோன்று, பெண்கள் ஹாக்கி பிரிவில் விளையாடிய தீப் கிரேஸ் எக்கா, நமீதா டோப்போ மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிடம் தோல்வியடைந்து இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதுதவிர, டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பங்கு பெற்றவர்களுக்கும் தலா ரூ. 15 லட்சத்தை ஒடிசா அரசு வழங்கியுள்ளது.

அரசுப் பணி :

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பிரிட்டனை வென்று தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகையை காசோலையாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்கினார். அதோடு பிரமோத் பகத்துக்கு குரூப் ஏ கிரேடு அளவிலான அரசுப் பணியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

6-crore-prize-for-gold-winner-pramod-bhagat

பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் பிரமோத் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒடிசா முதலமைச்சர் தமது ட்விட்டர் பதிவில், “ இந்திய விளையாட்டுத் துறையில் வரலாறு படைத்த பிரமோத், விளையாட்டு வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உத்வேகம் அளிப்பவராகவும் இருக்கிறார்” என பாராட்டியுள்ளார்.

-எம்.மோகன்

Related Posts
world-rhino-day-kevin-pietersen-on-batting-for-the-indian-rhino
Read More

காண்டாமிருகங்களைக் காப்பாற்றுங்கள் – முன்னாள் கிரிக்கெட் வீரரின் அறைகூவல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஐ பி எல் போட்டிகளில் விளையாடியவருமான கெவின் பீட்டர்சன் தற்போது இயற்கை ஆர்வலராக மாறியுள்ளார். இந்தியாவில் காண்டாமிருகங்களைக்…
created-by-vijay-amirtharaj-leander-paes-immortal-fame-akhtar-ali
Read More

விஜய் அமிர்தராஜை, லியாண்டர் பயஸை உருவாக்கியவர்! – அழியாப் புகழ் அக்தர் அலி

இந்திய டென்னிஸ் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்றால் அது அக்தர் அலிதான். ஏனென்றால் டென்னிஸ் வீரராக மட்டுமல்லாமல் பல வீரர்களை உருவாக்கி…
talent-is-not-old-gayle-shines-at-41
Read More

“திறமைக்கு வயதில்லை” – 41 வயதிலும் ஜொலிக்கும் கெயில்..!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கிறது. இதில் அதிகமான தோல்விகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். 7…
ravindra-jadeja-says-surgery-completed-vows-to-return-to-play
Read More

“அறுவை சிகிச்சை முடிந்தது; மீண்டும் வருவேன்” – ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை

இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதன் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தபோது ரவீந்திர ஜடேஜாவிற்கு இடது பெருவிரலில் காயம்…
Total
15
Share