தனியுரிமைக் கொள்கை

[speaker]

டேட்டா பாதுகாப்பு:

உம்மைப் பற்றிய தகவல்களை நாங்கள் ப்ராசஸ் செய்வது எப்படி என்பதை அறிய எமது ‘தனியுரிமைக் கொள்கையை’ பார்க்கவும். பயனாளி நிபந்தனை என்பதில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

தேர்ட் பார்ட்டி விளம்பரங்கள், தளங்கள் மற்றும் இணைப்புக்கள்

எமது இணையதளத்தில் தேர்ட் பார்ட்டி இணையதளங்கள், பிற நிறுவன  மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான இணைப்பு இருக்கும். இது இருந்தால் அந்நிறுவனத்தின் தயாரிப்பை நாங்கள் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை. இணைப்பு இணையதளங்கள் தமக்கென தனியான தனியுரிமைக் கொள்கைகளை வைத்துள்ளன; அவற்றை கவனமாகப் படிக்கவும். இதன்மீது எமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனவே, உமது அந்தரங்கத் தகவல் உட்பட இவை திரட்டும் விவரங்கள் பற்றிய பொறுப்பு/கட்டுப்பாடும் எமக்கு இராது.

பொறுப்புத் துறப்பு மற்றும் நஷ்டங்களின் எல்லைகள்

(1) இறப்பு அல்லது காயம் ஏதாவது ஓபன் ஹொரைசான்/ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டால்; (2) மோசடியாகத் திரித்துச் சொல்லப்பட்டால்; (3) எமது கட்டுப்பாடு இராத வேறெந்த நஷ்டத்துக்கும் நாங்கள் பொறுப்பாகவே முடியாது. இப்பிரிவில் உள்ள மற்ற அம்சங்களும் அத்தகைய நஷ்டத்துக்குப் பொறுப்பாக முடியாது.

மேலே சொல்லப்பட்டவை தவிர, வாடிக்கையாளர் என்ற விதத்தில் உமக்கு இந்திய அரசின் விதிப்படி உள்ள உரிமையையும் வாடிக்கையாளர் ஒப்பந்தத்தையும் (தகவல், ரத்து மற்றும் கூடுதல் கட்டணம்) யாரும் பறிக்க முடியாது. எமது இணையதளத்தில் போஸ்ட் செய்யப்படும் விவரங்கள்/மெட்டீரியல் எதுவும் எதையும் சார்வதைப் பற்றிய அறிவுரை அல்ல. எனவே, இது தொடர்பான நஷ்டத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

ஓபன் ஹொரைசான் விற்கும் நிபந்தனைகளின் கீழ் எமது வேலையைச் செய்வதிலிருந்து உம்மால் நாங்கள் தடுக்கப்பட்டால்/தாமதமாக்கப்பட்டால் எமது கட்டுப்பாட்டிற்கு மீறிய நிகழ்வுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

ஓபன் ஹொரைசானிடமிருந்து வாங்கும் சரக்கு/சேவைகள் திருப்திகரமான தரத்துடனும் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும்படியும் இருக்குமென்று நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.  இருப்பினும் உத்தரவாத மீறல் நிகழ்ந்தால் இப்பொருள்/சேவை பற்றி மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நஷ்டஈடாக ரீஃபண்ட் தவிர வேறெதையும் தரவேண்டிய கட்டாயம் எமக்கில்லை.

உமக்கு ஏற்படும் ஒப்பந்த (பொருளாதார இழப்பு, வருமான இழப்பு, தொழில், ஒப்பந்தம், இலாபம், சேமிப்பு இழப்பு) இழப்புக்கும் டேட்டா இழப்புக்கும் நேரடி/மறைமுக இழப்பால் உமக்கோ தேர்ட் பார்ட்டிக்கு ஏற்படும் புகழ் இழப்புக்கும் ஓபன் ஹொரைசான், அதன் இயக்குநர்கள், ஒப்பந்ததாரர்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்கள் பொறுப்பேற்க முடியாது என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்.

மேலும் இணையதளம்/சரக்கு தொடர்பாக ஓபன் ஹொரைசான் வாரண்டிகள் எதையும் தரவில்லை என்றும் ஒப்புக்

கொள்கிறீர்கள். பயனாளி நிபந்தனைகள் அனைத்தும் சட்டம், பயன்பாடு ஆகியவை சார்ந்த உத்தரவாதம், நிலை, உறுதிமொழி, நிபந்தனை, கட்டுப்பாடு தொடர்புடையவை. முடிந்தவரை சட்ட ரீதியாக அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இணையதளத்தில் தேர்ட் பார்ட்டி தளங்களுக்குச் செல்ல இருக்கும் இணைப்புகள் பற்றி ஓபன் ஹொரைசான் எந்தப் பொறுப்பும் ஏற்காது. உங்கள் சொந்த விருப்பத்தில் அந்த இணைப்புகளைப் பின்பற்றி நீங்கள் செல்வீர்கள்.

தேர்ட் பார்ட்டி விற்பனையாளர் தமது விற்பனை தொடர்பான நிபந்தனைகள் அனைத்தையும் உமக்கு நேரடியாகத் தெரிவிப்பார்.

பயனாளி நிபந்தனையின் மாற்றங்கள்: நிபந்தனைகளை அவ்வப்போது மாற்றுவது நிறுவனத்தின் உரிமை. அடிக்கடி தளத்துக்கு வருகை புரிகையில் இந்த நிபந்தனைகளை அவ்வப்போது சோதித்து படிக்கவும். வருகை புரிந்தால் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதாக அர்த்தம். மாற்றங்கள் இருப்பதால் அடிக்கடி படித்து புரிந்துகொண்டு நடக்கவும்.

அறிவிக்கைகள்:

 ஓபன் ஹொரைசானுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியோ அல்லது பயனாளி நிபந்தனைகள் தொடர்பான கேள்விகளை மின்னஞ்சல் மூலம் (contact@openhorizon.in) அனுப்பியோ பதில் பெறலாம். ஓபன் ஹொரைசான், புதிய எண்.9, பழைய எண்.11, தரைத்தளம், பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காடுதாங்கல், சென்னை 600032 என்ற முகவரிக்குக் கடிதமும் எழுதலாம். இந்த அறிவிக்கைகள் 3 நாட்கள் வரை செல்லுபடியாக இருக்கும். பொது அறிவிக்கை மூலம் இணையதளம் (அ) மின்னஞ்சல் செய்தி வழியாக உமக்கு பதில் கிடைக்கும்; கடிதம் மூலமும் பதில் அனுப்பப்படும். அத்தகைய அறிவிக்கைகள் உடனே செல்லுபடியாகத் தொடங்கும் (தளத்தில் வைக்கப்பட்டால் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால்). அஞ்சல் மூலம் வந்தால், அவை 3 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

பொதுவானவை:

பயனாளர் நிபந்தனை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும் குறிப்பான நிபந்தனைகளைப் பொறுத்தவரை ‘ஓபன் ஹொரைசான்’ என்றால் ‘ஓபன் ஹொரைசான்’ மற்றும்/அல்லது ‘ஓபன் ஹொரைசான் டிஜிட்டல் மீடியா LLP’ என்று அர்த்தம்.

பயனாளர் நிபந்தனையே உமக்கும் ஓபன் ஹொரைசானுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்கும்; இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான வேறு வாய்வழி ஒப்பந்தம், எழுத்து வழியான கடிதம், ஒப்பந்தம், விண்ணப்பம் ஆகியவை இதன்முன் செல்லாது.

பயனாளர் நிபந்தனையின் எப்பகுதியாவது நீதிமன்றத்திற்குச் சென்றால், மீதமுள்ள பகுதிகளும் பாதிக்கப்படும். தனது ஆதாயத்திற்காகவே ஓபன் ஹொரைசான் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

ஓபன் ஹொரைசானைத் தவிர இந்த நிபந்தனையில் கையொப்பமிடாத எந்த நபருக்கும் (இந்திய அரசியலமைப்பின் விதி 1872 காண்டிராக்ட் சட்டத்தின் கீழ்) இதன் எந்த அம்சத்தையும் அமல்படுத்தும் உரிமை இருக்காது; ஆனால், இதனால் இச்சட்டத்தைத் தவிர தேர்ட் பார்ட்டிக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய உரிமை (அ) நிவாரணம் பாதிக்கப்படாது.

பயனாளி நிபந்தனையில் உள்ள எதுவும் கூட்டாளி ஏற்பாடு, கூட்டணி நிறுவனம் (அ) ஓபன் ஹொரைசானுக்கும் உமக்குமிடையேயான முகவர் உறவுமுறை என்று பொருள் கொள்ளப்படாது. இந்நிபந்தனையின் கீழ் தமது கட்டுப்பாடு இல்லாததால் (தீவிபத்து, வெள்ளம், குண்டுவெடிப்பு, போர், சமூக கிளர்ச்சி, தொழில் தகராறு அல்லது பேரழிவு அல்லது அரசு விதிகள்) ஓபன் ஹொரைசான் அல்லது அதன் ஒப்பந்ததாரர் தமது கடவையில் தவறினால், இதற்கு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ எவ்விதமான பொறுப்பையும் ஏற்கவே முடியாது.

பயனாளர் நிபந்தனை மீறப்பட்டால் ஓபன் ஹொரைசான் தரும் சலுகை எதுவும் தனது கடமையைச் செய்யத் தவறிய காரணத்தால் நிறுவனம் தரும் சலுகை என்று தவறாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது.

இணையத்தைப் பயன்படுத்துவது உமது விருப்பமே; அனைத்து விதிகளையும் மதித்து நீங்கள் நடக்க வேண்டும். ஓபன் ஹொரைசான் இதில் (தகவல், மென்பொருள், சேவைகள் அல்லது நீங்கள் கோரும் விவரம் தொடர்பான) எவ்விதமான பொறுப்பையும் ஏற்காது.

இதனால் எழும் சட்டரீதியான பிரச்சினைகள் இந்திய நாட்டில் பின்பற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்படும். உமக்கெதிராக இந்நாட்டிலோ நீங்கள் வசிக்கும் நாட்டிலோ அல்லது வேறெந்த நாட்டிலோ வழக்குத் தொடரும் உரிமையும் எங்களுக்கு உள்ளது.

எடிட்டோரியல் தொடர்பான புகார்கள்

ஓபன் ஹொரைசான் பொறுப்புள்ள பதிப்பாளர்; நாங்கள் வெளியிடும் உள்ளடக்கங்களில் உயர்தரத்தைப் பராமரிக்க நாங்கள் கடும் உழைப்பைச் செலுத்துகிறோம்.

எமது உள்ளடக்கம் தொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால் contact@openhorizon.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் தரலாம்; அல்லது புகார் மேலாளர், ஓபன் ஹொரைசான், புதிய எண்.9, பழைய எண்.11, தரைத்தளம், பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காடுதாங்கல், சென்னை 600032 என்ற முகவரிக்குக் கடிதமும் எழுதலாம்.

உமது புகாருக்கு 2 நாட்களுக்குள் ஒப்புகை அனுப்பி முடிந்தவரை தவறைச் சரிசெய்ய நாங்கள் முயற்சி செய்வோம்.

ஓபன் ஹொரைசான் லேபலிங் முறையின் வர்த்தக உள்ளடக்கம்:

ஓபன் ஹொரைசானில் நாங்கள் உருவாக்கும் சில உள்ளடக்கங்களுக்கு நம்பகமான தேர்ட் பார்ட்டிக்கள் எமக்குப் பணம் செலுத்துகின்றனர். இதுபல வடிவங்களில் இருக்கும்; ஆனால் பின்வரும் லேபிள்களில் ஏதாவது ஒன்று இதில் இருக்கும் என்பதால் உங்களால் இதை சுலபமாக அடையாளம் காண முடியும்; உள்ளடக்கம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதையும் தேர்ட் பார்ட்டியின் பங்களிப்பு என்ன என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளவும்.

‘உதவி அளித்தவர்’

முழுவதுமாக/பகுதியாக நம்பகமான தேர்ட் பார்ட்டி நிதியுதவி அளித்ததைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படும். உள்ளடக்கத்தை அங்கீகரித்து, திருத்தங்களை சுட்டிக்காட்டும் தேர்ட் பார்ட்டியின் கூட்டணியில் எமது ஆசிரியர் குழுவே இவற்றை எழுதுகிறது. புதிய கருத்துக்களைச் சேர்க்கக் கூட்டாளி எம்மை அணுகுவார்; இதை ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசிப்போம். கூட்டாளி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை ஆசிரியர் குழுவுக்குக் கிடையாது; ஆசிரியர் குழுவின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளையாது என்ற சூழலில் மட்டுமே அவர்கள் அவ்வாறு கையொப்பமிடுவர்.

‘விளம்பர அம்சம்’

விளம்பரதாரர் பணம் தந்து கட்டுப்படுத்தும் விளம்பர அம்சங்களை விளக்க இச்சொற்றொடர் பயன்படும். இதை ஓபன் ஹொரைசானும் சேர்ந்தே கூட சில சமயம் கட்டுப்படுத்தும். இதை எமது வர்த்தக அணியும் விளம்பரதாரரும் (உள்ளடக்கத்தை அங்கீகரிக்கும்/மாற்றும் உரிமை உள்ளவர்) சேர்ந்து உருவாக்குவர். இந்த உள்ளடக்கமானது இந்தியாவின் விளம்பர நிர்வாகம் செய்யும் தனித்துவம் வாய்ந்த அமைப்பான ‘அட்வர்டைசிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’யால் மாற்றம் செய்யப்படும்.