பொறுப்பு மறுப்பு

[speaker]

எமது பொருளை அணுகுவது:

உமது அந்தரங்க, வர்த்தகமற்ற நோக்கத்துக்கு மட்டுமே எமது பொருளை நீங்கள் அச்சிடலாம்; ஆனால் பின்வருபவற்றைச் செய்யக் கூடாது:

·         மெட்டீரியலை முறையான, சீரான முறையில் பதிவிறக்கம்/அச்சு செய்து டேட்டாபேஸை உருவாக்குதல் [மின்னணு (அ) காகித வடிவம்]

·         மெட்டீரியலின் பதிப்புரிமை(அ) புத்திசார் காப்புரிமை தொடர்பான எந்த அறிவிக்கையையும் நீக்குதல்

·         மெட்டீரியலை திருத்துதல்/மொழிபெயர்த்தல்/உருமாற்றுதல்/மீண்டும் வெளியிடுதல், அதிலிருந்து வேறொன்றைத் தயாரித்தல்

·   வாடகைக்கு/குத்தகைக்கு/உப-உரிமத்துக்கு/கடனுக்கு/நகல் அடித்து/ வணிகரீதியாக சுரண்டுதல்/மொழிபெயர்ப்பு/எவ்வித உரிமையையும் எவ்வடிவிலும் முன் அனுமதியின்றி நேரடியாகக் கொடுப்பது

மெட்டீரியலின் சொந்தக்காரர் என்ற அந்தஸ்து [மற்றும் தேர்ட் பார்ட்டியினர் (அ) உரிமை பெற்றவரதும்] அங்கீகரிக்கப்பட வேண்டும். பயனாளி நிபந்தனை மீறி இணையதளத்தை (அ) மெட்டீரியலை அச்சிட்டு (அ) வேறுவிதமாகக் காப்பியடித்தால் தளத்தைப் பயன்படுத்தும் உரிமை உடனே நிறுத்தப்படும்; நீங்கள் செய்த நகலின் வடிவத்தைத் திருப்பித்தர/அழிக்க வேண்டும். எமது எழுத்துபூர்வமான அனுமதி இன்றி இசை வீடியோக்களை பதிவிறக்கம்/நகல் எடுக்க உமக்கு அதிகாரம் இல்லை.

தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள்

பின்வரும் நோக்கங்களுக்காக இணையதளத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:

·         எங்களாலும் தேர்ட் பார்ட்டிக்களாலும் அதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள கருவிகளைத் தவிர எந்த மென்பொருள்/என்ஜின் (அ) வேறு வழியாக இணையதளத்தைத் தேட முயற்சி செய்வது

·         ‘ஸ்க்ரீன்-ஸ்க்ரேபிங்’ (அ) ‘டேட்டாபேஸ் ஸ்க்ரேபிங்’ தொடர்பான செயல்பாடுகள் மூலம் பயனாளிகள், URL-க்கள், இன்டர்நெட்டின் முக்கிய வார்த்தைகள் (அ) பிற தகவல்களைப் பெறுதல்

·         ஓபன் ஹொரைசான் நிறுவனம் தந்துள்ள வழிகளைத் தவிர வேறு வழிகள் மூலம் இணையதளத்திற்குச் செல்லுதல்/பயன்படுத்துதல்;

· மென்பொருள்/கடும்பொருள்/தகவல்தொடர்பு சாதனத்தை பழுதாக்கும் மென்பொருள் வைரஸ் (அ) வேறு கம்ப்யூட்டர் குறியீடு, ஃபைல் (அ) புரோகிராம் போன்றவை அடங்கிய மெடீரியலை பயன்படுத்துதல் (அ) இணையதளத்திற்கு அனுப்புதல்

·         இணையதளக் கட்டமைப்பின் மீது கடும் சுமை ஏற்படுத்தும் எந்த வேலையையும் செய்வது

·         இணையதளத்தை மற்றும்/அல்லது சேவைகளை (அ) இத்துடன் தொடர்புடைய நெட்வொர்க்குகளை (அ) வேறு தேவை, செய்முறை, கொள்கை, நெட்வொர்க் விதிமுறையைத் தொந்தரவு செய்வது

சரக்குகள் மற்றும் சேவைகளை இணையதளம் மூலம் வாங்குதல்

சரக்குகள்/சேவைகளை வாங்கும் வாய்ப்பை இணையதளம் தர்க்கூடும். சில சரக்குகள்/சேவைகள் எம்மால் நேரடியாகத் தரப்படும் (நாங்கள் அதை விற்றால் அதுபற்றி தகவல் தருவோம்). அப்படி நேர்ந்தால் சரக்கு/சேவைகள் தொடர்பான சட்டரீதியான ஒப்பந்தம் உமக்கும் ஓபன் ஹொரைசானுக்கும் இடையே நேரடியாக கையெழுத்தாகும்; நிறுவனத்தின் சரக்கு/சேவைகளை விற்கும் நிபந்தனைகளில் அடங்கும் (பார்க்க: பத்தி 6.1). கூடுதல் நிபந்தனை இருந்தால் விற்கும் சமயம் அது தெரிவிக்கப்படும். மாறாக, பிற சரக்குகள், சேவைகள் இணையதளத்தில் தொடர்ந்து கிடைக்கும்.

அ) தேர்ட் பார்ட்டி மூலம் தேர்ட் பார்ட்டி இணையதளத்தில் கிடைக்கும் சரக்கு/சேவைகள்

ஆ) தேர்ட் பார்ட்டி மூலம் அதன் இணையதளத்தில் ஓபன் ஹொரைசான் (அ) எமது பிராண்டுகளுடன் இணைந்த சரக்கு/சேவைகள்;

தேர்ட் பார்ட்டியின் முகவராகச் செயல்பட்டு தரும் சரக்குகள்/சேவைகள்

இம்மூன்று சூழல்களிலும் சரக்கு/சேவை தொடர்பான சட்டரீதியான ஒப்பந்தம் உமக்கும் தேர்ட் பார்ட்டிக்கும் (‘வியாபாரி’) இடையே இருக்கும்; வியாபாரியின் நிபந்தனைகளே இவ்விற்பனைக்கும் சரக்கு/பொருளின் சப்ளைக்கும் (உரிமம்) பொருந்தும். எம் இணையதளத்தில் தேர்ட் பார்ட்டி விற்பனையாளரிடமிருந்து நீங்கள் வாங்கும் சரக்குகள் திருப்திகரமாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை எங்களால் சிறிதும் தரமுடியாது. ஆனாலும் தேர்ட் பார்ட்டி வியாபாரிக்கு எதிரான உமது சட்டரீதியான உரிமைகள் இதனால் பாதிக்கப்படாது.

முந்தைய பத்தியில் ‘வியாபாரி விற்பனை’ எனக் குறிப்பிடப்பட்டதை ஈ-வணிகம் என ஓபன் ஹொரைசான் குறிப்பிடுகிறது. பின்வரும் சந்தை விதிகள் இதில் அடங்கும். இந்த விதிகளுடன் வியாபாரியின் நிபந்தனைகளையும் தெளிவாகப் படிக்கவும்.

தேர்ட் பார்ட்டி வியாபாரி விதிகள்

வாங்கும்போது பின்வருவனவற்றை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:

1)       ஆர்டர்களைத் திருப்திகரமாக, தரத்துடனும் பொருத்தமாகவும் நோக்கத்தை ஒட்டியும் தரும் பொறுப்பு வியாபாரியைச் (ஓபன் ஹொரைசான் அல்ல) சேர்ந்தது

2)       இணையதளத்திலுள்ள விவரத்தின் அடிப்படையில் வியாபாரியை தேர்வு செய்வது (அ) வியாபாரியின் இணையதள விவரம் மூலம் வியாபாரியைத் தேர்வு செய்வது மற்றும்/அல்லது இணையதளப் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்வது உங்கள் இஷ்டம். வியாபாரி தொடர்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் தீர்வுக்குச் செல்லும்; இதைத் தீர்க்கும் பொறுப்பு, கடமை, நஷ்டஈடு ஆகியவை ஓபன் ஹொரைசானைச் சார்ந்தவை அல்ல.

3)       வியாபாரியின் டேட்டா ப்ரொடெக்‌ஷன் பயிற்சிகள் ஓபன் ஹொரைசானின் பயிற்சியிலிருந்து மாறுபடும். வியாபாரிக்குத் தரப்படும்/அவர் திரட்டும் டேட்டாவின் பொறுப்பு/அதன் மீதான எந்த கட்டுப்பாடோ ஹொரைசானுக்கு இருக்காது.

4)       வியாபாரி (அ) வர்த்தகரின் இணையதளத்தில் இருக்கும் சரக்கு/சேவையைச் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவால் ஏற்படும் நஷ்டத்துக்கு நேரடியாக/மறைமுகமாக நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

வியாபாரியின் இணையதளத்திலுள்ள தனியுரிமைக் கொள்கை, பயனுக்கான நிபந்தனை ஆகியவற்றைச் சோதித்து, பின்னர் அவரிடமிருந்து வாங்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சரக்கு/சேவைகளை ஓபன் ஹொரைசான் விற்பதற்கான நிபந்தனை

ஓபன் ஹொரைசான் நேரடியாக விற்கும் சேவை/சரக்கு ஓபன் ஹொரைசான் விற்கும் விதிகளில் (பத்தி 6.1) அடங்கும். இத்துடன் இணையதளத்தில் இந்த சரக்குகள்/சேவைகளை விற்பதற்கான விதிகள் மாறுபட்டால் இணையதளத்தில் சொல்லப்பட்ட விதிகளே இறுதியில் பொருந்தும்.

ஓபன் ஹொரைசான் தளம் விற்கும் சரக்குகளில் உதாரணமாக பத்திரிகைகள், ஆடைகள், போஸ்டர்கள், பேக்குகள் ஆகியவற்றைச் சொல்லலாம். ‘சரக்கு’ தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள்  ஓபன் ஹொரைசானின் இணையம் மூலமாக விற்கப்படும் அனைத்துச் சரக்குகளுக்கும் பொருந்தும்.

ஓபன் ஹொரைசான் தரும் தளச்சேவைகளின் உதாரணமாக பத்திரிகைகளின் டிஜிட்டல் வடிவப் பதிவிறக்கம், ஓபன் ஹொரைசானின் உறுப்பினராகுதல், நிகழ்வுகளைப் பார்க்கும் வாய்ப்பு மற்றும்/அல்லது ஆன்லைனில் உள்ள ‘கட்டண உள்ளடக்கத்து’க்கான அணுகுமுறை ஆகியவற்றைக் கூறலாம். ‘சேவை’ பற்றி குறிப்பிடும் குறிப்பான வார்த்தைகள் ஓபன் ஹொரைசான் இணையத்தில் விற்கும் பிற பொருட்களுக்கு மட்டும் பொருந்தும்.

உமது அந்தஸ்து:

இணையதளம் வழியே ஆர்டர் தருவதன் மூலம் 18 வயது ஆகிவிட்டது என்றும் 18 வயதுக்கு குறைவாக இருந்தால் பெற்றோர்/கார்டியன் உங்கள் சார்பாக இவற்றை வாங்குவதாகவும் உறுதி செய்கிறீர்கள். எம்மிடமிருந்து நீங்கள் வாங்கும் சரக்கு/சேவை தொடர்பான இந்நிபந்தனையை அச்சடித்து ஒரு நகலை வைத்திருக்கவும்.

உங்களுக்கும் ஓபன் ஹொரைசானுக்கும் இடையே வாங்கும் ஒப்பந்தம் எவ்வாறு செய்யப்படுகிறது

ஆர்டர் தந்த பின் ஆர்டரை உறுதிசெய்யும் ஈ-மெயில் செய்தி எங்களிடமிருந்து உமக்குக் கிடைக்கும். நாங்கள் ஒப்புக் கொண்டால்தான் ஆர்டர் உறுதியாகும். ஆன்லைன் மூலம் நீங்கள் ஆர்டர் செய்தால் ஆர்டரை ஆர்டர் மற்றும் பேமெண்ட் கிடைத்தை உறுதி செய்யும் ஈ-மெயில் செய்தி எங்களிடமிருந்து அனுப்பப்படும் (‘ஆர்டர் உறுதிசெய்யப்படுதல்’). ஆர்டர் உறுதியானால்தான் சரக்கு தொடர்பான ஒப்பந்தம் உருவாகும். உறுதியான ஆர்டரில் இருக்கும் சரக்குகள் பற்றி மட்டுமே இந்த ஒப்பந்தம் பேசும்.

சேவைக்கான ஆர்டரை நீங்கள் தந்ததும், ஓபன் ஹொரைசானுக்கும் உமக்கும் இடையேயான ஒப்பந்த சேவையை (டிஜிட்டல் உள்ளடக்கம் உட்பட) தந்தவுடன் உருவாகும்; இது பதிவிறக்கம் (அ) அணுக உமக்குக் கிடைக்கும். கிடைக்கும் ஆர்டர்களை ரத்துசெய்யும் முழுஉரிமையும் ஓபன் ஹொரைசானுக்கு உண்டு.

சரக்கு/சேவைகளை வாங்குதல் மற்றும் டெலிவரி செய்தல்

வாங்குதல்

(அ) உமது வியாபாரம் பாதுகாப்பான சூழலில் செய்யப்படும்.

விலை

(ஆ) சரக்கு/சேவைகளின் விலை இணையதளத்தில் அவ்வப்போது குறிப்பிடப்பட்டு அப்டேட் செய்யப்படும். விலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; அவை அவ்வப்போது உமக்கு அனுப்பப்படும் தகவலில் குறிப்பிடப்படும்.

(இ)    எமது இணையதளத்தில் பெருமளவில் சரக்கு இருக்கலாம்; எமது கடும் முயற்சியை மீறி சில சரக்குகளின் விலை தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம். எமது அனுப்பும் செய்முறையின்படி விலையைப் பரிசோதிப்போம்; விலை விற்கும் விலையைவிடக் குறைவாக இருந்தால், குறைந்த விலையைத்தான் வாங்குவோம். சரியான விலை இணையதளத்திலுள்ள வாங்கும் விலையைவிட அதிகமாக இருந்தால் நாங்களாகவே உம்மைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்போம் (அ) ஆர்டரை நிராகரித்து விட்டு உமக்குத் தெரிவிப்போம். குறைந்த விலையில் உங்களுக்குச் சரக்கு தரும் எவ்வித நிபந்தனையும் எங்களுக்கு இல்லை; ஆர்டரை உறுதிசெய்த செய்தியை உமக்கு அனுப்பிய பின்னரும் விற்கும் விலையில் தவறு தெரியவந்தால் இவ்வாறு நடக்கும்.

பேமெண்ட் செய்யும் முறை

(ஈ)    ஓபன் ஹொரைசானின் தளத்தில் பேமெண்ட் செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சந்தேகம் எழாமல் இருக்க ரொக்கம்/காசோலை மூலம் பேமெண்டை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. உமது ஆர்டர் கிடைத்தவுடன் உமது டெபிட்/கிரெடிட் கார்டிலிருந்து பேமெண்டை நாங்கள் எதிர்பார்ப்போம்.

இருப்பில் இல்லாத சரக்குகள்

(உ)   இருப்பில் இல்லாத சரக்கு தொடர்பான ஆர்டர் கிடைத், சரக்கு இல்லையென்றும் எப்போது வருமென்றும் நிறுவனம் உமக்குத் தெரிவிக்கும். உமது பேமெண்டை சரக்கு வந்தவுடன், அதை அனுப்பியவுடன் நாங்கள் கேட்டுப் பெறுவோம். செலுத்திய பணத்தை ரீபண்ட் கேட்டு சரக்கு வந்தவுடன் அதை வாங்குவது உங்களது தேர்வு. அவ்வாறு செய்தால், சரக்கு வந்தவுடன் உமக்கு ஈ-மெயில் மூலம் தெரிவித்து ஆர்டரைத் தரச் சொல்வோம். ரீஃபண்ட் வாங்காத வாடிக்கையாளருக்கே இதில் முன்னுரிமை தரப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். உமது அனுமதி இன்றி இருப்பில் இல்லாத சரக்கிற்குப் பதில் வேறு சரக்கை நாங்கள் அனுப்ப மாட்டோம்.

டெலிவரி

(ஊ)  சரக்கை வாங்கும்போது, டெலிவரிக்காக உபரிப்பணத்தை நீங்கள் தர வேண்டும் (வேண்டாமென்று சொன்னாலொழிய); சில இடங்களில் எம்மால் டெலிவரி செய்ய முடியாது. இணையதளத்தில் டெலிவரி கட்டண விவரங்கள் உள்ளன. முத்திரை/பேக்கிங் கட்டணம் முன்னறிவிப்பின்றி மாற்றப்படக்கூடும்.

(எ)    நீங்கள் தந்த முகவரிக்கு ஆர்டர்களை அனுப்புவோம்.

(ஏ)    இருப்பில் இருக்கும் சரக்குகளை ஆர்டர் கிடைத்த 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க ஓபன் ஹொரைசான் முயற்சி செய்யும். டெலிவரி தாமதம் ஏற்படுமானால் முன்கூட்டியே அது மீண்டும் டெலிவரி செய்யப்படும் தேதியையும் நாங்கள் தெரிவிப்போம்.

(ஐ)    நீங்கள் ஆர்டர் செய்த, உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட, நீங்கள் பேமெண்ட் செய்த சரக்குகள் உங்களுக்கே சொந்தம். டெலிவரியான சரக்குகள் உமது பொறுப்பு; அவற்றின் இழப்பு, சேதாரம்/அழிவுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

(ஒ)    டிஜிட்டல் உள்ளடக்கம் உள்ளிட்ட சரக்கு/சேவையின் டெலிவரியில் தாமதம் (அ) டெலிவரி ஆகவில்லை என்றால் சூழல் எமது கட்டுப்பாட்டில் இல்லை எனில் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

(ஓ)    தேர்ட் பார்ட்டி சப்ளையர் மூலம் சரக்குகளை அனுப்பி வைக்கும் உரிமை ஓபன் ஹொரைசான் நிறுவனத்தினுடையது.

டிஜிட்டல் உள்ளடக்கம் (Digital Content)

(ஔ)          டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பதிவிறக்கங்கள் உமது கம்ப்யூட்டர்/கருவிக்கு அனுப்பப்படும். இதை பார்க்க கருவியைத் தயாராக வைத்திருக்கும் பொறுப்பு உம்முடையது.

(அ)   டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்தவுடன் ஆர்டரை நீங்கள் ரத்து செய்ய முடியாது; ரீஃபண்டும் கிடைக்காது. பதிவிறக்கம் தொடங்கியவுடன் ‘பணம் செலுத்தப்பட்டது’ என்ற இணைப்பும் வந்துவிடும். பதிவிறக்கத்தை தொடங்கியவுடனும் இந்த இணைப்பு வந்தவுடனும் பதிவிறக்கத்துக்கான ரீஃபண்ட் உமக்குக் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

விதிகள்

(ஆ)   இப்பிரிவிலுள்ள பத்திகளின்படி, வாடிக்கையாளராக இருந்தால் ஆர்டர் டெலிவரி ஆகி 14 நாட்கள் வரை சரக்கு வாங்குவதற்காக தந்த ஆர்டரை நீங்கள் ரத்து செய்யலாம். ரத்து செய்யக் காரணம் குறிப்பிட வேண்டிய எந்த அவசியமும் இராது; இதற்காக அபராதமும் விதிக்கப்படாது.

(இ)    ரத்து செய்யப்பட்ட சரக்குகள் உமக்கு டெலிவரி செய்யப்பட்டால், அதை மீண்டும் எம்மிடமே எமது முகவரிக்கு உமது செலவில் டெலிவரி ஆனபின் 14 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும். உம்மிடம் இருக்கும்வரை சரக்குகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும். நாங்கள் ப்ராசஸ் செய்தபின் அந்த ஆர்டர் டெலிவரி ஆகும் முன் நீங்கள் ரத்து செய்தால் சரக்குகளை நீங்கள் பிரிக்கவே கூடாது; 14 நாட்களுக்குள் உமது செலவில் அவற்றை எமக்கு அனுப்பவும்.

(ஈ)    டிஜிட்டல் உள்ளடக்கத்தை [பத்திரிகைகளின் டிஜிட்டல் வடிவம் (அ) பணம் செலுத்த ஆன்லைன் அனுமதி கோருதல்] வாங்கும்போது வாடிக்கையாளர் தமது சேவையை வாங்கும் ஒப்பந்தத்தை ஒப்பந்தம் கையொப்பமான 14 நாட்களுக்குள் ரத்து செய்யலாம்; ஆனால் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்திருக்கக் கூடாது. வாடிக்கையாளர் சேவை விவரங்களின் அடிப்படையில் இதற்கான அறிவிக்கை தரப்படும்:

முறையற்ற/பழுதான/சேதாரமான சரக்குகள்

(உ)   ஆர்டர் செய்யப்பட்ட சரக்குகள் முறையற்று/பழுதுடன்/சேதாரத்துடன் டெலிவரி ஆனால் ஈ-மெயில் (அ) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒப்பந்தத்தை நீங்கள் ரத்து செய்யலாம்; சரக்குகளைப் பெற்ற 30 நாட்களுக்குள் திருப்பி அனுப்பலாம். எம்மிடம் திரும்ப வரும் சரக்குகளை ஆராய்ந்து அவை முறையற்று/சேதாரமாக இருக்கிறதா என நாங்கள் சோதிப்போம். நீங்கள் திருப்பி அனுப்பிய சரக்குகளின் விலை முழுதும் ரீஃபண்ட் செய்யப்படும். நீங்கள் திருப்பி அனுப்ப செலவிட்ட டெலிவரி கட்டணமும் உமக்கு திரும்பக் கிடைக்கும் (குறைந்த, இயல்பான கட்டணத்தில் அனுப்பியிருந்தால்). அதிகக் கட்டணத்தை நீங்கள் செலவிட்டிருந்தால், சாதாரணக் கட்டணத்திற்கான பணத்தை மட்டுமே நாங்கள் உங்களுக்குத் திரும்பச் செலுத்துவோம்.

ரத்து செய்வதற்கான விதிவிலக்குகள்

(ஊ)  நீங்கள் ஆர்டர் செய்த சரக்குகள் இப்படி இருந்தால் உங்களால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது:

          *  செய்தித்தாள்/பத்திரிகைகள் (சந்தா இருந்தாலொழிய)

          *  நீங்கள் குறிப்பிட்டபடி அனுப்பப்பட்ட சரக்குகள்

          *  அழிந்து வீணாகக்கூடிய சரக்குகள்; அல்லது

          *  டிஜிட்டல் உள்ளடக்கத்தின் ஆர்டரை நீங்கள் பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் ரத்து செய்ய முடியாது.

சரக்குகளைத் திருப்பி அனுப்புதல்

(எ)    டெலிவரி செய்யப்பட்ட அதே நிலையில் சரக்குகளை நீங்கள் திருப்பி அனுப்பாவிடில், ரத்து/ரீஃபண்ட் ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமை எம்மிடம் உள்ளது. பேக்கேஜிங் சேதாரமடையாமல் அவற்றை நீங்கள் திருப்பி அனுப்ப வேண்டும். சரக்குகளைத் திருப்பியனுப்ப முடிவெடுத்தால் முடிந்தவரை அதை பேக்கேஜிங் சேதமடையாமல் வைத்திருக்கவும். சுத்தமான சூழலில் அவற்றை வைத்திருக்கவும். சரக்குகளின் சுத்தத்தை வெளியிடும் முத்திரைகள் அகற்றப்படக் கூடாது. நீங்கள் கையாண்ட காரணத்தால் சரக்குகளின் மதிப்பு குறைந்து போய் அவற்றின் தன்மை/குணநலன்/செயல்பாடு சேதாரமடைந்தால், ஆர்டரின் விலையை உம்மிடமிருந்து நாங்கள் வசூலிப்போம். உமக்குத் தர வேண்டிய பணத்திலிருந்து இது எடுக்கப்படும் (அ) அதை நீங்கள் செலுத்த வேண்டும். சுத்தம் தொடர்பான சீல்கள் உடைந்த சரக்குகளை நாங்கள் திரும்ப எடுத்துக்கொள்ள மாட்டோம். உம்மிடமுள்ள சரக்கை நல்ல நிலையில் பார்த்துக்கொள்ளும் முழுப்பொறுப்பும் உம்முடையது. இதை நிறைவேற்றாவிடில் உமக்கு ரீஃபண்டை நாங்கள் தர மாட்டோம்.

(ஏ)    சரக்குகளைத் திருப்பி அனுப்புகையில், காப்பீடு/அஞ்சல் ஆதாரம் வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. தொலைந்து போகும் பார்சல்களுக்கு நிறுவனம் பொறுப்பேற்காது. எமக்குத் திருப்பி அனுப்பப்படும் சரக்குகளுக்கு (சில விதி விலக்கு தவிர) ஆகும் செலவை நீங்கள்தான் ஏற்றாக வேண்டும்.

(ஐ)    உமக்கு சரக்குகளை சப்ளை செய்பவர் அவை சரியில்லை என்றால் தாமாகவே அவற்றைத் திரும்ப எடுத்துக்கொள்வார். அவ்வாறு எடுத்துக்கொள்ள சரியான நேரத்தை அவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

(ஒ)    இணையத்தில் ஆர்டர் செய்த சரக்குகளைத் திருப்பி அனுப்புகையில் ஆர்டர் உறுதிசெய்யும் கடிதத்தின் ஆர்டர் எண்ணை நிச்சயம் குறிப்பிடவும்.

(ஓ)    ஆர்டர் செய்த சரக்குகளை ரத்து செய்வதாக நீங்கள் தெரிவிது ரீஃபண்ட் கோரியவுடன் சரக்குகளை நீங்கள் திருப்பி அனுப்ப வேண்டும்; அதிலிருந்து 14 நாட்களுக்குள்; சப்ளை செய்த சரக்கை திருப்பி அனுப்பியதற்கான சான்றை நீங்கள் தந்தவுடன் அதற்கான பணத்தை நாங்கள் ரீஃபண்ட் செய்வோம்; சரக்கு சப்ளை ஆகவில்லை என்றால் எமக்கு தெரிவிக்கப்பட்டவுடன் ரீஃபண்ட் உமக்கு கிடைக்கும். டெலிவரி ஆன சரக்கை நீங்கள் ரிட்டர்ன் செய்யவில்லை என்றால் (அ) ரிட்டர்ன் ஆன செலவை நீங்கள் ஏற்கவில்லை என்றால், உமக்குத் தர வேண்டிய பணத்திலிருந்து அச்செலவை நாங்கள் கழித்து விடுவோம். சப்ளை ஆன ஆர்டரை ரத்து செய்வதாக நீங்கள் தெரிவித்தவுடன் ரீஃபண்ட் கோரினால் முடிந்தவரை விரைவாக நீங்கள் ரத்து செய்வதாகத் தெரிவித்த 14 நாட்களுக்குள் அப்பணத்தை தந்து விடுவோம். பேமெண்ட் செய்ய நீங்கள் பின்பற்றிய வழியில் உமக்கு ரீஃபண்ட் கிடைக்கும். ரீஃபண்டுக்கான உபரி கட்டணம் ஏதும் நீங்கள் தரத் தேவையில்லை.

பரிசுகள்

(ஔ)          பரிசாக வாங்கிய பொருட்களுக்கான ரீஃபண்ட் வாங்கியவருக்குத் திருப்பித் தரப்படும்.

வாடிக்கையாளர் சேவை

உமது ஆர்டரின் சரக்கு சப்ளை தொடர்பான கேள்விகளை ஆர்டர் உறுதி செய்யும் ஈ-மெயிலில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேளுங்கள்.