பாரதியை ஏன் பிடிக்கும்? – மதன் கார்க்கி டு கார்த்திக் நேத்தா வரை

why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta
[speaker]

சுப்பிரமணிய பாரதியார் எங்கும் நிறைந்திருக்கிறார். கலை முதல் கவிதை வரையிலும், இசை முதல் திரையுலகம் வரையிலும் நிறைந்திருக்கிறார். தமிழர்களால் என்றென்றும் போற்றப்படும் மகா கவிஞனின் சாகாவரம் பெற்ற வார்த்தைகள் இன்று தமிழ் `பாப்’ கலாச்சாரத்திலும் வேரூன்றியுள்ளன.

நாகரிகம், நவீனம் என்று காலம் மாறிக் கொண்டே போனாலும், அந்த முண்டாசுக் கவிஞனின் கவிதைகளும் அவற்றோடு இணைந்தே பயணிக்கும். அதனால்தான், நூற்றாண்டு நினைவு தினத்திலும் அவனது புகழ் வானுயர உயர்ந்து நிற்கிறது.

பாரதியின் நூற்றாண்டு நினைவுநாளில், தமிழ் இலக்கியத்தில் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார்கள் நம் கவிஞர்கள்…

1.என்னை ஆட்கொண்ட பாரதி : கவிஞர் மதன் கார்கி

பாரதி என்னுள் செல்வாக்கு செலுத்துகிறான். நாம் எழுதும்போது எளிமை மற்றும் சக்தி ஆகிய இரண்டு விஷயங்களையே கையாளுகிறோம். நாம் அதிகாரத்தைப் பற்றிப் பேசும்போது, நம் எழுத்தில் உள்ள சக்தியைக் கொண்டு வரப் பெரிய வார்த்தைகள் மற்றும் சிக்கலான வாக்கிய அமைப்புகளை நினைப்போம்.

ஆனால், சக்தியை எளிதான வார்த்தைகளில் கொண்டு வரமுடியும் என்பதை பாரதி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். சில எளிமையான வார்த்தைகள் ஆழமான மற்றும் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta

`மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’… என்று குழந்தைகளுக்காக அவர் பாடினார். எளிமையான சொற்கள் கொண்ட அந்த எழுத்தில் கடுமையான தன்மை உள்ளது.

எனக்குப் பிடித்த பாரதியாரின் வரிகள்:

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே'. இந்தப் பாடலில் உள்ள ஒலி, தாளம் மற்றும் உணர்ச்சி ஆகியவை உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன. பாரதியின் இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு, வெளிவர இருக்கும் திரைப்படம் ஒன்றில்,ஹே சினமிகா’ என்ற பாடலை எழுதியிருக்கிறேன்.

திரைப்படங்களில் பாரதியைப் பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன. அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறார். ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் கவிஞரும் அவரது படைப்புகள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

2.மகாகவியின் வார்த்தைகளைப் போதுமான அளவுக்குப் பெற்று விட முடியாது: மதுமதி

பாரதியின் எழுத்துகளிலிருந்த தைரியம், கோபம் ஆகியவற்றால் கவரப்பட்டதால்தான், என் எழுத்துகளைத் தைரியமாக எழுதுகிறேன். தேசியம் மற்றும் சுதந்திரம் முதல் பெண்களுக்கான அதிகாரம் வரை, பாரதியிடமிருந்து மட்டுமே கடுமையான தாக்குதலைத் தொடுக்கும் சிந்தனைகள் புறப்பட்டு வந்தன. குரலற்றவர்களின் குரலாக அவர் இருந்திருக்கிறார்.

அவரது பெண்கள் விடுதலை மற்றும் புதுமைப்பெண் பாடல்களில், அதிகாரம் மற்றும் பெண்களின் மதிப்பு, அவளது சுதந்திரம், அவளுக்கான இடம், கல்வி, திறனுக்காகவும், அவள் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராகவும் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பார். நித்திய வார்த்தைகளால் பெண்களைக் கொண்டாடியிருப்பார் பாரதி. அவரிடம் இருந்த இவ்வளவு வார்த்தைகள், இன்றைக்குக் கிடைப்பது அரிதானதே.

இன்றைக்கு நம்பமுடியாத பெண்களின் சாதனைகளையும், அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகளை உடைத்து அவருடைய புதுமைப் பெண்ணைப் போல் அதிகாரம் பெற நாம் இன்னும் நீண்ட தொலைவுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta

கவிதை என்பது என் ஆன்மாவுக்கான பிரார்த்தனை, தியானம் மற்றும் சிகிச்சை போன்றது. வார்த்தைகள் மூலம் நான் உருமாறினேன் என்று நம்புகிறேன். பாரதி எனக்கு ஒரு தோள், ஒரு நல்ல நண்பர், நங்கூரம், ஓர் அற்புதமான அப்பா மற்றும் என் வாழ்க்கையில் என்றும் பார்த்திராத ஓர் அற்புதமான தாத்தா.

எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள்: ‘

‘ரௌத்திரம் பழகு’ என் இதயத்தில் அடிக்கடி ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவரது மற்றொரு வரியான `சென்றது மீளாது’ என் தாரக மந்திரமாகும்.

3.புராணங்கள் மீது கேள்வி எழுப்பினார்; பழைய பழக்கவழக்க பிணைப்பை உடைத்தார்: அருண்ராஜா காமராஜ்

பல தசாப்தங்களாக பாரதி உத்வேகமாக இருந்ததால், அவரது தமிழ் மொழி மற்றும் அவரது வார்த்தைகளில் உள்ள இசைத் தாளங்கள் ஒரு பாடலாசிரியர் என்ற முறையில் என்னை சிந்திக்கத் தூண்டியது. அதோடு சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை கிளர்ந்தெழச் செய்யவும் அவரது பாடல்கள் காரணமாக இருந்தன.

சமூக நீதியை என் வார்த்தைகளின் வழியே கொண்டு வருவது, புராணங்களைக் கேள்வி கேட்பது, பழைமைவாதத்தை தகர்த்தெறிவு போன்ற அவர் வார்த்கைகளில் கையாளும் அழகை நான் நேசித்தேன். அனைவரிடமும் சமத்துவம் மற்றும் சமரசம் இன்றி இருந்த அவரது தைரியம் மற்றும் அந்தப் பெரிய மனிதனின் லட்சியங்களை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள்:

காக்கை குருவி எங்கள் சாதி/ நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

4.கவிஞர்களுக்கு பாரதி அமைத்த புதிய பாதை: முத்துராச குமார்.

அவரது எழுத்தும் வாழ்க்கையும் பிரிக்கப்படவில்லை. இறக்கும் வரை தமிழுக்காகவே இலக்கிய வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஒரு நவீன கால கவிஞராகவும், சுதந்திரமான பத்திரிகையாளனாகவும் தொடரும் என் பயணத்தில், பாரதி ஒரு கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் என் முன்னே நிற்கிறார்.

why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta

அதோடு, காதல், பொறுப்பு மற்றும் எழுதும் கலை மீதான ஆர்வத்தை எனக்கு அவர் தருகிறார்.தனது காலத்துக்கு முன்பு இருந்த எழுத்து இலக்கணத்தை தகர்த்துவிட்டு, புதிய கால கவிதைகளை உருவாக்கி கவிஞர்களுக்கு ஒரு புதிய பாதையை அமைத்தார். அவர் படைத்த புதுமையான கவிதைகளை, சமூகப் பிரச்னைகளை உடைத்தெறிய அப்போது பயன்படுத்தினார்.

மனிதாபிமானம் மற்றும் கவிதையின் மூலம் ஒருவரது எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அவரது எழுத்து, எப்போதும் எனக்கு பொறாமை கலந்த அற்புத உணர்வை தந்து கொண்டிருக்கிறது.

எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள் :

நிறைய வரிகள் பிடிக்கும். அதில், `விதையினைத் தெரிந்திடு, வீரியம் பெருக்கு’ என்ற அவரது வரி என்னை மிகவும் கவர்ந்தது.

5.தமது தத்துவத்தை சமூல நலனுக்காக பாரதி பயன்படுத்திய விதம் என்னை வியக்க வைக்கிறது : கார்த்திக் நேத்தா

why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta

தத்துவத்தின் வேராக நின்று, தனது அறிவை உலகம் முழுவதும் பாரதி பரப்பினார். சமுதாய நலனுக்காக அவர் தனது தத்துவத்தைப் பயன்படுத்திய விதத்தைப் பார்த்து நான் எப்போதும் வியப்படைகிறேன். நானும் அவற்றைக் கற்றுக்கொண்டு, அவருடைய வழியில் வாழ விரும்புகின்றேன்.

எனக்குப் பிடித்தமான பாரதியார் வரிகள் :

`காணி நிலம் வேண்டும்’… எந்தன் பாட்டு திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட வேண்டும்.

-எம்.மோகன்

Related Posts
bruce-lee-goes-to-australian-aboriginal-language-after-50-years
Read More

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பழங்குடி மொழிக்குப் போன புரூஸ் லீ !

1972 ஆம் ஆண்டு வெளியான புரூஸ் லீ யின் `ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ என்ற படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. சண்டைக்…
rajinikanth-commented-after-watching-the- movie-Annathe
Read More

`அண்ணாத்தே’ படம் பார்த்து கருத்து சொன்ன ரஜினிகாந்த்

`அண்ணாத்தே’ படத்தின் முதல் பிரதியைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அது குறித்து விமர்சனம் செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் அண்ணாத்தே படத்தை…
golden-globes-2021-winners-list
Read More

கோல்டன் குளோப் விருது விழா! – புற்றுநோயால் மறைந்த நடிகருக்கு விருது

அமெரிக்கத் திரைத்துறையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருதுகள். ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேசன் என்ற சார்பற்ற ஊடக அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள்…
cinema-singer-returns-to-youtube-sidhan-jayamurthy-rural-field
Read More

யூடியூப் பக்கம் திரும்பிய சினிமா பாடகர்! – சித்தன் ஜெயமூர்த்தியின் கிராமிய களம்

சேரனின் `தவமாய் தவமிருந்து’ படத்திற்காகப் பாடப்பட்ட ஆட்காட்டி... ஆட்காட்டி... எங்கே முட்டையிட்ட..." என்ற பாடலின் மூலம் திரையிசை உலகில் ஒரு பாடகராக அறியப்பட்டவர் மக்கள்…
Total
16
Share