நடிகர் கமல் நடிப்பில் பரீட்சார்த்தம் செய்வதில் ஆர்வம் உள்ளவர். அதன்படி, 1980 ஆம் ஆண்டு பெரிய முயற்சியில் இறங்கிய அவர் தெலுங்கில் புஷ்பக் என்ற படத்தில் நடித்தார்.
குரல் ஏதும் இல்லாமல் அசைவுகளை மட்டுமே வைத்து கமல் படம் முழுவதும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படம் 1987 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வெளியானது.
35 ஆண்டுகள் நிறைவு செய்யும் பேசும் படம் குறித்து தமது நினைவுகளையும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் குறித்தும் கமல் ட்விட்டரில் நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டரில் கமல் வாழ்த்து
அதில், “இன்றைக்கும் இளைஞராக இருக்கும் சிறந்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவுடன் பணியாற்றியதை மறக்க முடியாது.
எங்கள் புஷ்பக் முயற்சிக்கு 35 வயதாகிறது. ஐயா, கலையை வயதாகாமல் வைத்திருக்க வேண்டும். உங்கள் சிரிப்பு எனக்குப் பிடித்த இசைகளில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலின் பதிவைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்த அமலாவும் பதில் அளித்து ரீட்வீட் செய்துள்ளார்.
தேசிய திரைப்பட விருது
அதில், “புஷ்பக் படத்தின் அனுபவங்கள் என்றும் நினைவில் நிற்பவை. இந்த தருணத்தில் எங்களை நினைவுகூர்ந்த கமலுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
பணக்கார இளைஞனாக நடிக்கும் வேலையில்லாத இளைஞனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், டினு ஆனந்த், சமீபர் காக்கர் மற்றும் ஃபரிதா ஜலால் உள்ளிட்ட இந்தி நடிகர்களும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்த புஷ்பேக் தேசிய திரைப்பட விருதை வென்றது.
-எம். மோகன்