புஷ்பா படத்தில் இடம்பெற்ற `சாமி, சாமி’ பாடல் ரஷ்யாவிலும் பிரபலமாகியுள்ளது. ஒரு குடும்பத்தினர் அந்தப் பாடலுக்கு நடனமாடும் காணொலி காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது. இதையடுத்து, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
பான் இந்தியா படம்
வசூலில் சாதனை படைத்த இந்தப் படம் உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் வரும் 8ஆம் தேதி புஷ்பா படம் திரையிடப்படுகிறது.

அதற்கு முன்பாகவே படத்தில் இடம்பெற்றுள்ள `சாமி, சாமி’ பாடல் பிரபலமாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு ஒரு குடும்பத்தினர் அற்புதமாக நடனமாடும் வீடியோ வைரலாகி உள்ளது.
கவனம் ஈர்க்கும் பாடல்கள்
இதனிடையே, புஷ்பா படத்தை விளம்பரப்படுத்த மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்துப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பகிர்வில், ரஷ்ய மொழியில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கொண்டாடும் ரசிகர்கள்
இந்தப் படத்தை அடுத்ததாக தாய்லாந்திலும் அந்நாட்டு மொழியில் திரையிடப் படக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-எம். மோகன்