பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூலைக் கடந்து பீடுநடை போடுகிறது.
கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை. இதன் காரணமாக, வசூலில் விக்ரம் படத்துக்கு அடுத்த இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது.
தொடரும் வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. எனினும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் 2.0 ரூ. 22 கோடி மட்டுமே வசூலித்தது. ஆனால் பொன்னியின் செல்வன் ரூ. 170 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகம் – பணி தீவிரம்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2ஆம் பாகத்திற்காக சில காட்சிகள் மீண்டும் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன.
-எம். மோகன்