12 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த நவ்தீப்

navdeep-who-met-ajith-after-12-years
[speaker]

பிரபல நடிகரான நவ்தீப், 12 ஆண்டுகளுக்குப் பிறகு `தல’ அஜித்தை சந்தித்த தருணத்தை மெய்சிலிர்த்து நினைவுகூர்ந்துள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பைக் ரேஸில் அஜித்துடன் நவ்தீப்பும் கலந்துகொண்டார். அப்போது இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து தமது இதயப்பூர்வமான நிகழ்வை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நவ்தீப். அதோடு, அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அஜித் ஓர் அற்புதமான மனிதர் :

அந்தப் பதிவில், `தூய்மையான அன்பு கொண்ட நபர்.ஹாய்’ என்று ஒலிக்கும் அவரது குரல் பல நாள் சந்திப்புக்குப் பிறகும் மாறாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தியது. அவரது எளிமை மற்றும் நுண்ணறி இயல்பு ஒரு பேரின்பம். உண்மையிலேயே அஜித் ஓர் அற்புதமான மனிதர்.

navdeep-who-met-ajith-after-12-years

அவரை ‘தல’ என்று அழைப்பதற்கு இதுதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.அஜித் மீது நவ்தீப் அன்பை வெளிப்படுத்திப் படத்தை வெளியிட்டிருப்பது சமூகஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நவ்தீப் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்குப் படங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நவ்தீப், சன்னி லியோன் நடிக்கும் `வீரமாதேவி’ என்ற தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-எம்.மோகன்

Related Posts
golden-globes-2021-winners-list
Read More

கோல்டன் குளோப் விருது விழா! – புற்றுநோயால் மறைந்த நடிகருக்கு விருது

அமெரிக்கத் திரைத்துறையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருதுகள். ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேசன் என்ற சார்பற்ற ஊடக அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள்…
maddy-completes-his-coconut-project-in-palani
Read More

பழனியில் தென்னந்தோப்பு.. மொட்டை மாடியில் விவசாயம் – நடிகர் மாதவன் உற்சாகம்!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் தற்போது இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பி வருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், நடிகர் கிஷோர் உள்ளிட்டோர் விவசாயத்தில் ஈடுபட்டு…
soumitra-chatterjee-the-poet-and-the-activist-behind-the-actor
Read More

வங்க சினிமாவின் மன்னாதி மன்னன் சவ்மித்ர சாட்டர்ஜி ! – மறக்க முடியுமா?

சவ்மித்ர சாட்டர்ஜி மேற்கு வங்கத்தின் பல அடையாளங்களில் ஒருவர். நடிகராக, கவிஞராக, ஓவியராக, இயக்குநராக, சமூகப் போராளியாக உழைத்துக் கொண்டிருந்தவர். சத்யஜித்ரேயின் 14 படங்களில்…
why-do-you-like-bharti-from-madan-karki-to- karthik-netta
Read More

பாரதியை ஏன் பிடிக்கும்? – மதன் கார்க்கி டு கார்த்திக் நேத்தா வரை

சுப்பிரமணிய பாரதியார் எங்கும் நிறைந்திருக்கிறார். கலை முதல் கவிதை வரையிலும், இசை முதல் திரையுலகம் வரையிலும் நிறைந்திருக்கிறார். தமிழர்களால் என்றென்றும் போற்றப்படும் மகா கவிஞனின்…
Total
18
Share