“நாயை தத்தெடுங்கள்” – நடிகை கனிகா உற்சாகம்

adopt-a-dog-actress-kanika-excited
[speaker]

நாய்களை வளர்க்குமாறு தன் ரசிகர்களுக்கு ஆலோசனை கூறி, தான் வளர்க்கும் நாயுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கனிகா.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டது. நாய்களுடன் நாம் சிறந்த பிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள நாய் பிரியர்கள், தங்கள் நாய்களுடன் இணைந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில், நடிகை கனிகா தமது செல்ல நாய் மாக்கியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டதோடு, நாயை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவு :

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச நாய்கள் தினம் என்பதைக் கேள்விப்பட்டேன். முடிந்தால் தயவு செய்து ஒரு நாயை வளருங்கள். வீட்டில் வளர்த்து அன்பு செலுத்துங்கள். அதனை ஹீரோவாக்குங்கள். என்னை நம்புங்கள்… நாய்களிடம் கிடைக்கும் அன்பைப் போல், வேறெங்கும் காணமுடியாது. மாக்கியின் அம்மா என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

adopt-a-dog-actress-kanika-excited

கொரோனா பொது முடக்கத்தின்போது எனக்கு எல்லாமே மாக்கிதான். நாய்களை வளர்ப்பது பெரிய பொறுப்பான பணிதான். அதன்மூலம் பெரும் மகிழ்வும் கிடைக்கும். இந்த 4 கால்கள் கொண்ட ஜீவனை கண்டுபிடித்து வளருங்கள்” என்று தன் ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

`ப்ரோ டேடி’ :

கனிகா தற்போது தெலங்கானாவில் உள்ளார். `ப்ரோ டேடி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருப்பதோடு, நடித்தும் உள்ளார். இந்தப் படத்தில் மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி மற்றும் சவுபின் ஷாஹீர் ஆகியோரும் நடித்துள்ளனர். பிருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படம் இது.

adopt-a-dog-actress-kanika-excited

ப்ரோ டேடி படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிகா, “பிருத்விராஜ் பல வேடங்களில் நடித்துப் பார்த்திருக்கிறேன். அவர் ரசித்து நடிப்பார். தற்போது அவர் முற்றிலும் இயக்குநராக மாறியிருக்கிறார். ஒரு நடிகருக்கு இது அற்புதமான அனுபவம். உங்களுக்கும் உங்கள் உழைப்புக்கும் நான் எப்போதும் ரசிகை” என்று குறிப்பிட்டுள்ளார்.

-எம்.மோகன்

Related Posts
pattukoru-pulavan-bharathi-niranjan-bharathi-interview
Read More

“பாட்டுக்கொரு புலவன் பாரதியின் எள்ளுப்பேரன் நான்” – நிரஞ்சன் பாரதி பேட்டி

தமிழ்த் திரையுலகின் பாடலாசிரியர், ஊடகவியலாளர், மேடைப் பேச்சாளர், மென்பொறியாளர், இயற்கை ஆர்வலர் என பன்முகத்திறமை வாய்ந்தவர் நிரஞ்சன் பாரதி. இவர் தமிழ் எழுத்து துறையில்…
the-lively-experience-of-actor-jayaram-machali- tiger-who-amazed-the-world
Read More

உலகை வியக்க வைத்த `மச்சலி’ புலி – நடிகர் ஜெயராமின் நேரடி அனுபவம்

நடிகர் ஜெயராமுக்கு பயணம் என்றால் கொள்ளைப் பிரியம். குறிப்பாக சாகசப் பயணங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதுபோன்ற இடங்களுக்கு குடும்பத்தாரை அழைத்துச் செல்வதற்கு முன்னுரிமை…
kannada-actor-arjun-gowda-turns-ambulance-driver-for-covid-19
Read More

கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய நடிகர்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகளையே புரட்டிப் போட்டிருக்கு. இந்தியாவுல தொற்றோட பாதிப்பு உச்சத்தை நோக்கி அதிகரிச்சுட்டே இருக்கு. வடமாநிலங்களில் போதிய மருத்துவ…
international-award-winning-mahamuni-actress- mahima-nambiar
Read More

சர்வதேச விருது வென்ற மகாமுனி நடிகை மஹிமா நம்பியார்

பிரபல நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை…
Total
1
Share