பாசக்கார நாய்க்கு கடிதம் எழுதிய நடிகை கீர்த்தி சுரேஷ்

actress-keerthi-suresh-writes-a-letter-to-a-cook- dog
[speaker]

தமது செல்லமான நாய் நிக்கியுடன் சமீபகாலமாக ஒன்றிப் போயிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நிக்கியின் அசைவுகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தமது செல்ல நாயான நிக்கியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்ஸ்டாகிராமில் உருக்கமான கடிதத்தை எழுதி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “என் பேபி பையனுக்கு 3 வயது தொடங்குகிறது. நாயை வளர்த்தால், அது நமக்கு நிறைய தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதான். கடந்த 3 ஆண்டுகளில் என் வாழ்க்கையில் நிம்மி எனக்கு நிறையவே தந்திருக்கிறது. உன் சிறிய இதயத்தில் நான் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அன்பு வைத்திருக்கிறேன். யாராக இருந்தாலும் உன் வசீகரத்தில் மயங்கிவிடுவார்கள்.

பிறந்தநாளில் வாழ்த்து :

நீ பிறந்து 3 ஆண்டுகள் ஆவதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உன்னை முதல் முதல் குட்டியாகப் பார்த்தேனே, என்னைப் பொறுத்தவரை நீ அதே குட்டிதான். என் வாழ்க்கை முழுவதும் நீ நிறைந்து விட்டாய். இதில் இருள் சூழ்ந்த நாளை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

actress-keerthi-suresh-writes-a-letter-to-a-cook- dog

நீ என் மீது இவ்வளவு அன்பு செலுத்துவாய் என்பதை நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை. ஆச்சரியமான இந்த அன்பை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்பே நிக்கி நான் உன்னை நேசிக்கிறேன், இந்த பிறந்தநாளில் உன்னை வாழ்த்துகிறேன். உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் விருந்து வைத்துக் கொண்டாடி

அரவணைப்புடன் அன்பைப் பொழிவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.கீர்த்தி சுரேஷ் நடித்து கடைசியாக பென்குயின் மற்றும் ரங் தே ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்தே’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

-எம். மோகன்

Related Posts
kangana-ranaut-as-former-prime-minister-indira-gandhi
Read More

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரனாவத்!

புதிய திரைப்படம் ஒன்றில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இது குறித்து கங்கனா ரனாவத்…
university-of-mysore-to-set-up-sp-balasubrahmanyam-study-chair-in-legends
Read More

எஸ்.பி.பி பற்றி ஆய்வுக்கு மைசூர் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை!

இந்தியத் திரைத்துறையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குத் தனியான அடையாளம் உண்டு. அந்தளவுக்கு அழியாத புகழுக்குச் சொந்தக்காரர் அவர். இந்தளவுக்கு ஒரு துறைக்குப் பெருமை சேர்த்தவர்கள் மிகமிகக்…
it-is-a-different-experience-for-us-suhasini-interview-on-the-song-thirupavai
Read More

“எங்களுக்கு இது வித்தியாசமான அனுபவம்” – திருப்பாவை பாடல் குறித்து சுஹாசினி பேட்டி

மார்கழி என்றாலே பனியும் இசையும் நினைவுக்கு வரும். அதிகாலையில் கோயில்களில் திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலிக்கத் தொடங்கும். அதுவொரு லேசான குளிரும் குறை பனியும் கலந்த…
sonu-sood-honoured-with-the-week-man-of-the-year
Read More

2020ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் : விருதுபெற்ற சோனு சூட்..!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சேவை செய்ததற்காக 2020ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற விருதை நடிகர் சோனு சூட்டுக்கு `தி வீக்’…
Total
7
Share