ஆன்லைனில் வியாபாரம் – 2.5 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இளம்பெண்

online-business-the-young-woman-who-created- the-2.5-crore-company
[speaker]

ஜெய்பூரைச் சேர்ந்தவர் சவுமியா. இளம் வயதில் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வந்துகொண்டிருந்தார். புதுமையான தொழிலைக் கையிலெடுத்து பரிசுப் பொருட்கள் விற்பனை துறையில் கொடிகட்டி பறந்துவருகிறார். தொழில் ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாற்றிக்காட்டியிருக்கிறார்.

இவர் வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, அவரின் எண்ணம் சுயதொழில் மீதே இருந்து வந்தது. சொந்த ஊரில் இளங்கலைப் பட்டத்தை முடித்த அவர் மேல் படிப்பிற்காக லண்டனுக்குச் சென்றார். அங்கு படிப்பை முடித்த சவுமியாவிற்குச் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அப்போது அவரது வாழ்க்கையை மாற்றிய அந்த நிகழ்வு நடந்தது.

50 ஆயிரம் ரூபாய் முதலீடு :

நண்பர் ஒருவருக்கு பரிசு வாங்க சென்றிருந்தபோது எதிர்பார்த்தபடியான பரிசு கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒருவர் எதிர்பார்க்கும்படியான பரிசுப் பொருட்களை ஆன்லைன் வழியாக செய்து கொடுக்கும் புதுமையான தொழில் யோசனை அவருக்குள் எழுந்தது. அதன்படி, சேமிப்புத் தொகை 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் `Confetti Gifts’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது.

online-business-the-young-woman-who-created- the-2.5-crore-company

வாடிக்கையாளர்களின் விரும்பத்திற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் மிகவும் குறுகிய காலத்திலேயே சவுமியாவின் பரிசுப் பொருட்கள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெற்றன. இன்று 200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கைவசம் உள்ளன. இவற்றை தேவைப்படுவர்கள் ஆன்லைன் வழியாக வாங்கிக் கொள்ளலாம். ஜெய்பூர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆர்டர்கள் வருகின்றன.

26 பேர் அங்கம் :

மேலும், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. தற்போது சவுமியாவின் குழுவில் 26 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இளம் குழுவினரின் புதுமையான பரிசுப் பொருட்களுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது.

online-business-the-young-woman-who-created- the-2.5-crore-company

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்றைக்கு இரண்டரை கோடி மதிப்பு கொண்டதாக மாற்றிக்காட்டியிருக்கிறார் 24 வயதான தொழில்முனைவோர் சவுமியா.

-கோ.கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
where-even-drains-smell-of-roses-inside-indias-perfumery-kannauj-on-world-fragrance-day
Read More

வாசனைத் திரவியங்களின் தலைநகர் கன்னோஜ்! – மூலப்பொருட்களின் விலை 25 லட்சம்

வாசனைத் திரவியம் என்றதும் பல வகையான பாட்டிலில் அடைக்கப்பட்ட சென்ட் பாட்டில்கள் நமக்கு ஞாபகம் வரலாம். ஆனால், காலம் காலமாக இருக்கும் அத்தர் பற்றி…
sandalwood-soap-integral-to-most-kannadigas-identity-traces-its-origins
Read More

சந்தனமர தடையால் தயாரான சோப்! – போர்க்களத்தில் உருவான மைசூர் சாண்டல்

இந்த முட்டை வடிவ, பிஸ்கட் நிறத்தில் உள்ள மைசூல் சாண்டல் சோப்தான் முதன்முதலில் இந்தியத் தயாரிப்பின் பெருமையை உலகளவில் கொண்டுசென்றது. அதன் சந்தன மணம்…
33-year-old-earns-226000-dollars
Read More

1.69 கோடி வருமானம்! – கொரோனாவில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கப் பெண் !

உலக நாடுகள் பெரும்பாலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சற்று மீண்டு எழத் தொடங்கியுள்ளன. எனினும் பல நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. இந்தச்…
rukmini-who-studied-from-london-started-healthy-cookies
Read More

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து! – மாதம் 1 லட்சம் வணிகம் பார்க்கும் வழக்குரைஞர்

தன் குழந்தைக்கு சத்தான உணவுகளை சமைத்துக் கொடுத்த பெண், ஒரு காலகட்டத்தில் குழந்தைகளுக்கான சத்துணவு தயாரிப்பிலும் இறங்கி வெற்றி பெற்றுள்ளார். இன்றைக்கு மாதந்தோறும் ரூ.1…
Total
1
Share