மும்பையின் அடையாளமாக மாறிய `காளிதாஸ் விஷ்ராம்’ கடை – 123 ஆண்டுகள் பழசு

kalidas-vishram-shop,-which-has-become-a- symbol-of-mumbai-123-years-of-fruit
[speaker]

மும்பை பழைமையான நகரம் மட்டுமல்ல… பல வகை கலாச்சாரம், பண்பாட்டை உள்ளடக்கியது. மும்பைக்குப் புகழ் சேர்க்கப் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பாந்த்ராவில் 123 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைமையான காளிதாஸ் விஷ்ராம் என்ற மளிகைக் கடை

மும்பை நகரின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிடித்தமான மளிகைக்கடையாகவும் இது விளங்குகிறது.கடந்த 1898 ஆம் ஆண்டு காளிதாஸ் விஷ்ராம் என்பவர்தான் தன் பெயரிலேயே இந்த மளிகைக் கடையைத் தொடங்கினார்.

மாட்டுவண்டியில் விற்பனை :

இது குறித்து 56 வயதான அவரது கொள்ளுப்பேரன் ஜித்தேஷ் தாக்கர், “பாந்த்ரா பகுதியை சிறு கிராமமாகவும் பெரிய நகரமாகவும் எங்கள் மளிகைக் கடை பார்த்திருக்கிறது. என் கொள்ளு தாத்தாவுக்குப் பிறகு இந்த மளிகைக் கடையை என் தாத்தா நடத்தியிருக்கிறார்.

அப்படியே என் தந்தை கைக்கு மாறி தற்போது என் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகவே நான் இந்த மளிகைக் கடையை நடத்தி வருகிறேன்.உலர்ந்த பழங்கள், தானியங்கள், இனிப்புகள், மசாலாப் பொருட்களுக்கு எங்கள் கடை பிரபலமாக இருந்திருக்கிறது.

kalidas-vishram-shop,-which-has-become-a- symbol-of-mumbai-123-years-of-fruit

கடந்த 123 ஆண்டுகளில் இந்த மளிகைக் கடையின் கட்டடமும் உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் எங்கள் பாட்டி பரிந்துரைக்கும் பொருட்களை மட்டுமே விற்றிருக்கிறார்கள். அதன்பிறகு ஆயுர்வேத மருந்துக் கடையும் கிளீனிக்கும் கட்டடத்தின் மறுபகுதியில் தொடங்கியுள்ளோம்.

பாந்த்ராவிலிருந்து ஜுஹு வரை மாட்டு வண்டியில் மளிகைப் பொருட்களை ஏற்றிச் சென்று என் தாத்தா விற்பனை செய்திருக்கிறார். உண்மையில் அவர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்பைத்தான் நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

300 முதல் 400 வாடிக்கையாளர்கள் :

எங்கள் தலைமுறையில்தான் கடையை நவீனப்படுத்தினோம். இப்போது எங்கள் பேரன், பேத்திகளும் கடைக்கு வந்து பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். பாந்த்ரா பகுதியிலிருந்து மும்பையின் வேறு பகுதிக்குச் சென்றவர்கள் கூட, பண்டிகைக் காலங்களில் எங்கள் கடைக்கு வந்து இனிப்புகளை வாங்கிச் செல்கின்றனர்.

kalidas-vishram-shop,-which-has-become-a- symbol-of-mumbai-123-years-of-fruit

காலத்துக்கு ஏற்றவாறு விற்கும் பொருட்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆரம்பத்தில் மளிகைக் கடையாகத் தொடங்கினாலும், இன்றைக்கு உலர்ந்த பழங்கள் மற்றும் மசாலா பொருட்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

தினமும் 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் வரை கடைக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகள் எங்கள் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் பழைய வாடிக்கையாளர்கள் என்றும், அன்றிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரியான தரத்தைப் பராமரிப்பதாகவும் அவர்கள் கூறும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கும்” என்றார்.

-எம்.மோகன்

Related Posts
quality-taste-mdr-restaurant-has-been-on-a- successful-journey-for-97-years
Read More

தரம், சுவை – 97 ஆண்டுகளாக வெற்றிப் பயணத்தை தொடரும் `எம்டிஆர்’ உணவகம்

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, பெங்களூருவில் மாவல்லி டிபன் ரூம்ஸ் (எம்டிஆர்) தொடங்கப்பட்டது. இன்றைக்கு நாடு முழுவதும் எம்டிஆரின் கிளைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.…
kulhad-wala-pizza-in-surat-is-super-cheesy-and-looks-totally-instagrammazing
Read More

சூரத்தைக் கலக்கும் சுவையான குல்ஹாத் வாலா பீட்சா

பீட்சா தான் உங்கள் வாழ்க்கை என்றால், வாய்ப்பு கிடைக்கும் போது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ‘ தி கோன் சாட்’ உணவகத்துக்குச் செல்லுங்கள்.…
6-thousand-rupees-to-run-home-month-job-not-satisfied-started-my-online-business-today-annual-revenue-of-30-crores
Read More

முதலீடுயின்றி தொடங்கிய காலணி வியாபாரம் : ஆண்டு வர்த்தகம் 30 கோடி ரூபாய்!

வடமாநிலத்தில் முதலீடு இன்றி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் காலணி வியாபாரத்தைத் தொடங்கியவர் இவர். இன்றைக்கு 25 பேர் கொண்ட குழுவினருடன் சேர்ந்து ஆண்டிற்கு 30 கோடி…
shopkeeper-brush-up-his-painting-skills-draws-over-150-sketches-sitting-in-shop
Read More

ஊரடங்கால் ஓவியரான கடைக்காரர் : 150க்கும் மேல் ஓவியங்களை வரைந்து அசத்தல்

ஊரடங்கால் குறைந்தது வாடிக்கையாளர்களின் வருகை. அந்தச் சமயம் கடையிலிருந்த நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திக் கொண்டார் இந்தக் கடைக்காரர். கடையிலிருந்த படியே 150க்கும் மேற்பட்ட ஓவியங்களை…
Total
14
Share