95 ஆண்டுகளாக டெல்லியில் கோலோச்சும் `வேங்கர் பேக்கரி’

colossus-wenger-bakery-in-delhi-for-95-years
[speaker]

95 ஆண்டுகளாக டெல்லி மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதே சுவை… அதே தரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது வேங்கர் பேக்கரி.

சுவிஸ் நாட்டின் வேங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கன்னாட் பிளேசில் தொடங்கிய இந்த பேக்கரி, சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் கேக்கின் அதே சுவையுடன் தயாரிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் வந்து செல்லும் பிரபலமான பேக்கரியாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அடுல் டான்டன் குடும்பத்தினர் வேங்கர் பேக்கரியை வாங்கினர். அதன் பிறகு 3 தலைமுறையாக, டெல்லியின் சிறந்த பேக்கரியாக நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான இந்திய இனிப்பு வகைகள் :

வேங்கர் பேக்கரியின் மேலாளர் கமலேஷ்வர் பிரசாத், “இப்போது போல் பேக்கரியில் பல வகை உணவுப் பொருட்கள் கிடைக்காது. பல நாடுகளில் புதிதாக பேக்கரி உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும், டான்டனும் இங்கு புதிதாக அறிமுகம் செய்வார். ஆரம்பத்தில் குலாப் ஜாமுன் உள்ளிட்ட வித்தியாசமான இந்திய இனிப்பு வகைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டன.

colossus-wenger-bakery-in-delhi-for-95-years

பக்கோடாவை அறிமுகப்படுத்திய முதல் பேக்கரி வேங்கர் தான். இன்றைக்கு டெல்லியில் பல பேக்கரிகள் வந்துவிட்டன. எனினும், வேங்கர் பேக்கரி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தரத்துக்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம். வாடிக்கையாளர்களுக்குத் தருவதற்கு முன்பு, அனைத்து பேக்கரி உணவுகளையும் நாங்கள் பரிசோதிப்போம்.

100 வகையான உணவுப் பொருட்கள் :

தற்போது வேங்கர் பேக்கரியில் 100 வகையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. தற்போது இங்கு விற்பனையாகும் ஷமி கெபாப்பை விரும்பாதோர் யாருமே இருக்க மாட்டார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஷமி கெபாப் அனுப்பச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

colossus-wenger-bakery-in-delhi-for-95-years

கொரோனா காலத்தில் விற்பனை குறைந்தாலும், நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் சென்றனர். நீண்ட வரிசை நிற்பதைப் பார்த்து, இலவசமாக கேக், பிரெட் தருகிறார்கள் என்று சிலர் நினைத்துவிட்டார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது” என்றார்.

25 வகையான சுவைகளில் கேக் :

இன்றைக்கு 5 பேருக்கு அதிகமாக உள்ளே அமர்ந்து உண்ணுவதற்கு வேங்கர் பேக்கரியில் அனுமதிப்பதில்லை. இங்கு 25 வகையான சுவைகளில் கேக் கிடைக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு மாடிகள் கொண்டதாக இந்த பேக்கரி இருந்தது.

colossus-wenger-bakery-in-delhi-for-95-years

முதல் தளத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளும், இந்திய செல்வந்தர்களும் அமர்ந்து சாப்பிட்டனர். அதன்பிறகு திருமணம் மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்கு முதல் மாடி வாடகைக்கு விடப்பட்டது. வேங்கர் பேக்கரியை டான்டன் வாங்கிய பிறகு, இரண்டாவது மாடியை அகற்றிவிட்டார்.

-எம்.மோகன்

Related Posts
where-even-drains-smell-of-roses-inside-indias-perfumery-kannauj-on-world-fragrance-day
Read More

வாசனைத் திரவியங்களின் தலைநகர் கன்னோஜ்! – மூலப்பொருட்களின் விலை 25 லட்சம்

வாசனைத் திரவியம் என்றதும் பல வகையான பாட்டிலில் அடைக்கப்பட்ட சென்ட் பாட்டில்கள் நமக்கு ஞாபகம் வரலாம். ஆனால், காலம் காலமாக இருக்கும் அத்தர் பற்றி…
zomato-to-get-more-women-delivery-partners
Read More

உணவு டெலிவரி செய்ய 10% கூடுதலாக பெண்களை நியமிக்கும் ஜொமோட்டோ

இந்த ஆண்டின் இறுதிக்குள் உணவு டெலிவரி செய்வதற்குக் கூடுதலாக 10 சதவிகிதப் பெண்களை நியமிக்க ஜொமோட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. உணவு டெலிவரிக்கு ஆண்கள்…
reliance-industries-to-build-worlds-largest-zoo-in-gujarats-jamnagar
Read More

300 ஏக்கரில் முகேஷ் அம்பானி அமைக்கும் உலகின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை

குஜராத்தின் ஜாம்நகரில் 300 ஏக்கரில், உலகின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலையை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது. இதற்காக மத்திய, மாநில…
indias-first-ever-centralised-ac-railway-terminal-to-be-inaugurated-this-month
Read More

முழுக்க குளிரூட்டப்பட்ட பெங்களூரு முதல் ரயில் முனையம்

முழுக்க, முழுக்க குளிரூட்டப்பட்ட முதல் பெங்களூரு ரயில் முனையம் இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. பெங்களூருவின் மூன்றாவது ரயில் முனையம் பையப்பனஹள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. கேம்பகவுடா சர்வதேச…
Total
1
Share