எங்களை பற்றி

[speaker]

புதிய கனவுகளுடன் பிறக்க இருக்கும் குழந்தை “ஓபன் ஹாரிசான் “.

தமிழில் தனிப் பாதையை உருவாக்கும் முயற்சியாக இதனைத் தொடங்குகிறோம்…

இதன் மூலம் வெறும் செய்திகளை வழங்குவது மட்டுமல்ல எங்கள் பணி

அதனைத் தாண்டி தரமான வாசிப்பைத் தூண்டுவதே எங்கள் இலக்கு.

நேர்மறையான எண்ணங்களையே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் விதைக்க விருப்பம்.

செய்தியின் மூலம் படிப்போர் சிறிதேனும் அறிவு வெளிச்சத்தைப் பெற வேண்டும். ஆகவே படிப்பவர் உள்ளத்தையும் உள் அன்பையும் கொள்ளை கொள்ள விரும்புகிறோம்.

நிச்சயம் எங்களின் கட்டுரைகள் மூலம் ஒவ்வொரு தனி மனிதரையும் விரல் நுனி அளவாவது உயர்த்திட முயலுவோம்.

பக்கம் பக்கமாக எழுதவும் மாட்டோம். பக்கச் சார்புடன் இருக்கவும் மாட்டோம்.

பரபரப்புக்காகச் செய்தி என்ற விதியை மாற்றி, நற்சிந்தனை என்ற திசையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஊடக அறம் மாறாமல், தடம் விலகாமல் செய்திகளைத் தருவதற்கே இந்தத் தளம் உதயமாகிறது.

அன்புடன்,
ஓபன் ஹாரிசான்